நடிகை ஜோதிகா தற்போது மூன்று இந்தி படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
90-களின் இறுதியில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. அறிமுகமானது அஜித்துடன் வாலி படத்தில்தான். அந்த படத்தில் சோனா என்ற சிறப்புத்தோற்றத்தில் நடித்தார் அதன் பிறகு சூர்யாவுடன் சேர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் முழுநீள கதாநாயகியானார். அதன் பின்னர் விஜய்யுடன் குஷி படத்தில் நடித்தார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பிறகு தமிழ் படங்களில் முன்னணி நடிகையான ஜோதிகா, நடிகர் கமலுடன் தெனாலி மற்றும் வேட்டையாடு விளையாடு படத்திலும் ரஜினியுடன் சேர்ந்து சந்திரமுகி போன்ற படங்களிலும் நடித்தார். தனது முதல் படத்தில் தன்னுடன் சேர்ந்து நடித்த சூர்யாவை காதலித்து கல்யாணம் செய்துக் கொண்ட ஜோதிகா தம்பதியருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.
இந்நிலையில் திருமணத்துக்குப் பிறகு 6 ஆண்டுகள் நடிக்காமல் இருந்த ஜோதிகா ,பின்னர் 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு மறுபடியும் வந்தார். அதன் பிறகு தனக்கு பிடித்த முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Actress Jyothika on Mount Everest
இந்தநிலையில், நடிகை ஜோதிகா சுற்றுலா செல்லும் போடோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் இமயமலை மற்றும் எவரெஸ்ட் சிகரத்துக்கு சென்ற வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் மலை உச்சியில் உள்ள ஓட்டலில் சாப்பிடுவது, டிரக்கிங் செல்வது, பனியில் நனைவது, வசதி இல்லாத சிறிய வீட்டில் தங்கி இருப்பது, அங்கு சோலார் மின்சாரத்தை பயன்படுத்துவது, சிறிய ஹெலிகாப்டரில் பயணம் செல்வது மற்றும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து உற்சாகத்தில் துள்ளி குதிப்பது போன்ற பல காட்சிகள் உள்ளன.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : Lemon Satham Easy | சுவையாக எலுமிச்சை சாதம் செய்வது எப்படி ?
ஜோதிகாவின் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்தினை தெரிவித்து வருகிறார்கள். மம்முட்டியுடன் ஜோடியாக ஜோதிகா நடித்து கடந்த ஆண்டு வெளியான காதல் தி கோர் மலையாள படம் நல்ல வரவேற்பை பெற்றது. அஜய்தேவ்கானுடன் ஜோதிகா நடித்த சைத்தான் இந்தி படம் கடந்த மார்ச் மாதம் ரிலீசாகி நல்ல வசூலை பார்த்தது. தற்போது மேலும் மூன்று இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Read Also : திருவாவடுதுறை ஆதீனத்தில் புத்தக வெளியீட்டு விழா