Ethirneechal : பல படங்களில் குணச்சித்திரம், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் எதிர்நீச்சல் தொடரின் மூலம் அனைவரின் மனதுக்கும் நெருக்கமாகியிருக்கிறார் நடிகர் வேல ராமமூர்த்தி.
இயக்குனர் திருச்செல்வம் கோலங்கள் தொடருக்கு பிறகு மீண்டும் சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் தொடரை இயக்கி வருகிறார். 2022 பிப்ரவரி மாதம் முதல் இரவு 9.30மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் சத்யப்ரியா, ஹரிப்பிரியா, வேல ராமமூர்த்தி, பிரியதர்ஷனி, மதுமிதா, கனிகா கமலேஷ் உள்ளிட்ட பல நடிகை, நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இயக்குனர் திருச்செல்வம் சமூக செயற்பாட்டாளராக ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆணாதிக்கம் உள்ள அண்ணன்-தம்பிகள் தங்கள் வீட்டு பெண்களை எவ்வாறு அடிமை படுத்துகிறார்கள் என்பதாகும். அதை அந்த பெண்கள் எப்படி எதிர் கொண்டு எவ்வாறு மீண்டெழுகிறார்கள் என்பதே எதிர்நீச்சல் தொடரின் கதைகளம்.
Must Read : அட்லீயை தொடர்ந்து பாலிவுட்டில் களமிறங்கும் தமிழ் இயக்குனர்!
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதில் மூத்த அண்ணனாக முதலில் நடித்த நடிகர் திரு மாரிமுத்து நடித்துவந்த நிலையில் அவர் காலமானதை அடுத்து அவருக்கு பதிலாக நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார்.
இவர் பல படங்களில் வில்லன், குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். சீரியலில் நடிக்க ஆரம்பித்த பின் இவருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Ethirneechal | எதிர்நீச்சல் தொடரில் குணசேகரனின் சம்பளம்
முக்கிய கதாபாத்திரங்களில் படங்களில் நடித்தாலும்,அதில் சம்பளம் இவருக்கு மிகவும் குறைவு.
இந்த நிலையில் இவருக்கு எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க மாதம் 15 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது என்று இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Must Watch : ஸ்கூட்டரில் சென்ற பெண் திடீரென இறங்கி வந்து ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி கண்ணீர் மல்க மரியாதை