Thursday, July 10, 2025
Homeலைப்ஸ்டைல்அழகு குறிப்புகள்ஈர், பேன், பொடுகு பிரச்சனை நீங்க.!

ஈர், பேன், பொடுகு பிரச்சனை நீங்க.!

Date:

- Advertisement -

Home Remedies For Rid of Head Lice : அனைவருக்கும் தலை முடி பிரச்சனை ஒருபுறம் இருந்தாலும் தலையில் இருக்கும் ஈர், பேன், பொடுகு தொல்லை வந்து கொண்டு தான் உள்ளது. அதனை தீர்க்க நாமும் ஒவ்வொரு விதமான ஷாம்பு போட்டு குளித்துவிட்டோம். இருந்தும் அது உங்களை வீட்டு போகவே போகாது.

Home Remedies For Rid of Head Lice
Home Remedies For Rid of Head Lice

இந்த 3 பிரச்சனைக்கும் ஒரு தீர்வாக இந்த பதிவு இருக்கும். நீங்கள் முதலில் பல வகையான ஷாம்புக்கள் போட்டு குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஒரே மாதிரியாக செய்தால் போதும் தலை முடி பிரச்சனையும் வராது பொடுகு தொல்லையும் வராது. வாங்க அது அனைத்திற்கும் ஒரே தீர்வாக இதை செய்து பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

தேவையான பொருட்கள்: Home Remedies For Rid of Head Lice

  • தேங்காய் எண்ணெய்
  • 7 பல் – பூண்டு
  • 1 கைப்பிடி – புதினா இலை

முதலில் பூண்டை ஒவ்வொரு பற்களாக எடுத்துக்கொள்ளவும். அடுத்து எடுத்து வைத்த பூண்டு பற்களை அரைக்காமல் இடித்து எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு, அதேபோல் புதினா இலையை கழுவி சுத்தம் அதையும் சின்ன உலக்கை பயன்படுத்தி இடித்துக்கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் வாணலை வைத்து அதில் 2 டீ ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெயை ஊற்றவும். தேங்காய் எண்ணெயை விட வேப்ப எண்ணெயை ஊற்றுவது நல்லது. எண்ணெய் சூடானதும் அதில் இடித்து வைத்துள்ள பூண்டு, புதினாவை சேர்க்கவும். அது 5 நிமிட நேரம் சூடு செய்தால் போதும்,பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதை தனியாக எடுத்து ஆறவைக்கவும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

சூடு ஆறியதும் அதனை தலையில் தேய்க்கவும். இப்படி தேய்ப்பதால் பொடுகு தொல்லை வராது. இதனை வீட்டில்இருக்கும் அனைவரும் பயன்படுத்தலாம். முக்கியமாக அதனை தேய்க்கும் போது முடியின் வேர்வரை தேய்த்து கொள்ளவும். அது காய்ந்த பின்பு ஷாம்பு போட்டு குளிக்கவும்.
பின்பு தலையை காயவைத்த பிறகு, பேன் சீப்பு கொண்டு தலை முடியை சீவினால் எல்லா பேன்களும் வந்து விடும்.

இதனை வாரத்தில் ஒரு முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பூண்டு வாசனைக்கும், புதினா நறுமணத்திற்கும் பேன், பொடுகு பிரச்சனைகள் நீங்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Read Also : தர்பூசணி விதைகளின் ஆச்சரிய பட வைக்கும் நன்மைகள்!

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories