வி தமிழ் டிவி யின் அன்பு வாசகர்களுக்கு வணக்கம்..! இந்த பதிவை படிக்க வந்திருக்கிறீர்கள் என்றால் நீங்கள் மாங்காயை நிறைய விரும்பி சாப்பிடுவீர்கள் என்று நினைக்கின்றேன். நீங்கள் மட்டும் கிடையாது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மாங்காய் என்றால் விரும்பி உண்பார்கள். இன்னும் சொன்னால் மாங்காயை பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. சரி மாங்காயில் உள்ள தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? என்னது மாங்காயிலும் தீமைகள் உள்ளதா என்று கேட்பீர்கள். ஆனால் மாங்காயில் தீமைகளும் உண்டு. அதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!

Disadvantages of mangoes
நம்மில் பலரது வீடுகளில் மாங்காய் பயன்படுத்தாமல் சாம்பாரே வைக்க மாட்டார்கள். மாங்காயில் எத்தனையோ வகை உணவுகளை செய்து சாப்பிட்டு வருகிறார்கள். அதுபோல மாங்காயில் பல்வேறு சத்துக்களும் இருக்கிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
அதாவது நார்ச்சத்து, வைட்டமின் சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளிட்ட சத்துக்கள் நிறைய காணப்படுகின்றன. அதனால் மாங்காயில் உள்ள சத்துக்கள் பல நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
என்ன தான் மாங்காயில் பல நன்மைகள் உள்ள போதிலும், அதனால் சில தீமைகளும் இருக்கின்றது. அதாவது அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான். அது மாதிரி தான் மாங்காயும். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது நமக்கு தீமைகளை விளைவிக்கும்
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : இந்த டிப்ஸ மட்டும் ஃபாலோ செய்யுங்க.. ரோஜா செடி என்ன; ரோஜா தோட்டமே வெச்சிக்கலாம்… அதுவும் கொத்து கொத்தான ரோஜா பூக்களோட..!!
ஒரு நாளைக்கு எத்தனை மாங்காய் சாப்பிட வேண்டும்..?
அதாவது ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு மாங்காயிற்கு மேல் சாப்பிடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. அதுபோல வெயில் காலங்களில் மாங்காய் நிறைய சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காரணம் வெயில் நேரத்தில் மாங்காய் சாப்பிடுவதால் உடலில் அதிக உஷ்ணத்தை உண்டாக்கும். இதனால் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். அதனால் வெயில் நேரத்தில் மாங்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : காரசாரமான சுவையில் பேச்சலர்ஸ் கார சட்னி இதுமாதிரி அரைச்சா ருசியில மயங்கிடுவீங்க! ருசியோ ருசி !!!