Friday, July 11, 2025
Homeவிவசாயம்ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை..!

ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை..!

Date:

- Advertisement -

ஜீவாமிர்தம் என்றால் என்ன?

ஜீவாமிர்தம் செய்வது எப்படி.? இயற்கை விவசாயத்தின் ஜீவ நாடியாக விளங்கக்கூடியது ஜீவாமிர்தம். இந்த ஜீவாமிர்தத்தை (Jeevamirtham) எப்படி தயாரிக்க வேண்டும் என்பதையும், அதற்கு என்னென்ன பொருட்கள் வேண்டும் என்பதையும், எப்படி பயன்படுத்தலாம் என்பதையும், எத்தனை நாட்கள் வரை பயன்படுத்தலாம் என்பதையும் நாம் இந்த பகுதியில் காண்போம்.

jeevamrutham eppadi seivathu
jeevamrutham eppadi seivathu

ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை..!

தேவையான பொருட்கள்:

நாட்டு மாட்டு சாணம் – 10 கிலோ
தண்ணீர் – 180 லிட்டர்
நாட்டு மாட்டு கோமியம் – 10 லிட்டர்
நாட்டு சர்க்கரை – 1 கிலோ
சிறு தானிய பயிர் மாவு – 2 கிலோ
வரப்பு மண் – 1 கிலோ
200 லிட்டர் தண்ணீர் கொள்ளும் – வாளி ஒன்று

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

செய்முறை: jeevamrutham eppadi seivathu

200 லிட்டர் தண்ணீர் கொள்ளும் ஒரு வாளியை எடுத்து கொள்ள வேண்டும். அந்த வாளியில் புதிய நாட்டு மாட்டு சாணத்தை போட்டு 20 லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து கொள்ள வேண்டும்.

பின்பு அவற்றில் 10 லிட்டர் நாட்டு மாட்டு கோமியத்தை ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும். (குறிப்பாக பழைய கோமியமாக இருந்தால் மிகவும் நல்லது)

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பிறகு நாட்டு சர்க்கரையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பின் சிறுதானிய பயிர் மாவு கலந்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். (குறிப்பாக கையினால் கட்டிகள் இல்லாதவாறு நன்கு கரைத்து விடவும்)

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதை தொடர்ந்து 1 கிலோ இரசாயனம் காலக்காத வரப்பு மண்ணை கலந்து கொள்ளவும்.

அவ்வளவு தான் ஜீவாமிர்தம் தயார் ஆகிவிட்டது. இவற்றை 3 நாட்கள் வரை நிழல் பகுதியில் வைத்து காற்று புகாத அளவிற்கு மூடி வைத்து கொள்ளவும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

3 நாட்களுக்கு பிறகு இந்த ஜீவாமிர்தத்தை பயிர்களின் மீதும் தெளித்து விடலாம் அல்லது பாசன நீரில் கலந்து விடலாம்.

இந்த ஜீவாமிர்தத்தை (Jeevamirtham) ஏழு நாட்கள் வரை விவசாயத்திற்குஉபயோகப்படுத்தலாம், அதற்கு மேல் உபயோப்படுத்த கூடாது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அதேபோல் இந்த கலவையை தினமும் 3 வேளையும் ஒரு குச்சியால் வலது புறமாக கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

கண் திருஷ்டி விலக ஞாயிற்றுக்கிழமை இரவு செய்ய வேண்டிய பரிகாரம்

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஜீவாமிர்தம் பயன்கள்:

ஜீவாமிர்தத்தை (Jeevamirtham) எல்லா வகை பயிர்களுக்கும் தண்ணீரில் கலந்து உபயோகப்படுத்தலாம்.

ஜீவாமிர்தத்தை பயிர்களில் நேரடியாக தெளிக்க கூடாது. ஜீவாமிர்த கரைசலை 20 லிட்டர் தண்ணீருடன் சேர்த்து கலக்கி தெளிக்க வேண்டும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஜீவமிர்தத்தை தொடர்ந்து பயிர்களுக்கு உபயோகப்படுத்தி வந்தால் நிலத்தில் மண்புழு எண்ணிக்கையை கூடுதலாக்கும், அதாவது இனப்பெருக்கமடையும். இதனால் மண் மிகவும் மிருதுவாக இருக்கும்.

ஜீவாமிர்தக்கரைசலை (Jeevamirtham) நிலத்தில் விடும்போது. 15 அடி ஆழத்திற்கு கீழ் உள்ள மண்புழுக்கள் துள்ளி மேலே எழுந்து, மண்ணை கிளறிக்கொண்டு மேலே வரும். இதனால் மண்ணின் வளம் பல மடங்கு அதிகரிக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஜீவாமிர்தம் விதைநேர்த்தி செய்ய மிகவும் உகந்ததாகும். விதைநேர்த்தி செய்ய விதைகளை இந்த கரைசலில் 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். நாற்றுகளாக இருந்தால் அதன் வேர்களை நன்றாக நனைய செய்து பிறகு நடவு செய்ய வேண்டும்.

ஜீவாமிர்தம் தெளிப்பதால் நுண்ணுயிர்களின் வளர்ச்சி பல மடங்கு கூடுதலாகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஜீவாமிர்தம் எல்லா வகை மண்ணையும் அதிக சத்துள்ள மண்ணாக மாற்றிவிடுகின்றது.

இந்தியாவின் டாப் ஏழு பணக்கார மாநிலங்கள் இவைதான்.. தமிழ்நாடு எந்த இடத்தில் இருக்கிறது தெரியுமா?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories