Garudan Title Glimpse Video : சூரி நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் 1 st லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தடம் பதித்து இன்று பல படங்களில் கதாநாயகனாக தமிழ் திரையுலகை கலக்கி வருபவர் தான் நடிகர் சூரி.
இவரது நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை படம் சூரியின் நடிப்பு திறமையை பற்றி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது. இந்நிலையில் இவரது நடப்பில் தற்போது இரண்டு புதிய படம் உருவாகி இருக்கிறது. சூரி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்திற்கு கருடன் என பெயரிடப்பட்டுள்ளனர் .
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

வெற்றிமாறனின் கதையில் எதிர்நீச்சல் புகழ் துரை செந்தில்குமார் இயக்கி உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம், தேனி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. இயக்குநரும், நடிகருமான சசிகுமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் இணைந்து சமுத்திரகனி,உன்னிமுகுந்தன் ரேவதி சர்மா ஆகியோரும் நடித்துள்ளனர்.
Read Also : புதிய சாதனை ‘கூச முனுசாமி வீரப்பன்’..
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இந்நிலையில் இப்படம் பற்றிய அடுத்த அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்ததால் தற்போது இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டிருக்கிறது கருடன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் தோற்றத்துடன், கிளிம்ப்ஸ் வீடியோவினையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
சமீப காலமாக நடிகர் சூரி நடிக்கிற அனைத்து படங்களும்மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.இந்நிலையில் இப்படம் சூரிக்கு வெற்றியை தேடி தருமா என்பதை நாம் பொருத்திருந்து பார்க்கலாம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
போடு வேற லெவெலு – சூரி நடிக்கும் கருடன் பட கிளிம்ப்ஸ் வீடியோ
