Friday, July 11, 2025
Homeஸ்நாக்ஸ்நம் வீட்டில் ரோட்டுக்கடை பேல் பூரியை அதே சுவையில் செய்து பாருங்க! சுவையோ சுவையாக இருக்கும்.

நம் வீட்டில் ரோட்டுக்கடை பேல் பூரியை அதே சுவையில் செய்து பாருங்க! சுவையோ சுவையாக இருக்கும்.

Date:

- Advertisement -

Bhel puri: ஒவ்வொரு ஊரிலும் பிரசித்தியான உணவுகள் எத்தனையோ இருக்கிறது. அந்தவகையில் இன்று நாம் மும்பையில் பிரசித்தி கொண்ட ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபியை பார்க்க உள்ளோம்.

மும்பை தெரு உணவுகளில் ஒன்றான பேல் பூரியை இன்று நாம் பார்க்க போகிறோம். யாராக இருந்தாலும் ரோட்டுக்கடை உணவுகள் பிடிக்காது என்று சொல்ல மாட்டார்கள். மசாலா பூரி, பானி பூரி, பேல் பூரி, காளான், சிக்கன் பக்கோடா என எதுவாக இருந்தாலும் அதை கடைகளில் சப்புக்கொட்டி சாப்பிடுவோம். ஆனால் அது ஆரோக்கியமான உணவு இல்லை என்று அனைவருக்கும் தெரியும். அதில் இருக்கும் சுவை நாக்கில் தனி சுவையாக இருக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

மும்பையில் இந்த பேல் பூரி பூர்வீகமாக கொண்டிருந்தாலும், நாடு முழுவதும் பேல் பூரி மாலை நேர ஸ்னாக்ஸாக மாறியிருக்கிறது. அரிசி பொரி, உருளைக்கிழங்கு, சேவு, மிளகாய், வெங்காயம், இனிப்பு மற்றும் புளிப்பு சுவையான சட்னி ஆகியவற்றின் கலவை கொண்டு இருக்கும். இதை சாப்பிடுபவர்களுக்கு ஒரு வித புத்துணர்ச்சி கொடுக்கும் என்பதை மறுக்க முடியாது. இந்த கலவையோடு சிலர் பப்படம் மற்றும் தயிர் ஆகியவற்றை சேர்த்து ருசியாக சுவைப்பார்கள்.

Bhel puri
Bhel puri

இவ்வளவு பொருட்கள் சேர்த்து இந்த ஸ்னாக்ஸ் செய்து சாப்பிட்டாலும், குறைந்த கலோரிகள் இதில் இருப்பதால் டயட் போன்ற உணவு கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் பேல் பூரியை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.இது முற்றிலும் நாம் சாப்பிடும் சிநாக்ஸ் வகைகளில் இருந்து மாறுபட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த ரெசிபியை விரும்பி சாப்பிடும் இதன் சுவை இருக்கும். ஆரோக்கிமான முறையில் ருசியான பேல் பூரியை, நம் வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Equipment | Bhel puri

  • ஒரு வாணலி
  • ஒரு பவுல்

தேவையான பொருட்கள்

  • 2 கப் அரிசிபொரி
  • 1 தக்காளி
  • 10 பானி பூரி
  • 1 கேரட்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் பச்சை சட்னி
  • 2 டேபிள் ஸ்பூன் இனிப்பு சட்னி
  • உப்பு தேவையான அளவு
  • 4 டேபிள் ஸ்பூன் ஓமப்பொடி
  • 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • கொத்தமல்லி தழை சிறிதளவு

ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் மஞ்சள் தூளை அதனுடன் சேர்த்து, அரிசி பொறியை கலந்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவேண்டும்.

பிறகு வெங்காயம்,தக்காளி, கொத்தமல்லி இலை இவற்றை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவேண்டும், கேரட்டையும் துருவி வைத்து கொள்ளவும்.
பின்னர் எண்ணையில் பானி பூரியை போட்டு பொரித்து எடுத்துக்கொள்ளவும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஒரு பவுலில் வேர்க்கடலை, ஓமப்பொடி,மஞ்சள் தூள், வறுத்த பொரி, பொட்டுக்கடலை எல்லாவற்றையும் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும். பிறகு வறுத்து வைத்துள்ள பொரியுடன் நறுக்கிய வெங்காயம், கேரட் துருவல், தக்காளி, பச்சை சட்னி,இனிப்பு சட்னி எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து அதோடு பானி பூரியை பொடித்து போட்டு நன்றாக கலந்து விடவும்.

அதன் பின்பு ஓமப்பொடி,எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலைகளை அதன்மேல் தூவவும் பேல் பூரி தயார். இதை குளிர்காலத்தில் சாப்பிட மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Nutrition | Bhel puri

Serving: 300g | Carbohydrates: 10g | Calories: 44kcal | Fat: 0.1g | Protein: 5.2g | Potassium: 16mg | Sodium: 5mg | Vitamin C: 15mg | Fiber: 1.9g | Iron: 0.36mg | Calcium: 12mg

SUBSCRIBE ஆனந்தி சமையல் OFFICIAL CHANNEL CLICK HERE
சமையல் குறிப்பு சம்மந்தமான அனைத்து பதிவுகளையும் இங்கு காணலாம் –>ஆனந்தி சமையல்
கூகுள் நியூஸ் யில் ஆனந்தி சமையல் Follow பண்ணுங்க –>Google News

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories