Friday, July 11, 2025
Homeதெரிந்து கொள்வோம்சீனாவில் ஒரு ஊரே ஒரு குடியிருப்பில்.. 21000 பேர் வாழும் ரீஜண்ட் இன்டர்நேஷனல் பற்றி தெரியுமா?

சீனாவில் ஒரு ஊரே ஒரு குடியிருப்பில்.. 21000 பேர் வாழும் ரீஜண்ட் இன்டர்நேஷனல் பற்றி தெரியுமா?

Date:

- Advertisement -

பெய்ஜிங்: ஒரு ஊரே ஒரு குடியிருப்பில் வசிக்கிறது.. சீனாவில் அமைந்துள்ள 39 தளங்களை உடைய ரீஜண்ட் இன்டர்நேஷனல் (Regent international) எனும் பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 21000 மக்கள் வசித்து கொண்டுள்ளனர். நீச்சல் குளங்கள் சலூன் கடைகள், இன்டர்நெட் மையங்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட அனைத்தும் இதிலேயே அமைந்திருக்கிறது.

சென்னையில் இருக்கும் மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளை பார்க்கும் போது பலரும் ஆச்சர்யத்துடன் யோசனை செய்து பார்ப்பார்கள்.. இதில் வசிக்கும் இத்தனை நபர்களுக்கு காய்கறி கடைகள், மளிகை சாமான்கள், முடிவெட்டுவது, பால் வாங்குவது, இவைகள் அனைத்தும் எப்படி கிடைக்கும். குறிப்பாக இத்தனை வீடுகளுக்கு எத்தனை போர் போட்டு தர முடியும்…

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

china apartment regent international
china apartment regent international

அப்படியே போர் போட்டு கொடுத்தாலும் தண்ணீர் வருமா, தண்ணீரின் தேவையை எப்படி சமாளிக்கிறார்கள். இதில் கார் பார்க்கிங் எப்படி அமைந்திருக்கும் என பல கேள்விகள் வரும். சாதாரணமாக 500, 1000 முதல் 1000 குடியிருப்புகள் இருந்தாலே இத்தனை கேள்விகள் நமக்கும் எழும்.

வெறும் ஆயிரம் பேர் வசிக்கும் அடுக்குமாடி வீடுகளை பற்றி நினைக்கும் போது தலை சுற்றும் நிலையில், ஒரு ஊரே ஒரு குடியிருப்பில் இருக்கிறது என்றால் உங்களால் யோசிக்க முடிகிறதா.. அதுவும் ஒரே குடியிருப்பில் சுமார் 21,000 நபர்கள் வசிக்கிறார்கள் என்றால் எண்ணிப்பாருங்கள். மேலும் 10,000 நபர்கள் குடியிருக்க முடியும். சீனாவில் இந்த பிரம்மாண்டமான பங்களா இருக்கிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

china apartment regent international

ரீஜண்ட் இன்டர்நேஷனல் கட்டிடம் சீனாவின் கியான்ஜியாங் செஞ்சுரி நகரில் அமைந்து உள்ளது. ஹாங்சோவின் மத்திய வணிக மாவட்டத்தில் அமைந்து இருக்கும் குடியிருப்புகளில மொத்தம் 20,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர், மேலும் அதில் 10,000 பேர் தங்குவதற்கும் இடவசதி இருக்கிறது. அந்த குடியிருப்பில் குடியிருப்பவர்களுக்கு தேவையான எல்லா வசதிகளும் அங்கு உள்ளது. அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல தேவையில்லை…

இதையும் படிங்க : கேரட்டிற்கான தமிழ் பெயர் இது தானா..?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

சூப்பர் மார்க்கெட் வேண்டுமா அங்கே இருக்கிறது. உங்கள் தலைமுடியை வெட்டுவதற்கான இடம் தேவையா அதுவும் இருக்கிறது. நீச்சல் குளமும் இருக்கிறது. இன்டர்நெட் மையங்கள். வீட்டிற்கு தேவையான எல்லா பொருட்களையும் வாங்கக்கூடிய இடம் மற்றும் பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த இடங்கள் அங்கு இடம் பெற்றுள்ளன.

china apartment regent international

சமீபத்தில் இந்த பிரம்மாண்டமான ரீஜண்ட் இன்டர்நேஷனல் கட்டிடத்தின் ட்ரோன் காட்சிகள் அங்கு இருக்கும் வீடுகளின் எண்ணிக்கையை வெளிப்படுத்தின. அந்த குடியிருப்பில் மொத்தமுள்ள குடியிருப்பில் மூன்றில் இரண்டு சதவீதம் மட்டுமே மக்கள் குடியிருக்கிறார்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

சரி இந்த ரீஜண்ட் இன்டர்நேஷனலில் வாழுகின்ற மக்கள் யார்? இங்கு வசிக்கக்கூடியவர்களை ‘ஹேங் பியாவோ’ என்று அழைக்கப்படுகிறார்கள். அதாவது ஹாங்ஜோவுக்கு வேலை தேடி அங்கு சென்றவர்களை இப்படி சொல்கிறார்கள். இந்த கட்டிடத்தில் அதிகமான எண்ணிக்கையில் பட்டதாரிகள் மற்றும் தொழில் செய்பவர்கள் வசிக்கிறார்கள். இன்ஸ்டா, டிக் டாக் மற்றும் ட்விட்டர் ஆகிய சமூக வலைதளங்களில் இந்த கட்டிடம் பற்றி வேகமாக பரவ தொடங்கியதால் பலரும் , ரீஜண்ட் இன்டர்நேஷனல் கட்டிடம் குறித்து இப்போது தேடும் ஆர்வம் அதிகளவில் உள்ளது.

தி ரீஜண்ட் இன்டர்நேஷனல் குடியிருப்பில் இருப்பவர்களின் வாழ்க்கைச் செலவு குடியிருப்புகளை வைத்து மாறுபடுகிறது.. கட்டிடத்தில் நீங்கள் எங்கு தங்க விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து மாறுபடும். ஜன்னல்கள் இருக்காத சிறிய அடுக்குமாடி வீடுகளுக்கு வழக்கமாக ஒரு மாதத்திற்கு 210 டாலர் செலவாகும். இந்திய மதிப்பில் 17,495 ரூபாய் மாதம் மாதம் நீங்கள் குடியிருப்பதற்கு செலவு செய்ய வேண்டியதிருக்கும் அதேநேரம் ஜன்னல் வசதியுடன், சூரிய ஒளியை நாள்தோறும் பார்க்க ஆசைப்பட்டால் பால்கனிகளுடன் அமைந்த பெரிய வீடுகளுக்கு வாடகையாக மாதம் 570 டாலர் செலவாகும். அதாவது இந்திய மதிப்பில் சொகுசு குடியிருப்புகளுக்கு வாடகையாக மட்டும் 47,486 ரூபாய் செலவு செய்ய வேண்டி இருக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : தேங்காய், தக்காளி சேர்க்காமல் மதுரை நீர் சட்னி செய்வது எப்படி? 2 இட்லி கூடுதலாக சாப்பிடுவாங்க..!

china apartment regent international

கட்டிடம் 675 அடி உயரமும் 260,000 சதுர மீட்டர் அகலமும் கொண்டு அமைந்து இருக்கிறது. இந்த கட்டிடத்தை சீனாவின் மிகப்பெரிய கட்டிடங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய 7 நட்சத்திர ஓட்டல்களில் ஒன்றான சிங்கப்பூர் சாண்ட்ஸ் ஹோட்டலின் தலைமை வடிவமைப்பாளர் அலிசியா லூ என்பவரால் முதலில் இந்த கட்டிடத்தை வடிவமைக்கப்பட்டது. முதலில் 6 நட்சத்திர உணவு விடுதியாக இருக்க வேண்டும் என்று கட்டப்பட்டது. ஆனால் அது குடியிருப்பு பகுதியாக மாறிவிட்டது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories