Thursday, July 10, 2025
Homeஅர்த்தம்உங்களுக்கு இந்த பகுதியில் மச்சம் இருக்கா?: அப்போ உங்கள் வாழ்க்கையில் ராஜபோகம், செல்வம் பெறுபவர்கள் நீங்கள்...

உங்களுக்கு இந்த பகுதியில் மச்சம் இருக்கா?: அப்போ உங்கள் வாழ்க்கையில் ராஜபோகம், செல்வம் பெறுபவர்கள் நீங்கள் தான்!

Date:

- Advertisement -

சாமுத்திரிகா சாஸ்திரத்தின்படி ஒருவரின் உடலில் சில இடங்களில் மச்சம் இருந்தால் அது மிகவும் அதிர்ஷ்டமாக காணப்படுகிறது.

Do you have a mole in this area?

உடலில் சில பாகங்களில் மச்சம் இருப்பது சிறப்பு என்றும் கருதப்படுகிறது. உதாரணமாக நம்முடைய உள்ளங்கையில் மத்தியில் மச்சம் இருந்தால் அவர் பெரிய பணக்காரர் ஆக வாய்ப்புள்ளது. அதேபோல உடலில் எந்தெந்த பகுதியில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Do you have a mole in this area
Do you have a mole in this area

இடுப்பில் மச்சம்

ஒருவருக்கு இடுப்பில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டத்தின் குறியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஒரு பெண்ணின் இடைப்பகுதியில் மச்சம் இருந்தால் அவர் மிகுந்த செல்வந்தராகவும் ஆளுமை கொண்டவராகவும் வளர்ச்சி அடைவார். அதேபோல ஆணின் இடுப்பில் மச்சம் இருந்தால், அவரின் எந்த ஒரு செயலிலும் மிகுந்த அதிர்ஷ்டத்தை அடைந்திடுவார்.

வெற்றிலையை பூஜையில் எப்படி வைக்க வேண்டும் என்று தெரியுமா.?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

நெற்றியில் மச்சம்

ஒருவருக்கு நெற்றியில் மச்சம் இருப்பின் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதே சமயம் ஒருவரின் நெற்றியின் நடுவே மச்சம் இருப்பின் அவர் மிகவும் மகத்தான நபராக திகழ்வார். அனைத்து விதமான பொன் பொருள் சேர்க்கை, மரியாதை உண்டாகும்.

வலது கன்னத்தில் மச்சம்

உங்களுடைய வலது கன்னத்தில் மச்சம் இருந்தால், அவர்கள் எந்த ஒரு துறையில் இருந்தாலும் சிறந்த வெற்றி அடைய முடியும். குறைவான உழைப்பின் மூலம் அதிக செல்வத்தையும், வெற்றியும், சம்பாதிப்பார்கள். இளம் வயதிலேயே அவர்கள் சகல விதமான செல்வங்களையும் அடைந்து விடுவார்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

மூக்கின் மீது மச்சம்

ஒருவரின் மூக்கின் மீது மச்சம் இருந்தால், அவர் பெரிய அதிர்ஷ்டசாலியாகக் கருதப்படுகிறார். குறிப்பாக அவரின் மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால், அவருக்கு சகல விதத்தில் மரியாதையும், ஆடம்பரங்களும், சுகபோகங்களும் வந்து சேரும்.

உள்ளங்கை நடுவில் மச்சம்

ஒருவரின் உள்ளங்கையில் நடுவில் மச்சம் இருந்தால், அவர் தொட்டது அனைத்தும் பொன்னாகும். தன்னுடைய வாழ்க்கையில் இருக்கும் முயற்சிகள் எல்லாவற்றிலும் நல்ல வெற்றி கிடைக்கும். என்னுடைய கைகளை மூடும் போதும் அவரின் மச்சம் தெரியும் வகையில் இருந்தால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் வெற்றியும், நிறைய சம்பாதிக்கவும் முடியும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

கட்டைவிரலில் மச்சம்

ஒருவருக்கு கட்டை விரலில் மச்சம் இருந்தால். அவர் ஒரு பெரிய ஆளுமையான மற்றும் முக்கியமான ஒருவராக சமூகத்தில் இருப்பார். எப்படி எந்த ஒரு வேலை செய்வதற்கும் கட்டைவிரல் மிகவும் முக்கியமானதாக இருக்கிதோ அதேபோல இவர் முக்கிய புள்ளியாக விளங்குவார். இவரை தேடி வெற்றி வரும். இவரின் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது.

Must Read : சுவையாக ரசம் செய்யக்கூடிய முறை!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories