விஜய் ஆண்டனி இசை அமைத்து வெளியான பல ஹிட் பாடல்களை எழுதிய பிரியன் இயக்குனராகவும்,ஹீரோவாகவும் அறிமுகமாகி உள்ள அரண் திரைப்படம் விரைவில் வெளியாகிறது. அந்த படத்தின் சமீபத்தில் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியானது நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரியன் அமலா ஷாஜி கேட்கக்கூடிய சம்பளம் குறித்து வெளிப்படையாக பேசியது பற்றி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அமலா ஷாஜி தனது இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் ரசிகர்களை வெறும் ரீல்ஸ் போட்டே சேர்த்து இருக்கிறார். ஜெயிலர் படத்தின் காவாலா பாடலுக்கு அவர் நடனமாடி வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ மிக பெரிய ட்ரெண்டானது மிகவும் குறிப்பிடத்தக்கது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

டான்ஸ் புயல் அமலா ஷாஜி : Amala Shaji
இன்ஸ்டாகிராமில் வித்தியாசமான முக பாவனைகள் காட்டியும், நடனம் ஆடியும் வீடியோ போடுவது, போல்ட்டான போட்டோஷுட் நடத்துவது ஆகவே,இதனால் அவர் பல ரசிகர்களை ஃபாலோயர்களாக அமலா ஷாஜி வைத்திருக்கிறார். சினிமா விழாவில் அவரை பற்றி நடிகரும், இயக்குனருமான பிரியன் பேசியதை பற்றி பெரிய பஞ்சாயத்தாகி இருக்கிறது.
ஹீரோவான பாடல் ஆசிரியர் :
இசையமைப்பாளர்கள், காமெடி நடிகர்கள் கதாநாயகனான நிலையில் பா. விஜய் போன்ற பாடலாசிரியர்கள் ஹீரோக்களாக மாறிவருகின்றன.அந்த வகையில் விஜய் ஆண்டனி இசையில் மஸ்காரா போட்டு மயக்குறியே, மக்காயல், வேலாயுதம் இன்ட்ரோ பாடல் என ஹிட் பாடல்கள் பல எழுதிய பிரியன் அரணம் படத்தை எழுதி,ஹீரோவாகவும் இயக்குனராகவும் இருக்கிறார்.அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசிய வீடியோவினை ஷேர் செய்து நடிகரும் விமர்சகருமான பிரசாந்த் ரங்கசாமி கேள்வியினை எழுப்பியுள்ளார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
முப்பது செகண்ட்டுக்கு இரண்டு லட்சம்:
பிரியன் மேடையில் பேசும்போது இது தன்னுடைய படத்தின் மேடை என்று வெளிப்படையாகவே இந்த விஷயத்தை பற்றி பேசியுள்ளார். சென்னையில் 2 நிமிட பாடலுக்கு நடனமாட ஒரு பொண்ணு 50 ஆயிரம் கேட்குது ஆனா வெறும் 30 செகண்ட் நடனமாட கேரளா பொண்ணு ஃபிளைட் டிக்கெட், 2 லட்சம் பணம் கேட்குது என பிரியன் பேசியுள்ளார்.மேலும் திரௌபதி இயக்குனர் மோகன் ஜி பேசும் போது நானே ஃபிளைட்ல போனதில்லை என்றும் அவருடைய பெயரை சொல்ல சொல்லி கேட்டார்.அதற்கு வேற யாருமில்ல நம்ம அமலா ஷாஜி என்று பிரியன் பேசியுள்ளார்.

பிரசாந்த் ரங்கசாமி கடும் விமர்சனம்:
அமலா ஷாஜி அவர்களுடைய கடின உழைப்பால பல மில்லியன் ஃபாலோயர்களை கவர்ந்திருக்கிறார். உங்க படத்துக்கு பப்ளிசிட்டிக்காக நீங்கள் அவரை தேடி போனீர்கள் அதனால் அவருக்கு சம்பளம் கொடுக்க முடிந்தால் உங்கள் படத்துக்கு புக் செய்யுங்க இல்லைன்னா விட்டுடுங்க. இப்படி ஏன் வெளிப்படையா மென்ஷன் பண்ணி பேசுவதற்கு என்ன அவசியம் என்று பிரசாத் ரங்கசாமி கோபப்பட்டுள்ளார்.அவரது ட்வீட்டுக்கு பல ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
கடின உழைப்பா?
பிரசாந்த் ரங்கசாமியை சில நெட்டிசன்கள் அமலா ஷாஜி கடின உழைப்பா, என்ன ப்ரோ காமெடி பண்றீங்க என்று கலாய்த்து கமெண்ட் போட்டு வருகிறார்கள்.குத்தாட்டம் போடுவதற்கு சில முன்னணி நடிகைகள்பல கோடி வாங்கி வருகிறார்கள் அந்த நிலையில், நடனமாட அமலா ஷாஜிக்கு 2 லட்சம் தர முடியாதா? அப்புறம் ஏன் படம் எடுக்க வர வேண்டும் என்றவாறு ரசிகர்கள் கமெண்ட் போட்டு விளாசி கொண்டு வருகின்றனர்.
SUBSCRIBE V TAMIL LIFESTYLE OFFICIAL CHANNEL | CLICK HERE |
---|---|
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | வி தமிழ் செய்தி |
சமையல் குறிப்பு சம்மந்தமான அனைத்து பதிவுகளையும் இங்கு காணலாம் –> | ஆனந்தி சமையல் |