Friday, July 11, 2025
Homeசைவம்Easy Garlic Pepper Rasam Without Tomato | தக்காளி போடாமல் பூண்டு மிளகு ரசம்...

Easy Garlic Pepper Rasam Without Tomato | தக்காளி போடாமல் பூண்டு மிளகு ரசம் வைப்பது எப்படி? – 10

Date:

- Advertisement -

Garlic Pepper Rasam Without Tomato : நம் அனைவரது வீட்டிலும் ரசம் முக்கிய ஒன்றாக இருக்கிறது. எந்த உணவு வகைகள் செய்தாலும் கூடுதலாக ரசமும் செய்வார்கள். அதாவது எந்த வகையான உணவுகள் செய்தாலும் ரசம் இல்லாமல் இருக்காது. சாப்பிட்ட சாப்பாடு செரிமானம் அடைவதற்காகவும், இருமல், சளி நீங்கவும் ரசத்தை அதிகமாக பயன்படுத்தி கொள்கிறோம்.

ரசமானது பலவகையில் உள்ளது. வீட்டில் தக்காளி இல்லை என்றாலும் ரசத்தை சிலர் வைக்கமாட்டார்கள். ஆனால் ரசம் தக்காளி இல்லாமலும் வைக்கலாம்.அதை பற்றிய தகவலை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Garlic Pepper Rasam Without Tomato
Garlic Pepper Rasam Without Tomato

தேவையான பொருட்கள் : Garlic Pepper Rasam Without Tomato

  • புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
  • 1 ஸ்பூன் -சீரகம்
  • 1/2 ஸ்பூன் – மிளகு
  • 7 பற்கள் – பூண்டு
  • 3 – பட்டை மிளகாய்
  • 1 ஸ்பூன் – கொத்தமல்லி
  • 2 கொத்து – கருவேப்பிலை
  • 1 ஸ்பூன் – மஞ்சள் தூள்
  • 1/4 ஸ்பூன் – பெருங்காயத்தூள்
  • 1 – ஸ்பூன் – எண்ணை
  • 1/4 – வெந்தயம்
  • 1/2 ஸ்பூன் – கடுகு
  • 1/4 ஸ்பூன் – நாட்டுச்சக்கரை
  • கொத்தமல்லி இலை – கொஞ்சம்
  • உப்பு – தேவைக்கு ஏற்ப

செய்முறை விளக்கம் :

ஸ்டெப் 1

முதலில் புளியை நெல்லிக்காய் அளவு எடுத்து சிறிது தண்ணீர் ஊற்றி ஊறவைத்து நன்றாக கரைத்து அதை வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டெப் 2

பிறகு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொண்டு, அதில் மிளகு, சீரகம், பூண்டு, பட்டமிளகாய், பெருங்காயத்தூள், கொத்தமல்லி, மற்றும் கருவேப்பிலை 1 கொத்து சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஸ்டெப் 3

இப்போது புளி கரைசலில் சிறிதளவு மஞ்சள் தூள், நாம் அரைத்து வைத்துள்ள மசாலா பொருட்கள் மேலும் தேவைக்கு ஏற்ற அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து, அதை அப்படியே 5 நிமிடங்கள் வைக்கவும்.

ஸ்டெப் – 4

அதன் பின்பு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, வெந்தயம் போட்டு பொறிக்க விடுங்கள். பிறகு கருவேப்பிலை 1 கொத்து மற்றும் பட்டமிளகாய் 2 சேர்த்து தாளியுங்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஸ்டெப் 5

இந்த நிலையில், தயார் செய்து வைத்திருக்கிற ரசத்தை சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு, இதில் கொத்தமல்லி இலை மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து ரசம் கொதித்து வரும் போது இறக்கவும். இப்போது தக்காளி இல்லாமலே ரசம் தயார்.

Read Also : வீட்டுல பட்டாணியும் உருளைக்கிழங்கும் இருக்கா? அதுல குருமா செய்யுங்க…

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Subscibe ஆனந்தி சமையல் on Youtube

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories