குணா படம் அபிராமி அபிராமி என ட்ரோல் செய்ய மட்டுமே உதவி வந்த நிலையில், மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் அசுர வெற்றியின் மூலம் குணா படத்தை பற்றிய பல கதைகளை அலசி ஆராய்வதற்கு உதவியாக மாறியிருக்கிறது. “மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல.. அதையும் தாண்டி புனிதமானது” என இளையராஜா இசையில் கமல்ஹாசன் பாடி நடித்த காட்சிகள் பேசப்பட்டு வரும் நிலையில், அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த ரோஷினி யார் என்றும் குணா படத்தை அடுத்து அவர் ஏன் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்ற கேள்விகள் எழத்தான் செய்கிறது.

நடிகை ஜோதிகாவிற்கும் ரோஷினிக்கும் இப்படியான உறவு இருக்கிறதா என ரசிகர்கள் ஆச்சர்யப்படும் அளவுக்கு இருவரும் அக்கா, தங்கை என்றும் சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் சிலர் நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், அது இல்லை என்பதுபற்றியும் ஜோதிகாவின் அக்கா யார் என்பது பற்றியும் குணா படத்தின் ஹீரோயின் யார் என்பது சம்பந்தமாக தெளிவாக இங்கே தெரிந்து கொள்ளலாம் வாங்க..
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Guna film heroine Roshini
நக்மாவை ஜோதிகாவின் உடன் பிறந்த சகோதரி என்று நினைத்திருப்பார்கள். ஆனால், ஜோதிகாவின் ஒன்று விட்ட சகோதரி தான் நக்மா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நக்மா ஜோதிகாவை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்வதற்கு முன்பாக தனது தங்கை ரோஷினியை தமிழில் அறிமுகம் செய்தார்.
இதையும் படிங்க : நான் வாழ்க்கையில் நம்பிய 4 நபர்கள் இதில் 3 பெண்கள் ! ஆனால் அந்த நம்பிக்கையை ? வெளிப்படையாக பேசிய தனுஷ்..!
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஜோதிகாவின் சகோதரி ரோஷினி 1997ம் வருடம் கார்த்தி நடித்த சிஷ்யா படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா போன்ற முன்னணி நடிகர்களுடன் தெலுங்கு, மற்றும் கன்னட படங்களில் நடித்த ரோஷினி அதன் பிறகு தமிழில் நடிக்கவில்லை. கல்யாணம் செய்துக் கொண்டு குடும்பத்தை கவனித்து வருகிறார்.
ஆனால், ஜோதிகாவின் உடன் பிறந்த சகோதரி தான் கமல்ஹாசனுடன் குணா படத்தில் நடித்த ரோஷினி என சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் விக்கிமீடியாவில் இடம்பெற்ற தவறான தகவலை பார்த்து பதிவிட்டு வருகின்றனர். கமல்ஹாசனின் முதல் மனைவி சரிகா மூலம் குணா படத்தில் அறிமுகமானவர் ரோஷினி. அதன் பின்னர் மும்பை போனவர் என்ன ஆனார்? எங்கே போனார் என்று கண்டு பிடிக்க முடியவில்லை என குணா படத்தின் இயக்குநர் சந்தான பாரதி பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கிறார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : தமிழ் சினிமா நடிகர் விஜய் ( 1 Best Actor Vijay )
கமல்ஹாசனை போல குணா படத்தில் அபிராமி அபிராமி என்ற வசனத்தை, அந்த படத்தை பார்த்து விட்டு பல சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அந்த நடிகையை அப்படி பாராட்டினார்கள். ஆனால், அதன் பின்னர் அவர் யாரிடம் சிக்காமல் சினிமாவை விட்டு விலகி செல்வதற்கு கமல்ஹாசன் தந்த லவ் டார்ச்சர் தான் என பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக கூறியதும் குறிப்பிடத்தக்கது. மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் விரைவில் நூறு கோடி வசூல் செய்ய போகும் நிலையில், குணா படம் குறித்து பல தகவல்கள் வெளி வரத் தொடங்கி இருக்கிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇