Friday, July 11, 2025
Homeபொழுதுபோக்குKanaka : நான் எதுக்காக பேட்டி கொடுக்கணும்.. தன் தனிமைக்கான காரணத்தை சொன்ன நடிகை கனகா...

Kanaka : நான் எதுக்காக பேட்டி கொடுக்கணும்.. தன் தனிமைக்கான காரணத்தை சொன்ன நடிகை கனகா !

Date:

- Advertisement -

Kanaka: கனகா நடிகை தேவிகாவின் மகள், தமிழில் கரகாட்டக்காரன் படம் மூலம் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து ரஜினி, விஜயகாந்த் என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து கனகா பிசியான நடிகையாக வந்தார்.

தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வந்த கனகாவிற்கு அவரின் அம்மாவின் மரணம் மிகப்பெரிய வேதனையை கொடுத்தது, பட வாய்ப்புகளும் குறைந்தது. தமிழில் நடிகை தேவிகா ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். இவரது மகள் கனகாவும் கடந்த 90 களின் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக நடித்து வந்தார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

1989 ம் வருடம் ராமராஜன் நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த கனகாவிற்கு அந்த படம் மிக பெரிய வரவேற்பினை அள்ளி தந்தது. அதனை தொடர்ந்து விஜயகாந்த், ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் கனகா நடித்து வந்தார்.

Kanaka
Kanaka

தென்னிந்திய மொழிகளில் தமிழ், மலையாளம் இவற்றில் பிசியான நடிகையாக கனகா வலம் வந்தார்.ரசிகர்களும் இவரை கொண்டாடினார்கள்.ஒரு கட்டத்தில் அவருடைய அம்மாவை இழந்த கனகா, மிகுந்த மனவேதனையுடன் இருந்தார். படவாய்ப்புகளும் குறைந்தது தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வாழ்ந்து வந்தார் கனகா.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஒரு சமயத்தில் கனகா இறந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. விரலுக்கேத்த வீக்கம் என்ற தமிழ் படத்தில் கடைசியாக நடித்துள்ள கனகா, 2000 ம் வருடம் இரண்டு மலையாள படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 23 வருடங்களாக சினிமாவில் நடிக்கவில்லை. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை கனகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் நடிகை குட்டி பத்மினி பகிர்ந்தார்.

அதில் கனகா அடையாளம் தெரியாமல் போயிருந்தார். இவரை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். இந்தநிலையில் இப்போது இவர் கவனத்திற்குரியவராகியுள்ளார். இப்போது கனகாவை பல யுடியூப் சேனல்கள் போட்டிபோட்டு கொண்டு பேட்டி கண்டு வருகின்றனர்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Kanaka
Kanaka

Kanaka – நான் எதுக்காக பேட்டி கொடுக்கணும்..

அப்படி கனகா கொடுத்த சமீபத்திய பேட்டியில், தற்போது சினிமா அதிக மாற்றங்களை கொண்டுள்ளதாக மிகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். நான் நடிக்கவந்தபோது என்னைப்பார்த்து என்னம்மா ஒல்லியாக இருக்கிறாய்,கண்ணம் ஒட்டி போயிருக்கிறது என்று தன்னை விமர்சித்ததாகவும் டயலாக் இப்படி பேசவேண்டும் என்றெல்லாம் கற்று கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இப்போது நாயகிகள் கேஷுவலாக நடிப்பதாகவும் ரசிகர்கள் அதையும் ரசிப்பதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார். தான் அதே வீட்டில் தனிமையில் இருப்பதாகவும் மற்றவர்களுடன் பழக்கூடாது,பேசக்கூடாது என்ற எண்ணம் தனக்கு இல்லை என்றும் தான் என்ன பிசியாக இருக்கிறோம் எதற்காக பேட்டி கொடுக்க வேண்டும் என்று என்னுடைய மனசாட்சி கேள்வி கேட்கும் என்றும் ஆகவேதான் ஒதுங்கி இருந்ததாகவும் கனகா குறிப்பிட்டுள்ளார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஒரு காலகட்டத்தில் அதிகமான படங்களில் நான் நடித்துவந்ததால் அந்த படங்களை பற்றி பகிர்வதற்கும், பேசுவதற்கும் காரணங்கள் இருந்ததாகவும் ஆனால் தற்போது எதுவும் இல்லாத சூழ்நிலையில் தானாக முன்வந்து பேட்டி கொடுக்கிறேன் என்பது சரியாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளார் கனகா. தற்போது தன்னை பற்றி செய்தி வந்துள்ளதால், தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும், தான் பேட்டிகளை கொடுத்த வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories