மட்டன் / சிக்கன் பிரியாணியின் சுவைக்கு இணையாக சைவ பிரியாணியை கொண்டைக்கடலை பயன்படுத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
kondakadalai biryani

Must Watch : த்ரிஷாவின் டாப் பியூட்டி சீக்ரெட் இதுதான்..
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
தேவையான பொருட்கள்
- 2 கப் – கொண்டைக்கடலை
- 1- பட்டை
- 2- லவங்கம்
- 1- பே இலை
- 2- கிராம்பு
- 1- அன்னாசி பூ
- 2- வெங்காயம்
- 3- பச்சைமிளகாய்
- 1 ஸ்பூன் – இஞ்சி, பூண்டு விழுது
- 1கொத்து – கொத்தமல்லி, புதினா
- 1 ஸ்பூன். மிளகாய் பொடி
- 2- தக்காளி
- 1ஸ்பூன் – பிரியாணி மசாலா
- 1 சிட்டிகை – மஞ்சள்
- 1 கப் – தயிர்
- 2 கப் – அரிசி
- 1 கப் – நெய்
- தேவையான அளவு – எண்ணெய், உப்பு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கொண்டைக்கடலையை போட்டு தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற வைக்கவும். இதேபோல அரிசியை சுத்தம் செய்து 30 நிமிடம் ஊறவைத்து பயன்படுத்தவும்.
பிரியாணி செய்வதற்கு முன் பச்சைமிளகாய், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினா இவைகளை நன்கு பொடியாக நறுக்கி தனித்தனியாக ரெடியாக எடுத்து வைக்கவும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
பிரியாணி செய்வதற்கு குக்கர் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் கொஞ்சம் எண்ணெய்யுடன் கிராம்பு, பட்டை, லவங்கம், அன்னாசி பூ, பே இலை, பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
தொடர்ந்து தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்பொடி, பிரியாணி மசாலா, கொத்தமல்லி, புதினா, உப்பு சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
தக்காளி நன்கு மசிந்த நிலையில் அதில் கொண்டைக்கடலை, நெய், தயிர் ஆகியவற்றை சேர்த்து வதக்கி பின் 3 கப் அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
Must Read : சுவையாக ரசம் செய்யக்கூடிய முறை!
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
கொண்டைக்கடலை பிரியாணி தயார்!
தண்ணீர் நன்கு கொதிக்கும் நிலையில் ஊற வைத்துள்ள அரிசியை இதில் போட்டு கிளறி 3 விசில் வர வேகவைத்து இறக்கவும். சுவையான கொண்டைக்கடலை பிரியாணி தயார்.