தன்னிடம் இருக்கும் பணத்தை பல பேருக்கு மொத்தமாக கொடுத்து உதவி செய்துவரும் கேபிஒய் பலவிற்கே தாடி பாலாஜி இப்படியொரு உதவி செய்துள்ளாரா என்பது ரசிகர்களை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
தாடி பாலாஜி நடிகர் விஜய்யோடு பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். அவர் தனது மனைவி நித்யாவுடன் பிக் பாஸ் சீசன் 2 ல் கலந்து கொண்டார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையை பிக் பாஸ் வீட்டில் கமல்ஹாசன் சரி செய்ய நினைத்தாலும், அது பெரிய பிரச்சனையாகவே மாறிவிட்டது. தாடி பாலாஜி குடிகாரர், மோசமானவர் என்கிற பிம்பம் மட்டுமே இருந்தது.இந்த நிலையில், அவருக்கு இருக்ககூடிய நல்ல மனதை பற்றி கேபிஒய் பாலா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
KPY Bala reveals how Thaadi Balaji helped him in earlier days
முன்னணி நடிகர்களுக்கு இல்லாத அளவிற்கு பெரிய மனதுடன் கேபிஒய் பாலா மக்களுக்கு உதவி செய்து வருவது மக்களால் பாராட்டப்பட்டாலும் சிலர் பாலா எதோ ஃபிராடு செய்கிறார் என்பதை போலவே விமர்சித்து வருகிறார்கள். மேலும், அவருக்கு பின்னால் அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும் கூறுகின்றனர். அவரிடம் சமீபத்தில் செய்தியாளர்கள் நீங்கள் எந்த கட்சியில் இருக்கிறீர்கள் என்ரு கேட்டதற்கு நான் தெருக்கட்சியில்தான் இருக்கேன் என்று கூறி மூக்கை உடைத்து விட்டார். இங்கே நல்லது செய்தாலும் அதை ட்ரோல் செய்பவர்கள்தான் அதிகம் என்பதாலே பல நடிகர்கள் அமைதி காத்து வருகின்றனர் என்று கூறுகின்றனர்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஆம்புலன்ஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தான் சேர்த்து வைத்திருந்த பணத்தினை செலவு செய்து உதவி செய்வது என்று பெரிய மனம் கொண்டவராக கேபிஒய் பாலா அதாவது, குட்டி ஹீரோவாக மாறிவரும் நிலையில், அவருக்கே தாடி பாலாஜி உதவி செய்துள்ளதாக பாலவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
ஆரம்பகாலங்களில் போட்டுக்கொள்ள நல்ல துணி இல்லாமல் இருந்த எனக்கு அவருடைய நண்பர் ஒருவரை போய் பார்க்க தாடி பாலாஜி அண்ணா சொன்னார். அவரை போய் பார்த்தேன் அவர் ஒரு பை நிறைய புதிய துணிகளை தாடி பாலாஜி கொடுக்க சொன்னதாக சொல்லி என்னிடம் கொடுத்தார். விஜய் டிவியில் இருக்கும் போது தாடி பாலாஜி அண்ணா எனக்கு செய்த உதவி தான் நமக்கும் காசு பணம் வந்தால் சேர்த்துக்கிட்டே போகக்கூடாது என்றும் நல்ல மனிதர்களை சம்பாதித்தால் நல்ல இருக்கலாம்.என்று நான் என்னால் முடிந்த உதவிகளை செய்துவருகிறேன் என வெளிப்படையாக கேபிஒய் பாலா பேசியுள்ளார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
SUBSCRIBE V TAMIL LIFESTYLE OFFICIAL CHANNEL | CLICK HERE |
---|---|
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | வி தமிழ் செய்தி |
சமையல் குறிப்பு சம்மந்தமான அனைத்து பதிவுகளையும் இங்கு காணலாம் –> | ஆனந்தி சமையல் |