நடிகை ராஷ்மிகா மந்தனா ஜப்பான் நாட்டில் 2/03/2024 லில் நடந்த கிரன்ச்சிரோல் அனிமே அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ளார். அங்குள்ள ரசிகைகள் சிலர் ராஷ்மிகாவை சந்தித்து வரவேற்றனர்.அந்த வரவேற்பில் ராஷ்மிகாவும் மகிழ்ச்சியடைந்து பதிவிட்டிருந்தார்.

Japan Dream Rashmika Happy
அடுத்து ஜப்பான் நாட்டிற்கு ராஷ்மிகா சென்றது குறித்து மகிழ்ச்சியான பதிவொன்றைப் பதிவிட்டுள்ளார். “சிறு வயதிலிருந்தே, நான் பல ஆண்டுகளாக ஜப்பானுக்கு போக வேண்டும் என்று கனவு கண்ட இடம் . அது நடக்குமென்று கொஞ்சமும் நினைக்கவே இல்லை. உலகத்தில் நல்ல படைப்புகளை உருவாக்கிய ஒருவருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியாக அனிமே அவார்ட்ஸ் அமைந்தது. அந்த நிகழ்ச்சியின் மூலம் எனது கனவு நனவானது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : நயன்தாரா, விக்னேஷ் சிவன் குறித்து ஜோதிடர் சொல்லியது நடந்துடுமோ? : சினிமா ரசிகர்கள்

இந்த நிகழ்ச்சியில் அனைவரையும் சந்திக்க முடிந்தது, நம்ப முடியாத அளவிற்கு பாசம் காட்டுவது,இந்தளவிற்கு அன்பான வரவேற்பைப் பெறுவது, சுத்தமான இடங்கள், உணவு, வானிலை, அழகான மனிதர்கள் என ஆச்சரியமாக இருக்கிறது. தேங்யூ ஜப்பான்… உண்மையில்… நான் உன்னை காதலிக்கிறேன், உண்மையிலேயே….நீ மிக சிறப்பானவர். இனி, ஒவ்வொரு ஆண்டும் இங்கு வருவேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : வீட்டிலேயே எளிமையாக ருசியான அத்திப்பழம் கீர் செய்யலாம்!
