Friday, July 11, 2025
Homeஆன்மீகம்திருமணம் நடக்க சித்தர் சொல்லிய வழிபாடு

திருமணம் நடக்க சித்தர் சொல்லிய வழிபாடு

Date:

- Advertisement -

அந்த காலத்திலேயே மனித இனத்திற்கு என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதைகுறித்தும், அதற்கு உண்டான பரிகாரங்களை குறித்தும் சித்தர்கள் சிந்தித்து உள்ளார்கள். இந்த கலியுகத்தில் பல பேருக்கு ஜாதகத்தில் உள்ள தோஷம் காரணமாக, திருமணம் தள்ளிக் கொண்டேபோகிறது.

உங்களுக்கு எத்தனை வயதை கடந்திருந்தாலும் சரி, திருமணம் நடக்க வேண்டும் என்று முயற்சி மேற்கொண்டிருக்கிறீர்களா, நல்ல மணமகன், நல்ல மணமகள் அமையவில்லையா. உங்களுக்கு உடனே திருமணம் நடக்க இந்த எளிமையான பரிகாரம் கை கொடுக்கும். இந்த பரிகாரத்தை தெரிந்து கொள்வதற்கு முன்னால், இந்த கொங்கணர் சித்தர் யார் என்று சுருக்கமாக ஓரிரு வரிகளில் தெரிந்து கொள்வோம். கேரளத்தில் கொங்கண தேசத்தில் பிறந்ததால் இவரை கொங்கண சித்தர் என்று கூறுகின்றோம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

konganar sidder pariharam
konganar sidder pariharam konganar sidder pariharam

இவருடைய உண்மையான பெயர் என்ன என்பது நமக்கு தெரியாது. இவர் கொங்கண சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 18 சித்தர்களில் முக்கியமான சித்தராக கருதப்படுகின்றார். இவருடைய சமாதி திருப்பதியில் உள்ளது. திருப்பதி இன்று புகழ்பெற்ற இடமாக திகழ்வதற்கு இவரும் ஒரு காரணம். இவர் கூறிய பரிகாரத்தை பார்த்து விடுவோம். திருமணம் நடக்க பரிகாரம் உங்களுக்கு திருமணம் உடனே நடக்க வேண்டுமா. நேராக திருப்பதி புறப்பட்டு செல்லுங்கள். அங்கு அலமேலு மங்கையையும், பெருமாளையும் வழிபாடு செய்யுங்கள்.

இதையும் படிங்க : Lemon Satham Easy | சுவையாக எலுமிச்சை சாதம் செய்வது எப்படி ?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

konganar sidder pariharam

திருப்பதியில் விளக்கு ஏற்றுவதற்கு என்று தனியாக ஒரு இடம் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும். அந்த இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும். உங்களுக்கு எத்தனை வயது ஆகிறதோ, அத்தனை மண் அகல் விளக்குகளில்நெய்யோ அல்லது நல்லெண்ணெயோ ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, கொங்கண சித்தரையும், பெருமாளையும் தாயாரையும் மனதார நினைத்துக் கொண்டு, சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு பிறந்த நட்சத்திரம், பிறந்த திதி தெரிந்தால் அந்த நாளில் இந்த விளக்கு ஏற்றுவது சிறப்பு. அப்படி இல்லை என்றால் அமாவாசை, பௌர்ணமி மற்றும் திங்கட்கிழமை, செவ்வாய் கிழமை நாட்களில் இந்த விளக்கை ஏற்றுவது நல்ல பலனை தரும். இந்த வழிபாட்டை முடித்துக் கொண்டு திருப்பதியில் உள்ள கொங்கணர் சித்தர் ஜீவசமாதிக்கு சென்று அந்த இடத்தில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்து கொள்ளுங்கள். கொங்கணர் சித்தரையும் வேண்டிக் கொள்ளுங்கள். நிச்சயமாக உங்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இந்த வழிபாட்டை முடித்துவிட்டு நீங்கள் வீடு திரும்பியதும், உங்களுடைய வீட்டில் குழந்தை பிறந்து இறந்திருந்தாலும் சரி, அல்லது கன்னி பெண்ணாக இருந்து இறந்திருந்தாலும் சரி, யாரேனும் சிறுவயதில் இறந்திருந்தாலோ, சிறுவயதிலேயே யாராவது அகால மரணம் அடைந்திருந்தாலும் சரி, அவர்களை நினைத்து வீட்டில் சின்னதாக ஒரு பூஜை செய்து வழிபாடு செய்யுங்கள். மேல் கூறிய வழிபாட்டை முறைப்படி நம்பிக்கையோடு செய்தாலே திருமணத்தடை விலகி சீக்கிரம் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தை தேவைப்படுபவர்கள் செய்து பலன் பெறுங்கள்.

Read Also : திருவாவடுதுறை ஆதீனத்தில் புத்தக வெளியீட்டு விழா

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories