சத்து நிறைந்த உணவுகள் உடல்ஆரோக்கியத்திற்கு உகந்தது. ஆரோக்கிய உணவுகள் உடல் நலத்தை பாதுகாக்கும். குறிப்பாக சிறுதானிய உணவுகள் சத்து நிறைந்தவை. தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. அந்த வகையில் கேழ்வரகு ஆப்பம் செய்வது பற்றி பார்க்கலாம். கேழ்வரகு உணவுகள் நீரிழிவு நோய்களுக்கு சாப்பிடுவது நல்லது. “ஆப்பம்” அல்லது அப்பம் என்று சொல்லப்படும் இப்பண்டம் இந்தியா மற்றும் இலங்கையில் பிரபலமான ஒரு தோசை வகையை சார்ந்த தென்னிந்தியா உணவாகும். இது அரிசி மாவில், தேங்காய் பால் ஊற்றி செய்யப்படுகின்றது. தென்னிந்தியாவில் இட்லி, தோசை, ஆப்பம் ஆகியவை பிரபலமான காலை உணவுகளாக உள்ளன.
அதிலும் குறிப்பாக ஆப்பம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி உண்ணும் ஒரு உணவாக உள்ளது. இதற்கு காரணமாக இதன் மிருதுவான தன்மை என்றே குறிப்பிடலாம். வழக்கமான இட்லி, தோசையை காட்டிலும் ஆப்பம் என்றால் கொஞ்சம் ஸ்பெஷல் தான். அதுவும் நல்ல கூடை போன்ற வடிவத்துடன் பஞ்சு போல மிருதுவான ஆப்பம் செய்வது ஒரு தனி கலை தான். ஆப்பம் மொத்தம் 4 வகையில் தயாரிக்கப்படுகிறது. அவை வெள்ளையாப்பம், பாலாப்பம், முட்டையாப்பம், இனிப்பு அப்பம் என 4 வகைகளில் தயாரிக்கபடுகிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

வழக்கமாக ஆப்பத்தை பச்சரிசியை கொண்டு தான் செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் காண போகும் ரெசிபியில் கேழ்வரகு சேர்த்து சத்தான ஆப்பம் செய்வது எப்படி என்று பார்க்க போகிறோம். கேழ்வரகு சேர்த்து செய்வதால் இது உடலுக்கு தேவையான சக்தியை அளிக்கிறது. மேலும் கேழ்வரகில் பல்வேறு வகையான ஊட்டசத்துக்கள் அதிகம் காணப்படுவதால், நமது ஆரோக்கியத்திற்கும் உகந்தது. கேழ்வரகு ஆப்பத்தை வீட்டில் சுலபமாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
Equipment for Kelvaragu Appam Recipe in Tamil
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 ஆப்ப கடாய்
தேவையான பொருட்கள்
- 1 1/2 கப் கேழ்வரகு மாவு
- 1/2 கப் பச்சரிசி
- 1/2 கப் இட்லி அரிசி
- 1/2 கப் தேங்காய் துருவல்
- 1/2 கப் வடித்த சாதம்
- 1/4 கப் உளுத்தம் பருப்பு
- உப்பு தேவையான அளவு
- 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
- 1/2 டீஸ்பூன் சோடா உப்பு
நீங்கள் மாங்காய் விரும்பி சாப்பிடுபவர்களா.! அப்போ அதன் தீமைகளை பற்றி தெரிஞ்சிக்காம இருந்தா எப்படி..?
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
செய்முறை
முதலில் அரிசி, உளுந்தை நன்றாக அலசவும். அதை குறைந்தது 6 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஊற வைத்த அரிசி, உளுந்தை ஒரு மிக்ஸியில் போட்டு ஒரு முறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
அதன்பிறகு நாம் எடுத்து வைத்துள்ள சாதம் மற்றும் தேங்காய் துருவலை அதனுடன் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு அதனுடன் உப்பு, சோடா உப்பு, சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். 8 மணி நேரம் வரை மாவு நன்கு புளித்து பொங்கி வரும் வரை அப்படியே வைக்க வேண்டும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
பின் ஒரு பவுளில் கேழ்வரகு மாவு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் இதனை ஆப்ப மாவில் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின் அடுப்பில் ஆப்பச்சட்டியை வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை ஊற்றி, ஒரு முறை வட்ட வடிவில் ஆப்பம் வருவது போல் சுற்றி மூடி போட்டு வேக விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான கேழ்வரகு ஆப்பம் ரெடி.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Nutrition
Serving: 400g | Calories: 150kcal | Carbohydrates: 6.2g | Fat: 3.9g | Sodium: 76mg | Fiber: 5.4g | Vitamin A: 83IU | Vitamin C: 60.4mg | Calcium 49mg |: Potassium: 329mg | Protein: 19g | Iron: 6.5mg
கொண்டைக்கடலை பிரியாணி எப்படி செய்வது தெரியுமா?
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇