Friday, July 11, 2025
Homeவிளையாட்டுEngineer Dead : உலக கோப்பை கிரிக்கெட் : இந்தியா தோல்வி! ஹார்ட் அட்டாக்கில் 32வயது...

Engineer Dead : உலக கோப்பை கிரிக்கெட் : இந்தியா தோல்வி! ஹார்ட் அட்டாக்கில் 32வயது என்ஜினியர் மரணம்!

Date:

- Advertisement -

Engineer Dead ஐதராபாத் : உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி படு தோல்வி அடைந்ததால் அதிர்ச்சி அடைந்த திருப்பதியை சேர்ந்த சாஃப்ட்வேர் என்ஜினியர் ஜோதிகுமார் என்பவர் மாரடைப்பு ஏற்பட்டதால் மரணமடைந்துள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் நடைபெற்று முடிந்தது. இறுதிப்போட்டி நேற்று இந்தியா – ஆஸ்திரேலியா மோதின இரண்டு அணிகளிலும் பலம்வாய்ந்தவை இந்த இரண்டு அணிகளும் இறுதி போட்டியில் மல்லுகட்டியதால் உலகம் ஒட்டுமொத்தமும் இந்த கிரிக்கெட் போட்டியினை உன்னிப்பாக கவனித்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீசுவதை தேர்வு செய்தது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Engineer Dead
Engineer Dead

முதலில் பேட்டிங்க் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 10விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்தது. கே எல் ராகுல் 66ரன்களும் விராட் கோலி 54ரன்களும் அதிகபட்சமாக எடுத்தனர். இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி 241ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடியது. ஆரம்பத்தில் 3விக்கெட்டை இழந்தாலும் அதன்பின்னர் நிதானமாக ஆடி அந்த அணி வெற்றி பெற்றது.

ரசிகர்கள் கண்ணீர் : Engineer Dead

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியானது தொடர்ந்து வெற்றிகளை பெற்று வந்தது, இந்த நிலையில், இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த தோல்வியால் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்திய அணியின் தோல்வியினை ஏற்றுக்கொள்ள முடியாமல் ரசிகர்கள் கண்ணீர்விட்டு அழுததையும் காண முடிந்தது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றது ஆனால் இறுதிப்போட்டியில் வெற்றி பெறாதது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த முறை எப்படியாவது இந்தியா உலக கோப்பையை வென்று விடும் என்று நினைத்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. இதை ஏற்று கொள்ள முடியாமல் ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுததை காணமுடிந்தது. இந்த நிலையில் திருப்பதியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் அந்த அதிர்ச்சியில் 32வயது ஆன என்ஜினியர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

திருமணம் நடத்த இருந்தோம் :

ஜோதிகுமார் என்ற நபரின் தந்தை திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். திருப்பதியில் கம்ப்யூட்டர் சென்டரினை ஜோதிகுமார் நடத்தி வந்துள்ளார். கிரிக்கெட்டின் தீவிர ரசிகராக இருந்துள்ளார். நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி எப்படியும் வெற்றி பெற்று விடும் என்று நினைத்து இருந்த ஜோதிக்குமாருக்கு ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையாம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதனால் அதிர்ச்சியில் இருந்த என்ஜினியர் ஜோதிகுமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரது உறவினர்கள் இது குறித்து கூறுகையில் மாரடைப்பு ஏற்பட்டதும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். ஆனால் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். அவருக்கு விரைவில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்ய இருந்தோம்.

Most Read : இந்தியா V/s நியூசிலாந்து அரையிறுதி போட்டியில் சதம் அடித்த Virat Kohli க்கு Anushka Sharma கொடுத்த முத்தம்!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Most Watch : இப்போதான் ஆரம்பிச்ச மாதிரி இருக்கு.. எமோஷனல் வீடியோ பதிவிட்ட கீர்த்தி சுரேஷ்

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories