Friday, July 11, 2025
Homeபொழுதுபோக்குபாலிவுட் நடிகை ஜான்வி கபூர் ஹாஸ்பிட்டலில் அனுமதி.. அச்சச்சோ என்ன ஆச்சு?

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் ஹாஸ்பிட்டலில் அனுமதி.. அச்சச்சோ என்ன ஆச்சு?

Date:

- Advertisement -

மும்பை: இந்திய மட்டுமின்றி உலக அளவிலும் ஏராளமான ரசிகர்களை ஈர்த்து வளர்ந்து வரும் இளம் நடிகையாக உலா வந்து கொண்டிருப்பவர் தான் ஜான்வி கபூர். இந்தியில் மட்டுமின்றி தெலுங்கில் ஜூனியர் என்டிஆருடனும் தேவரா படத்திலும் அடுத்ததாக ராம்சரணுடன் இணைத்து அடுத்த படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார் ஜான்வி கபூர்.

அழகும் கவர்ச்சியும் ஒன்று சேர அமைந்துள்ள ஜான்வி கபூரை தமிழிலும் விரைவில் ஹீரோயினியாக்க தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 2 தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார் ஜான்வி கபூர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Janhvi Kapoor admitted to hospital (1)
Janhvi Kapoor admitted to hospital

நடிகை ஜான்வி கபூர்: இந்திய அளவில் புகழ் பெற்ற மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர். இவர் தொடர்ந்து இந்திய அளவில் அதிகமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்தி, தெலுங்கு மொழி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். ஜான்வி கபூர் தெலுங்கில் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து தேவரா படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வெளியிடுவதற்கு தயாராகியுள்ளது. இதேபோல நடிகர் ராம்சரணுடன் அடுத்த படத்தில் சேர்ந்து நடித்து வருகிறார் ஜான்வி கபூர். இவரை தமிழில் விரைவில் அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க : விஜய்யின் யூத் பட நடிகையா இவர்? அவரா இது அடையாளம் தெரியலையே..

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

உடல்நலம் பாதிப்பு: ஆனால் தமிழ் நடிகர் சூர்யாவுடன் பாலிவுட்டில் உருவாக போகும் கர்ணா படத்தில் ஜான்விகபூர் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அடுத்ததாக ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகி இருக்கும் உலஜ் படம் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்காக அடுத்தடுத்த பிரமோஷன்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார் ஜான்வி கபூர். இந் நிலையில் ஜான்வி கபூருக்கு திடீர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் அவர் ஃபுட் பாய்சனால் உடல் நலம் குறைவு ஏற்பட்ட நிலையில் அவரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் அவர் தன்னுடைய ப்ரொமோஷன்கள் மற்றும் படப்பிடிப்பு உள்ளிட்டவற்றை கேன்சல் செய்துவிட்டு வீட்டிலேயே ஓய்வெடுத்தார்.

Janhvi Kapoor admitted to hospital (2)
Janhvi Kapoor admitted to hospital

மருத்துவமனையில் அனுமதி: ஆனாலும் நிலைமை மிகவும் மோசமானதால் இன்றைய தினம் அவர் ஹாஸ்ப்பிட்டலில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வரும் நிலையில் நாளைய தினம் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார் என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து மறுபடியும் அவர் உலஜ் பட புரமோஷன்களில் ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ந்து கொண்டிருக்கும் நடிகையான ஜான்வி கபூர் ஏராளமான ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்து வருகின்றனர்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : இறால் வறுவல் எவ்வளவு செய்தாலும் காலியாகும் அடுத்த முறை…

25 மில்லியன் பாலோயர்கள்: சமூக வலைதளங்களில் தன்னுடைய அடுத்தடுத்த கிளாமர் புகைப்படங்களால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் ஜான்விகபூரை இன்ஸ்டாகிராமில் ஏறத்தாழ 25 மில்லியன் ஃபாலோயர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஜான்வி கபூர் உடல்நிலை பாதிப்படைந்ததை கேட்ட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவர் விரைவில் உடல்நிலை குணமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories