Five young heroes in Kollywood : தமிழ் சினிமாவில் விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன் என முன்னணி கதாநாயகர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

இவர்களை தாண்டி அடுத்த கட்ட சினிமா என்பது எப்படி இருக்கும் என்ற கேள்வி அனைவருக்குமே இருந்தது. தற்போது கோலிவுட் வட்டாரத்தில் நம்பிக்கை வரும் அளவிற்கு 5 இளம் ஹீரோக்கள் வளர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யார் என்று பார்க்கலாம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
ஐந்து இளம் ஹீரோக்கள் | Five young heroes in Kollywood
மணிகண்டன்:
தமிழ் சினிமாவில் மணிகண்டன் குட் நைட் படத்தின் மூலம் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றார் . இந்த குட் நைட் படத்திற்கு பிறகு தான் அவர் முந்தைய படைப்புகள் அதிகமாக கவனிக்கப்பட்டது. இவர் தான் விக்ரம் வேதா, விசுவாசம் போன்ற மிகப் பெரிய ஹிட் படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறார். ஜெய் பீம் படத்தில் ராஜாக்கண்ணு என்னும் கேரக்டரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது இவர்தான். தொடர்ந்து இவர் நல்ல கதைகளில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் சமீபத்தில் ரசிகர்களால் மிகவும் ஈர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் நடிகர்களின் இவர் முக்கியமானவர்.
கவின்:
தமிழ் சினிமாவில் கவினை அடுத்த சிவகார்த்திகேயன் என்று அடையாளப்படுத்துகிறார்கள். கவின் ஆரம்ப காலகட்டத்தில் ஒரு வெற்றிக்காக மிகப்பெரிய அளவில் போராடினார். தற்போது இவர் தொடர்ந்து வெற்றி படங்களில் தான் நடித்து வருகிறார். இவருடைய கைவசம் ஸ்டார் மற்றும் கிஸ் உள்ளிட்ட படங்கள் இருக்கிறது. இதைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றி மாறனின் தயாரிப்பின் தன்னுடைய 7 ஆவது படத்திலும் நடிக்க இருக்கிறார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
ஜி வி பிரகாஷ்:
பெரும்பாலும் ஜிவி பிரகாஷ் அடல்ட் கன்டென்ட் படங்களில் நடிக்கிறார் என்று அவர் மீது ஒரு விமர்சனம் உள்ளது. ஆனால் அவரை சரியான இயக்குனர்கள் கரெக்டான கேரக்டரில் பயன்படுத்தும் போது தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். அப்படி வெளியான படங்கள் தான் சிவப்பு மஞ்சள் பச்சை, நாச்சியார். ஜிவி பிரகாஷ் இது போன்ற படங்களில் தொடர்ந்து நடித்தால் கண்டிப்பாக முன்னணி ஹீரோக்களின் வரிசையில் வந்து விடுவார்.
இதையும் படிங்க : சங்கி என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
மகேந்திரன்:
குழந்தை நட்சத்திரமாக மாஸ்டர் மகேந்திரன் இருக்கும் போது 2 தேசிய விருதுகளை பெற்றவர். நல்ல நடிப்பு திறமை உள்ள இவருக்கு வாய்ப்புகள் தான் குறைவாக கிடைக்கிறது. இவர் விழா படம் மூலம் தன்னை ஒரு நல்ல நடிகனாக அடையாளப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து நல்ல கதைகளில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியை பெறுவார்.
அசோக் செல்வன்:
தமிழ் சினிமாவில் சூது கவ்வும் படத்தின் மூலமாக அசோக் செல்வன் அறிமுகமானார். தொடர்ந்து நல்ல கதைகளில் நடித்து வந்த இவர் மன்மத லீலை படத்தில்சிறிது சறுக்கினாலும், மீண்டும் ப்ளூ ஸ்டார் படத்தின் வாயிலாக விட்ட இடத்தை பிடித்து விட்டார். அசோக்செல்வன் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிரார். இவர் தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்பிட வேண்டாம் !