Friday, July 11, 2025
Homeலைப்ஸ்டைல்அழகு குறிப்புகள்ஆயுர்வேதம் முதல் போடோக்ஸ் வரை… வயதானாலும் அழகாக காட்சி தரும் இந்திய பிரபலங்களின் பியூட்டி ரகசியங்கள்.!

ஆயுர்வேதம் முதல் போடோக்ஸ் வரை… வயதானாலும் அழகாக காட்சி தரும் இந்திய பிரபலங்களின் பியூட்டி ரகசியங்கள்.!

Date:

- Advertisement -

தங்களின் வயதை விட இளமையுடன் காட்சியளிக்கும் இந்திய பிரபலங்களின் ஆன்டி-ஏஜிங் வழங்கங்களில் நவீன சிகிச்சை முறை மற்றும் பண்டைய ஆயுர்வேத முறைகளின் கலவை இடம் பெற்றிருக்கிறது. எனவே இந்திய பிரபலங்களின் வயதை குறைத்து காட்டக்கூடிய ரகசியங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

Beauty secrets of Indian celebrities

Beauty secrets of Indian celebrities (10)

முதுமை என்பது நிச்சயம் எல்லோருக்கும் வர கூடியது, ஆனால் அந்த முதுமையை அழகாக பெருவது என்பது ஒரு கலை. நம் நாட்டில் உள்ள பல பிரபலங்கள் அவர்களின் வயதிற்கும், தோற்றத்திற்கும் துளியும் சம்பந்தம் இருக்காது.ஆனால் அவர்கள் இளமையாகவே இருப்பார்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Beauty secrets of Indian celebrities (1)
Beauty secrets of Indian celebrities (1)

தங்களின் வயதை காட்டிலும் இளமையாக காட்சியளிக்கும் இந்திய பிரபலங்களின் ஆன்டி-ஏஜிங் வழங்கங்களில் நவீன சிகிச்சை முறை மற்றும் பண்டைய ஆயுர்வேத முறைகளின் கலவை இடம் பெற்றிருக்கிறது. எனவே இந்திய பிரபலங்களின் வயதை குறைத்து காட்டக்கூடிய ரகசியங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

இதையும் படிங்க : இந்தியாவில் தடை செய்யப்பட்ட இடங்கள் எது தெரியுமா?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஆயுர்வேதம்:

Beauty secrets of Indian celebrities (2)
Beauty secrets of Indian celebrities (2)

நாட்டில் இருக்கும் பல்வேறு பிரபலங்களால் கடைபிடிக்கப்படும் ஒரு அழகு நடைமுறையாக பழங்கால அமுதமாக கருதப்படும் ஆயுர்வேதம் இருக்கிறது. பழங்கால ஆயுர்வேதம் என்பது இந்திய பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றிய வாழ்க்கை விஞ்ஞானமாக குறிப்பிடப்படுகிறது. நம்முடைய உடல் மற்றும் மனம் இரண்டிலுமே சமநிலையை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டது ஆயுர்வேதம்.

மனதை தெளிவாக வைத்திருக்க தியானம்:

Beauty secrets of Indian celebrities (3)
Beauty secrets of Indian celebrities (3)

பல பிரபலங்களும் தங்களது காலை பழக்க வழக்கத்தில் தியானத்தை சேர்த்து கடைபிடித்து வருகின்றனர். தினசரி தியானத்தில் ஈடுபடுவது மனஅழுத்தத்தை குறைத்து ரிலாக்ஸை கொடுக்கிறது. இதன் மூலம் நம் சருமம் இளமைத் தோற்றத்தை பராமரிக்கிறது. பல பிரபலங்கள் தவறாமல் தினசரி தியானம் செய்யும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இது அவர்கள் அழுத்தமான சூழலை சுலபத்தில் கையாள அல்லது முகத்தில் பொலிவு மற்றும் பாசிட்டிவ் ஆரா-வை பெற பயன்படுகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

நவீன சிகிச்சைகள்:

Beauty secrets of Indian celebrities (4)
Beauty secrets of Indian celebrities (4)

பிரபலங்களின் தினசரி அழகு பராமரிப்பு நடைமுறையில் அதிகளவில் வீட்டு வைத்தியங்கள் இருந்தாலும் கூட, தங்களுக்கு வருகின்ற வயதான அறிகுறிகளை தடுக்க நவீன சரும பராமரிப்பு சிகிச்சை முறைகளை நாடி போகின்றனர்.

போடோக்ஸ் மற்றும் ஃபில்லர்ஸ்:

Beauty secrets of Indian celebrities (5)
Beauty secrets of Indian celebrities (5)

இந்தியாவில் இருக்கும் பிரபலங்களுக்கிடையில் போடோக்ஸ் மற்றும் ஃபில்லர்ஸ் உள்ளிட்ட அறுவைசிகிச்சை அல்லாத அழகியல் நடைமுறைகள் மிக பிரபலமாக இருக்கிறது. இந்த சிகிச்சைகள் முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி அழகை மேலும் அழகு படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளன. சர்ஜரி செய்ய வேண்டிய அவசியமில்லாமல் சருமத்தை இளமையாக மேலும் புத்துணர்ச்சி தோற்றத்துடன் இந்த சிகிச்சைகள் வைக்கின்றன.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Must Read : சுவையாக ரசம் செய்யக்கூடிய முறை!

லேசர் சிகிச்சைகள்:

Beauty secrets of Indian celebrities (6)
Beauty secrets of Indian celebrities (6)

பிக்மென்டேஷன், மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள், சரும தளர்ச்சி போன்ற பல தோல் பிரச்சனைகளுக்கு மிகவும் சிறந்த முடிவுகளை கொடுக்கும் சிகிச்சை முறையாக உள்ளதால் லேசர் சிகிச்சைகள் பல பிரபலங்களால் விரும்பப்படுகின்றன.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

டயட் & ஹைட்ரேஷன்:

Beauty secrets of Indian celebrities (7)
Beauty secrets of Indian celebrities (7)

நாம் எடுத்து கொள்ளும் பானங்கள் மற்றும் உணவுகள் மூலம் சரும அழகை பராமரிப்பது என்பது மிகவும் பயனுள்ள வழிமுறையாக பல்வேறு ஆராட்சியாளர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. எனவே இளமையான சருமம் மற்றும் ஆரோக்கியமான உடலை பாதுகாக்க சீரான டயட் மற்றும் தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிப்பது கணிசமாக பயன்படும். அந்த வகையில் பல இந்திய பிரபலங்கள் தங்கள் டயட்டில் மிக கவனத்துடன் இருக்கிறார்கள், மேலும் இது அவர்களின் உடல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது.

ஊட்டச்சத்து நிறைந்த டயட்:

Beauty secrets of Indian celebrities (8)
Beauty secrets of Indian celebrities (8)

பிரபல அழகுக்கலை நிபுணரான டாக்டர் மோனிகா கபூர் கூறுகையில், உடலை போலவே சருமம் ஆரோக்கியமாக இருக்க ஊட்டச்சத்துக்கள் மிகவும் அவசியம். இதன் பொருள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ், வைட்டமின்ஸ் மற்றும் நீர்ச்சத்துகள் அடங்கிய டயட் முக்கியம். பல இந்திய பிரபலங்கள் தங்கள் டயட்டில் பழங்கள், காய்கறிகள், நட்ஸ், சீட்ஸ் மற்றும் கீரை உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட் உணவுகளை தவறாமல் சேர்க்கின்றனர். இவற்றுடன் சரும ஆரோக்கியத்திற்காக ஆளி விதை மற்றும் மீன் போன்ற ஒமேகா-3 உணவுகளும் சேர்த்து கொள்கிறார்கள் என்றார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஹைட்ரேஷன்:

Beauty secrets of Indian celebrities (9)
Beauty secrets of Indian celebrities (9)

தினசரி நிறைய அல்லது தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால் சருமம் ஆரோக்கியமாக இருக்கிறது மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை தக்க வைத்து கொள்கிறது. பல இந்திய பிரபலங்கள் தினசரி ஆறு கிளாஸ் தண்ணீர் மற்றும் பல கப் மூலிகை டீ குடிக்கிறார்கள் மற்றும் சீரான டயட்டை கடைபிடிக்கிறார்கள். மொத்தத்தில் பாரம்பரிய இந்திய மருத்துவ முறையான ஆயுர்வேதம், யோகா ஆகிய உடல் பயிற்சி மற்றும் நவீன சிகிச்சை முறைகள் மற்றும் ஆரோக்கியமான உணவு முறை போன்ற பல விஷயங்களை கடைபிடித்து தங்கள் வயதிற்கு மிஞ்சிய அழகான தோற்றத்தில் காட்சி அளிக்கிறார்கள்.

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories