Friday, July 11, 2025
Homeஆன்மீகம்நமது வேண்டுதல் நிறைவேற வேண்டுதல் சீட்டு பரிகாரம்

நமது வேண்டுதல் நிறைவேற வேண்டுதல் சீட்டு பரிகாரம்

Date:

- Advertisement -

திருமணம் நடைபெற வேண்டும், குழந்தை பாக்கியம் உண்டாக வேண்டும், குழந்தைகள் நன்கு படிக்க வேண்டும், விரும்பிய வேலை கிடைக்க வேண்டும், சொந்தமாக வீடு வாங்க வேண்டும், கடன் பிரச்சனை விலக வேண்டும், மன நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும் என்று பெரும்பாலானவர்களுக்கு பலவிதமான வேண்டுதல்கள் இருக்கும்.

இந்த வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும் அந்த வழிமுறைகளை பின்பற்றுவதோடு கடவுள் வழிபாட்டையும் நாம் மேற்கொள்ளும் பொழுது அந்த வேண்டுதல்களில் எந்தவித தடைகளும் உண்டாகாமல் நடைபெறும். அப்படி வேண்டுதல் நிறைவேறுவதற்கு எந்த கோவிலுக்கு சென்று எப்படி வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் பற்றிய பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

cettu pariharam
cettu pariharam

Venduthal niraivera cettu pariharam

வேண்டுதல் நிறைவேற சீட்டு பரிகாரம் எந்த கடவுளை நாம் வேண்டினாலும் முழு மனதோடு வேண்டிக்கொண்டால் தான் அந்த வேண்டுதலுக்குரிய பலன் நமக்கு வரும். மேலும் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு விதமான வழிபாட்டு முறைகள் இருக்கும். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு ஆலயத்திலும் சிறப்புகள் நிறைந்து இருக்கும். அப்படி ஒரு சிறப்பு மிகுந்த கோவிலை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

திருச்சி அருகே உறையூர் என்ற கிராமம் இருக்கிறது. அந்த ஊரில் வெக்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த அம்மனுக்கு உள்ள தனி சிறப்பு என்னவென்றால் இந்த அம்மனுக்கு மேலே கூரை இல்லை. எவ்வளவு வெயில் அடித்தாலும், எவ்வளவு மழை பெய்தாலும் இந்த அம்மனின் மீது மழையும் வெயிலும் விழுந்து கொண்டுதான் இருக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : ஆனி மாதம் பிறந்த குழந்தைகளின் குணநலன், அதிர்ஷ்டம், தொழில் எப்படி இருக்கும் தெரியுமா?

எத்தனையோ நபர்கள் மேற்கூரை போடும் முயற்சியில் ஈடுபட்டும் அதில் தடைகள் உண்டாகி இன்றளவும் மேல் கூரை கட்டக்கூடாது என்று அம்மனின் உத்தரவினால் மேல்கூரை இல்லாமலேயே அந்த அம்மன் அந்த இடத்தில் குடிகொண்டு இருக்கிறார். அந்த கோவிலுக்கு சென்றால் அங்கு வேண்டுதல் சீட்டு என்று மஞ்சள் வண்ணத்தில் ஒரு பேப்பரை தருவார்கள் அதில் நம்முடைய வேண்டுதல் எதுவோ ஒரு வேண்டுதலை மட்டும் நாம் எழுதி அங்கு உள்ள மரத்தில் கட்டி விட வேண்டும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பிறகு தங்களின் பெயரில் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். அங்கு இதோடு மட்டுமின்றி அம்மனுக்கு புடவை வாங்கி சாற்றுவதோ அல்லது அம்மன் சாற்றிய புடவையை வீட்டிற்கு வாங்கி வந்து வைப்பது மிகவும் நல்லதாக திகழ்கிறது.

நமது வேண்டுதல் நிறைவேறிவிட்டால் அம்மனுக்கு புடவை வாங்கி சாற்ற வேண்டும். முக்கியமான குறிப்பு இந்த வேண்டுதல் ஆனது நம்முடைய வாழ்க்கையை முன்னேற்றுவதற்கும் பிறருக்கு எந்த கெடுதலும் விளைவிக்காத ஒன்றாகவும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த வேண்டுதல் நிறைவேறும். முழு நம்பிக்கையுடன் அம்மனை சரணாகதி அடைந்து அம்மனுக்கு புடவை வாங்கி சாற்றுகிறோம் என்று வேண்டுதல் வைத்து வர நம்முடைய வேண்டுதல் விரைவாக நிறைவேறும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : விபூதியை உடலில் எங்கு பூசி கொள்ளலாம்? கடைபிடிக்ககூடிய விதிமுறைகள்

மிகவும் சுலபமாக தெய்வத்தின் மீது முழு நம்பிக்கை வைப்பவர்கள் இந்த கோவிலுக்கு சென்று அம்மனை வழிபட்டு தங்களின் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளலாம்

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories