Thursday, July 10, 2025
Homeபொழுதுபோக்குAn unidentified acting hero suriya : பாதி உடலாய் மாறிய சூர்யா : அடையாளமே...

An unidentified acting hero suriya : பாதி உடலாய் மாறிய சூர்யா : அடையாளமே தெரியாத நடிப்பின் நாயகன் : வைரலான போட்டோ

Date:

- Advertisement -

An unidentified acting hero suriya : நேருக்கு நேர் படத்தின் மூலமாக திரை சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் சூர்யா. பல படங்களில் தொடர்ந்து நடித்து வரும் சூர்யா பலவித படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அது ஆக்சன், ரொமான்டிக், காமெடி, திரில்லர், சமூக அக்கறை கொண்ட படம் என நடித்து அசத்திவிடுகிறார் சூர்யா.

An unidentified acting hero suriya
An unidentified acting hero suriya

2022 ஆம் ஆண்டு வெளியான எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பின் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தின் படப்பிடிப்பில் இணைந்தார் சூர்யா. இந்த படமானது ஒரு பீரியாடிக் ஆக்சன் படம். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் கங்குவா படம் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

சிறுத்தை சிவா இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் சூர்யா 9 வேடங்களில் நடித்து கிட்டத்தட்ட 38 மொழிகளில் இந்த படம் வெளியாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்த சூர்யா அது பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். அது மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு பொங்கல் பரிசாக கங்குவா படத்தினுடைய இரண்டாம் பார்வை போஸ்டரையும் வெளியிட்டிருந்தார்கள்.

சூரரைப்போற்று வெற்றி கூட்டணி இணையும் 2 வது படமாக சூர்யாவின் 43 வது படம் அறிவிக்கபட்டுள்ளது. இந்த படத்திற்கான ப்ரீ-ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது நடந்து கொண்டுள்ளது. அது மட்டுமில்லாமல் இந்த படத்தில் கல்லூரி மாணவராக சூர்யா நடிக்க உள்ளதாகவும் இந்த படத்திற்காக உடல் எடையை எக்கச்சக்கமாக குறைப்பார் எனவும் கூறப்பட்டிருந்தது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

சூர்யாவின் 43 வது படமான இப்படத்தின் பெயர் புறநானூறு என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த படத்தின் முழு பெயர் இன்னும் சரியாக வெளியாகவில்லை. ஜிவி பிரகாஷ் இசையில், நஸ்ரியா, துல்கர் சல்மான், விஜய் வர்மா போன்ற பல நடிகர்கள் இந்த படத்தில் இணைந்துள்ளார்கள்.

Read Also : மயிலாடுதுறை அருகே 14 வருடங்களுக்குப் பிறகு கீழ மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஹிந்தி திணிப்பு, அரசியல், கல்லூரி மாணவர்களின் புரட்சி என சூப்பர் டூப்பர் எலிமெண்ட்டுகளை கொண்ட படமாக சூர்யா 43 உருவாகிறது எனவும் கூறப்பட்டிருக்கிறது. தற்போது உடல் எடையை குறைத்து கங்குவா படத்தின் உடலில் பாதி உடலோடு தோன்றும் சூர்யாவின் போட்டோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

An unidentified acting hero suriya
An unidentified acting hero suriya

படத்திற்காகவும் படத்தின் தன்மைக்காகவும் தன்னுடைய உடலை மாற்றிக்கொள்ளும் சில நடிகர்களுள் சூர்யாவும் ஒருவர் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. அந்த வகையில் இதுவரை இல்லாத வகையில் எக்கசக்கமாக உடல் எடையை குறைத்திருக்கும் சூரியாவின் போட்டோ தற்போது ரசிகர்களிடையே பெருத்த பாராட்டையும் நெகிழ்ச்சியையும் ஒருசேரப் பெற்றுவருகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

An unidentified acting hero suriya

இது சூர்யா தானா.. பல ஆண்டுகளுக்கு முன்பு சூர்யாவை பார்த்ததுபோல இருக்கிறதே… சூர்யாவின் அர்ப்பணிப்புக்கு யாருமே ஈடாக முடியாது… இதனால்தான் இவர் நடிப்பின் நாயகன் என எண்ணற்ற புகழ்ச்சியான வார்த்தைகளை ரசிகர்கள் இந்த போட்டோவிற்கு பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த போட்டோதான் தற்போது அவருடைய அன்பான ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பகிரப்பட்ட வருகிறது. இந்த வைரல் போட்டோவை நீங்கள் கட்டாயம் பார்ப்பீர்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories