பீஜிங்: முட்டைகளில் ஆம்லெட், ஆஃப்பாயில் மற்றும் கலக்கி என பல்வேறு வகைகளில் சாப்பிட்டு உள்ளோம். ஆனால், சிறுநீரில் வேகவைத்த முட்டையை கேள்வி பட்டதுண்டா? சீனாவில் மிகவும் பிரபலமான இந்த உணவை அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.
‘விர்ஜின் பாய்ஸ் எக்’ என்ற வேகவைத்த முட்டை என்றால் என்ன? சீனர்கள் அதை விரும்பி உண்பது ஏன்? என்பது பற்றி இங்கே காணலாம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஆசிய நாடுகளில் ஒன்றான சீனாவில் வாழும் மக்கள் மத்தியில் சில வினோத பழக்க வழக்கங்கள் காணப்படும். ‘உணவே மருந்து’ என்று நமது நாட்டு உணவு பண்டங்களுக்கு நாம் முக்கியத்துவம் தருவதுபோல், சீனர்களும் தங்கள் நாட்டு உணவினை ஆரோக்கியமானதாக கருதுகிறார்கள். விர்ஜின் பாய்ஸ் எக்: சீனாவில் ஓடுவது பறப்பது மட்டுமில்லாது ஒருபடி மேலே போய் நாம் அருவருப்பாக பார்க்கும் பல உயிரினங்களையும் பிடித்து வேகவைத்து சுடச்சுட சாப்பிடுவார்கள்.
உதாரணமாக தவளை, பாம்பு என ஒன்று விடாமல் சமைத்து ருசித்து சாப்பிடுவார்கள்… சீனர்களின் வினோத உணவு பழக்க வழக்கத்திற்கு மற்றும் ஒரு எடுத்துக்காட்டு போல இருப்பது.. அவர்கள் விரும்பி உண்ணும் “விர்ஜின் பாய் எக்” என்ற வேக வைத்த முட்டை.. அது என்ன விர்ஜின் பாய் என்று நினைக்கிறார்களா… இந்த வேக வைத்த முட்டையின் சிறப்பே அதில்தான் அடங்கியிருக்கிறதாம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
சிறுநீரில் வேக வைத்த முட்டை:
அதாவது, வசந்த காலம் என்று அழைக்கப்படும் பிப்ரவரி – ஏப்ரல் மாத காலங்களில் இந்த உணவினை சீன மக்கள் விரும்பி உண்ணுகிறார்கள்.. இது ஸ்னாக்ஸ் மட்டுமில்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது என்கிறார்கள் சீனர்கள்.. சரி இந்த பெயர் காரணம் வருவதற்கான காரணமே அது தயாரிக்கப்படும் முறையில் தான் இருக்கிறது.
சிறுவர்களின் சிறுநீர்:
சாதாரணமாக முட்டை என்றால் நாம் தண்ணீரில் வேக வைத்து தான் சாப்பிடுவோம்.. சீனர்களின் இந்த “விர்ஜின் பாய்ஸ் எக்ஸ்” என்பது, இளம் வயதினரின் சிறுநீரில் ஊற வைத்து அதை அந்த சிறுநீரிலேயே வேக வைப்பதுதான். பெரும்பாலும் பத்து வயதுக்குள்ளான சிறுவர்களது யூரினில் வேகவைத்து இந்த முட்டை தயாரிக்கப்படுகிறது. சீனாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டோங்யாங் என்ற பகுதியில் வசிக்கும் மக்கள் மத்தியில் இந்த பழக்கம் அதிகமாக இருக்கிறது. முட்டையை வேகவைப்பதற்கு என்று ஆரம்ப பள்ளிகளில் மாணவர்களின் சிறுநீரை பக்கெட்டுகளில் சேகரித்து அங்கிருக்கும் மக்கள் கொண்டு போய் விடுவார்களாம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : காலிஃபிளவர் ஊறுகாய் செய்வது எப்படி..?

மூட்டு வலிகள் நீங்கும்:
பிறகு சிறுநீரில் ஊறச்செய்து, பின்னர் அதை வேகவைப்பார்களாம்… முட்டை வெந்தவுடன் சில மணி நேரங்கள் சிறுநீரில் வைப்பார்களாம். அதன் பிறகுத்தான் இந்த முட்டையை சாப்பிடுவார்களாம். இந்த முட்டை ருசியாக இருப்பதோடு உடலுக்கு ஆரோக்கியமானது என்று சொல்கிறார்கள் சீனர்கள்.. இது தொடர்பாக அங்குள்ள கடைக்காரர்கள் கூறும் போது, “இந்த முட்டையை நீங்கள் சாப்பிட்டால் உங்களுக்கு வெப்ப தாக்கு வராது. மூட்டுகளில் உண்டாக்கும் வலிகள் நீங்கும். வாசனைக்காகவும் சிறுநீரில் முட்டைகளை வேக வைக்கிறோம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இங்கு இருக்கும் எல்லோரும் மதிய உணவில் இந்த விர்ஜின் பாய்ஸ் எக் தவறாமல் இருக்கும் என்றார். தவளை,பூரான், பல்லி, விர்ஜின் பாய்ஸ் எக் சாப்பிடும் தகவலுக்கே மிரண்டு விடாதீர்கள்.. சீனர்களின் வினோத உணவு பழக்க வழக்கங்களின் வரிசையில் இன்னும் பல உணவுகள்இருக்கிறது. தவளை, நத்தை, பூரான், பல்லி மற்றும் வெட்டுக்கிளி போன்றவற்றையும் சீன மக்களின் விருப்பமான உணவுகளாகும்.

நமது ஊரில் கோழிக்கறியை வெட்டி கடைகளில் தொங்க விடப்பட்டு உள்ளது போல சீனாவில் பூனைகளை வெட்டி கடைகளில் விற்பனைக்கு தொங்க வைத்து இருப்பார்களாம். இவைகள் அனைத்துமே இயற்கையின் படைப்புகள். எனவே, உணவில் எந்த ஏற்றத்தாழ்வுகளோ முகம் சுளிப்பதோ தேவையில்லை என்கிறார்கள் சீனர்கள். அவர்கள் விரும்புவதை அவர்கள் சாப்பிடுகிறார்கள். இதை எப்படி அருவருப்பாக மற்றவர்கள் பார்க்க முடியும் என்பது பொதுவான கேள்வியாக இருக்கிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : ஓட்டுரிமை இருந்தும் ஏன் 1000 ரூபாய் உரிமைத்தொகை எனக்கு கொடுக்கல.? ஸ்டாலினிடம் பெண் வாக்குவாதம்