Chili Senna Masala at home : பொதுவாக சென்னா மசாலா பூரி, சப்பாத்தி போன்ற டிபன் வகைகளுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். எல்லா ஹோட்டல்களிலும் சென்னா மசாலா கிடைக்கும். ஆனால் நம் வீட்டில் கேப்சிகம் சேர்த்து எப்படி எளிமையாக சமைப்பது. குடைமிளகாயில் கொலஸ்ட்ரால், சோடியம், கொழுப்பு சத்து ஆகியன குறைவாக உள்ளது அதனால் உடல் எடையை குறைக்க உதவும். குடைமிளகாய் வயது முதிர்வினை தடுக்கும் தன்மை உடையது. புற ஊதாக்கதிர்களால் தோலில் உண்டாகும் சுருக்கம், கருமை, வறட்சியை நீக்கி தோலுக்கு ஆரோக்கியம் தருகிறது. மூட்டு வலி வராமலிருக்க மருந்தாகிறது.

சென்னா மசாலா
மசாலாப்பொருட்களால் செய்யக்கூடிய ஒரு கறி உணவாகும். சென்னா மசாலாவை வடஇந்தியாவில் ‘சோலே மசாலா’ என்று அழிக்கப்படுகிறது. இதில் சேர்க்கப்படும் கொண்டக்கடலையில் உள்ள ஃபோலேட்மற்றும் மக்னீசியம் போன்றவை இரத்த நாளங்களை வலிமையடைய செய்கிறது மேலும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து உடலை ஆரோக்கியமாக செயல்பட உதவும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Read Must : கேழ்வரவு மாவில் ருசியான களி செஞ்சி பாருங்க!
சோலே மற்றும் சன்னா இந்த இரண்டு சொற்களும் கொண்டைக்கடலையைக் குறிக்கிறது. இந்த சைவ சுண்டல் கறியை ஒரு முக்கிய உணவாக அல்லது சைட் டிஷ் ஆக சாப்பிடலாம். குழைந்தைகளின் ஆரோக்கியத்திற்கு கொண்டைக்கடலையில் இருக்கக்கூடிய புரதச்சத்து பெரிதும் பயனுள்ளதாக இருக்கின்றது. இந்த கேப்சிகம் சென்னா மசாலாவை அடிக்கடி செய்து கொடுத்து பாருங்கள் உங்களுடைய குழந்தையின் வளர்ச்சி நன்றாக இருக்கும். இந்த சுவையான சென்னா மசாலாவை எப்படி செய்யவேண்டும் என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்ப்போம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Chili Senna Masala at home | குடைமிளகாய் சென்னா மசாலா
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் சென்னா
- 1 வெங்காயம்
- 1 குடைமிளகாய்
- 1 தக்காளி
- 1 தேக்கரண்டி பூண்டு ,இஞ்சி விழுது
- 1/2 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
- 1/2 தேக்கரண்டி அளவு தனியாத்தூள்
- 1/4 தேக்கரண்டி கரம் மசாலாத்தூள்
- 1/4 தேக்கரண்டி மஞ்சள்தூள்
- 1/4 தேக்கரண்டி ஆம்சூர் பவுடர்
- 1/4 தேக்கரண்டி கசூரி மேத்தி
- 2 பிரிஞ்சி இலை
- 2 சிட்டிகை சாட் மசாலா
- 3 தேக்கரண்டி எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
செய்முறை
குடை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். தக்காளி, வெங்காயம் இவற்றை தனித்தனியாக அரைத்து எடுத்து கொள்ளவும். சன்னாவை ஊறவைத்து அதனுடன் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
Must Watch Video : வவ்வால் மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரிஞ்சி இலையை போட்டு தாளித்து அரைத்த வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும், பின்பு அதில் பூண்டு, இஞ்சி விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கி அதனுடன் தக்காளி விழுதை சேர்த்து நன்றாக சுருள வதக்கவும். இந்த கலவையுடன் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை சேர்த்து 3 நிமிடம் வதக்கி பின் சாட்மசாலாவை தவிர்த்து மற்ற எல்லா தூள் வகைகளையும் சேர்க்கவும்.
5 நிமிடம் வதக்கி வேக வைத்துள்ள கடலையை சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு மூடி வைத்து மீண்டும் 8நிமிடம் வேக வைக்கவும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
( கடலையில் உப்பு சேர்த்து வேகவைத்துள்ளதால் உப்பினை குறைவாக சேர்க்கவும் ) பின்னர் அதை திறந்து வைத்து வேக விடவும், கொத்தமல்லி, சாட் மசாலா இவற்றை தூவி பரிமாறவும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇