Friday, July 11, 2025
Homeஆன்மீகம்கண் திருஷ்டி விலக ஞாயிற்றுக்கிழமை இரவு செய்ய வேண்டிய பரிகாரம்

கண் திருஷ்டி விலக ஞாயிற்றுக்கிழமை இரவு செய்ய வேண்டிய பரிகாரம்

Date:

- Advertisement -

கல்லடிபட்டாலும் படலாம், கண்ணடி மட்டும் படவே கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். கல் அடிப்பட்டவர்கள் கூட, ஒரு சில நாட்களில் அந்த காயத்திலிருந்து தப்பித்து விடுவார்கள். ஆனால் கண் திருஷ்டி பட்டு விட்டால் அதனால் வரக்கூடிய பிரச்சனைகளில் இருந்து விலகுவது என்பது அவ்வளவு சுலபம் கிடையாது.

kan thrishti neenga varahi pariharam
kan thrishti neenga varahi pariharam

ஆகவே தான் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையும், ஒவ்வொரு மாதம் வரும் அமாவாசை திதியிலும் வீட்டில் உள்ளவர்களுக்கும், வீட்டிற்கும் திருஷ்டி சுற்றி போட வேண்டும் என்றும் பெரியவர்கள் கூறுவார்கள். ஆகவே வாராகி தாயை நினைத்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருடைய கண் திருஷ்டி பிரச்சனைக்கும் முடிவு வைக்கலாம். கண் திருஷ்டி விலக வாராஹிதாயை நினைத்து செய்ய வேண்டிய அந்த பரிகாரம் என்ன என்று ஆன்மீகம் சொல்வதை படித்து தெரிந்து கொள்வோமா.

கண் திருஷ்டி நீக்கும் பரிகாரம் | kan thrishti neenga varahi pariharam

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் படிகார கல். உங்க வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் மளிகை கடைகளில் இந்த பொருள் கிடைத்துவிடும். வாங்கிக் கொள்ளுங்கள்.உங்க வீட்டில் 3 அல்லது 4 பேர் இருக்கிறார்கள் என்றால் அத்தனை துண்டு படிகார கல் வேண்டும். அதனால் ஒரு பெரிய படிகார கல்லை வாங்கி அதை உடைத்து பரிகாரத்திற்கு பயன்படுத்தலாம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இரவு தூங்க செல்வதற்கு முன்பு பூஜை அறையில் குடும்பத்தில் இருப்பவர்கள் எல்லோரும் அமர்ந்து வாராகித் தாயை மனதார நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள். எங்கள் குடும்பத்தில் உள்ள கண் திருஷ்டி அனைத்தும் நீங்க வேண்டும். எங்கள் மேல் பட்ட கண் திருஷ்டி எல்லாம் நீங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள்.

இந்த பிரார்த்தனையை வைக்கும் போது உங்களுடைய உள்ளங்கைகளில் படிகாரகல்லை வைத்து இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் எல்லோருடைய கையிலும் ஒவ்வொரு படிகாரங்கள் இருக்க வேண்டும். சின்ன பிள்ளைகளுக்கும் இந்த பரிகாரம் செய்யலாம். தவறு இல்லை. 5 வயதுக்கு மேலே இருக்கக்கூடிய பிள்ளைகளை இந்த பரிகாரத்தை செய்ய சொல்லவும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

kan thrishti neenga varahi pariharam

பிரார்த்தனைகள் முடிந்து தூங்கச் செல்லும்போது அவரவர் கையில் இருக்கும் படிகார கல்லை அவரவர் தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு தூங்குங்கள். மறுநாள் காலை எழுந்து அனைத்து படிகார கல்லையும் வீட்டுக்கு வெளிபகுதியில் நெருப்பில் போட்டு பொசிக்கி விடுங்கள். அப்படி இல்லை என்றால் எல்லா படிகார கல்லையும் ஒரு பேப்பரில் மடித்து எடுத்து போய் ஓடுகின்ற தண்ணீரில் விடலாம்.

இதையும் படிங்க : உங்களுக்கு முடி கொட்டுகிறதா? அப்படின்னா இந்த 3 பொருட்கள் பயன்படுத்தி பானத்தை குடிங்க.!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அதுவும் முடியாது என்று நினைப்பவர்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக கால் படாத பகுதியில் இந்த படிகார கல்லை போட்டு விட்டு வந்து விடுங்கள். உங்களைப் பிடித்த கண் திருஷ்டி அனைத்தும் இந்த படிகார கல்லின் மூலம் விலகிவிடும் என்பது நம்பிக்கையாக கூறப்பட்டுள்ளது. தேய்பிறை பஞ்சமி திதி அன்று வாராகித் தாயை நினைத்து இந்த பரிகாரத்தை செய்யும் போது இரண்டு மடங்கு பலன் உங்களுக்கு கிடைக்கும்.

வாராகி தாயின் பரிபூரண அருளும் ஆசியும் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். நம்பிக்கை கொண்டவர்கள் இந்த சுலபமான பரிகாரத்தை செய்து பாருங்கள் உங்களுடைய உடல் உபாதைகள், சோம்பேறித்தனம், கண் திருஷ்டியால் வந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்ற ஆன்மீகம் சார்ந்த இந்த தகவலை நிறைவு செய்து கொள்வோம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : காரசாரமான சுவையில் ரோட்டு கடை ஸ்டைல் முட்டை மசாலா இது மாதிரி ஒரு முறை செய்து பாருங்கள்!

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories