ஆடி மாதம் பிறந்தாலே ஆடி வெள்ளி, ஆடிச் செவ்வாய், என்று திருவிழாக்களுக்கு எந்த பஞ்சமும் இருக்காது. ஆடி மாதத்தில் வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமைக்கு இணையாக, ஞாயிற்றுக்கிழமையும் அம்மனுக்கு வழிபாடுகள் ஆரவார திருவிழாக்கள் நடைபெறும். அந்த வகையில் ஆடி ஞாயிறு என்றால் கூழ்வார்த்தல் திருவிழா மிகமிக சிறப்பு. ஆடி ஞாயிற்றுக்கிழமையில் அன்னதானம் செய்தால் உங்கள் குடும்பத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் கர்ம வினைகள் குறையும் என்பதும் ஒரு நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்த ஆடி ஞாயிற்றுக்கிழமையில் நம்முடைய கஷ்டங்கள் நீங்குவதற்கு அம்பாள் சன்னதியில் எப்படி பிரார்த்தனை வைக்க வேண்டும் சுலபமான ஆன்மீகம் சொல்லும் வழிபாட்டை தெரிந்து கொள்வோமா.
kashtam azhinthu poga amman vazhipatu

கஷ்டங்கள் அடியோடு மறைந்து போக அம்மன் வழிபாடு நாளை ஞாயிற்றுக்கிழமை நிறைந்த பௌர்ணமி தினமாக இருக்கிறது. கடைக்கு சென்று 3 எலுமிச்சம் பழங்கள் பேரம் பேசாமல் கரும்புள்ளிகள் இல்லாமல் வாங்கிக் கொள்ளவும். அதை வீட்டிற்கு எடுத்து வந்து தண்ணீரில் கழுவி கொள்ளவும். உங்கள் வீட்டில் பக்கத்தில் உள்ள அம்மன் சன்னதிக்கு நீங்கள் செல்ல வேண்டும். அம்பாளுக்கு வேப்ப இலை, எலுமிச்சம்பழம், பூ, வெற்றிலை பாக்கு, தேங்காய் இப்படி பூஜைக்கு தேவையான அணைத்து பொருட்களையும் கூடவே வாங்கிக் கொள்ளுங்கள்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : நாம் நாள்தோறும் பயன்படுத்தும் பொருட்களை எத்தனை தினங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் தெரியுமா?
அம்மன்சன்னதிக்கு சென்று அம்பாளுக்கு வாங்கிய பொருட்களை அனைத்தையும் கொடுத்து முதலில் உங்களது பெயரைச் சொல்லி அர்ச்சனை பண்ணிக்கொள்ள வேண்டும். உங்க குடும்ப உறுப்பினர்கள் அனைவரது பெயரையும் சொல்லி அர்ச்சனை பண்ணிக்கொள்ளுங்கள். அந்த அர்ச்சனை கூடையிலேயே 3 எலுமிச்சம் பழத்தை அம்பாளின் பாதத்தில் வைக்க சொல்லி அதை வாங்கிக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக அம்மன் சன்னதியில் திரிசூலம் இருக்கும் இடத்திற்கு வந்து அமர வேண்டும். திரிசூலம் நேர் எதிராக உட்காரக்கூடாது என்று சொல்லுவார்கள். திரிசூலத்தின் பக்கவாட்டில் உட்கார்ந்து இந்த 3 எலுமிச்சம் பழங்களையும் வலது உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டு, அதே கையில் ஒரு கொத்து வேப்பிலையும் வைத்து கொண்டு மனம் உருகி உங்களுடைய வேண்டுதலை அம்பாளிடம் சொல்லுங்கள்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி, கணவருக்கு இருக்கும் தீய பழக்கம் விலக வேண்டும், உங்கள் பிள்ளைக்கு கல்யாணம் நடக்க வேண்டும், பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும், குடும்பத்தில் வறுமை விலக வேண்டும், என்று என்ன வேண்டுதல் வேண்டும் என்றாலும் சொல்லலாம். ஆனால் ஒரு வேண்டுதலாக மட்டும் இருக்கட்டும்.
இப்போது உங்களுடைய வாழ்க்கையில் எந்த கஷ்டம் மிகவும் பெருசாக இருக்கிறது, அந்த கஷ்டம் சரியாக வேண்டிக்கொண்டு, கையில் இருக்கும் எலுமிச்சம் பழத்தை உங்கள் தலையை வலது பக்கமாக 3 முறை, இடது பக்கமாக 3 முறை சுற்றி, சூலாயுதத்தில் குத்தி அந்த வேப்ப தழையை சூலம் முன்பு போட்டு விட்டு வந்து விடுங்கள். உங்களுடைய கஷ்டங்கள் அன்றோடு அம்பாளின் பாதத்திற்கு சென்றது என்று பொருள். நாளை வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமையில் நேரம் கிடைத்தவர்கள் இந்த வழிபாட்டை செய்யுங்கள். செய்ய முடியாதவர்கள் அடுத்தடுத்து வரக்கூடிய ஆடி ஞாயிற்றுக்கிழமையில் ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதோடு சேர்த்து ஞாயிற்றுக்கிழமை உங்களால் முடிந்த கூழ், வேறு ஏதாவது பிரசாதத்தை இயலாதவர்களுக்கு, பசியோடு உள்ளவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். உங்கள் குடும்பத்திற்கு நல்லதே நடக்கும் என்ற செய்தியுடன் ஆன்மீகம் சார்ந்து பதிவினை நிறைவு செய்து கொள்வோம். மீண்டும் மற்றொரு ஆன்மீக செய்தியில் சந்திப்போம்.