Friday, July 11, 2025
Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்மஞ்சுமல் பாய்ஸ் பட ரூட்.. ரம்பா பாட்டை கையில் எடுத்த மலையாளப் படம்.!

மஞ்சுமல் பாய்ஸ் பட ரூட்.. ரம்பா பாட்டை கையில் எடுத்த மலையாளப் படம்.!

Date:

- Advertisement -

ரம்பா பாட்டை கையில் எடுத்த மலையாளப் படம்: கடந்த 2023ஆம் வருடம் இயக்குநர் விபின் தாஸ் இயக்கத்தில் ரிலீசான மலையாள படம் ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’. இப்படம் மலையான ரசிகர்கள் மட்டுமில்லாமல் பலரது கவனத்தையும் ஈர்த்தது. விபின் தாஸ் அடுத்ததாக இயக்கிய திரைப்படம் ’குருவாயூர் அம்பலநடையில்’. இந்த படத்தில் பசில் ஜோசப், யோகிபாபு, பிருத்விராஜ், நிகிலா விமர், அனஸ்வர ராஜன், ரேகாமற்றும் இர்ஷாத் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் கடந்த மே 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த படம் உலகம் முழுவதும் ரூ.90 கோடி வசூலை குவித்தது. இதனை அடுத்து, கடந்த ஜூன் 27ஆம் தேதி ஓடிடியில் ரிலீசாகி மலையான ரசிர்களை தாண்டி தமிழ் ரசிர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் தொடக்கம் முதல் இறுதிவரை நகைச்சுவை காட்சிகள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, ரம்பாவின் பாடல் இப்படத்தில் இடம்பெற்றிருப்பது இந்த படம் வெற்றி பெற முக்கிய காரணமாக உள்ளது.

Guruvayoor Ambalanadayil rambha song

Guruvayoor Ambalanadayil rambha song1
Guruvayoor Ambalanadayil rambha song

அதாவது, ரம்பாவின் ’உள்ளத்தை அள்ளித்தா’ படத்திலுள்ள பாடலான, ’அழகிய லைலா’ பாடல் வரும் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் பாடல் இப்படத்தில் இடம்பெற, மலையாளத்தில் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது குருவாயூர் அம்பலநடையில் படம். முன்னதாக ரிலீசான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்திலும் தமிழ் பாடல் இடம்பெற்றிருந்தது ரசிகர்களை கொண்டாடச்செய்தது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : வீட்டுல பட்டாணியும் உருளைக்கிழங்கும் இருக்கா? அதுல குருமா செய்யுங்க… அருமையா இருக்கும்.

மஞ்சுமல் பாய்ஸ் பட ரூட்:

அதாவது, மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீசான மஞ்சுமெல் பாய்ஸ் படம் சூப்பர் ஹிட் ஆனது. மலையான சினிமா மட்டுமில்லாமல், இந்த படம் தமிழ் சினிமா வட்டாரத்திலும் வெற்றி நடைப்போட்டது. குறிப்பாக, இந்த படத்தின் நிகழ்விடமாக உள்ள குணா திரைப்படத்தில் வரும் குகைதான் உள்ளது. அதிலும், க்ளைமக்ஸில் வரும் கண்மணி அன்போடு காதலன் பாடல் ரசிர்களை மிகவும் கொண்டாட வைத்தது. அந்த அளவிற்கு படத்திற்கு கதையோடு குணா குகையுடனும் ரசிர்கள் ஐக்கியமாகினர் என்றே சொல்லலாம். இந்த படம் உலகளவில் 250 கோடி ரூபாய் வசூலித்தது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதுமட்டுமின்றி, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே மலையாள படங்கள் ஹிட் ஆகி வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் மலையாள படங்களுக்கு நல்ல வரவேற்பு என்றே சொல்லாம். அதாவது, மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து, கிரீஷ் ஏடி இயக்கிய பிரேமலு திரைப்படத்தில் நஸ்லென், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் இந்த படம் ரூ.136 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்த நிலையில், தற்போது ஓடிடியில் ரிலீசான ’குருவாயூர் அம்பலநடையில்’ ரசிர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதையும் படிங்க : பதினேழு வயதில் திருமணம், அதைத் தொடர்ந்து விவாகரத்து; அடுத்து என்ன நடந்தது என்பதை ரேகா நாயர் கூறியுள்ளார்!!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories