மயிலாடுதுறையில் 5000 க்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்ட அச்சுதராயபுரம் கௌரி மாரியம்மன் கோயிலின் 57 ம் வருடம் தீமிதி திருவிழா 15 அடிக்கு மேல் கம்பிகளை கொண்டு வாயில் அலகு குத்தியபடி பக்தர்கள் தீமிதித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்து உள்ளது அச்சுதராயபுரம் கிராமம், இந்த கிராமத்தில் மிகவும் பழைமையான பிரசித்தி பெற்ற கிராம தெய்வமான கெளரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 01/05/24 அன்று 57 ம் வருடம் தீமிதி திருவிழா நடைபெற்றது.. இக்கோயில் சுமார் 2000 குடும்பங்களுக்கு குலதெய்வமாக இருக்கிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : மாலை நேர ஸ்நாக்ஸ் சுவையான கொண்டை கடலை கட்லெட் இதை செய்து பாருங்களேன்!!!
Achutharayapuram Gauri Mariamman 57 th Thimithi
இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் திமீதி திருவிழா நடைபெறும், அதேபோன்று இந்த ஆண்டு 57-ம் ஆண்டு தீமிதி திருவிழாவை முன்னிட்டு, இக்கோயிலை சுற்றி இருக்கும் கிராம மக்களும், குலதெய்வமாக வழிபடுபவர்களும் கடந்த ஒரு வாரத்திற்கு காப்புகட்டி விரதம் இருந்து வருகிறார்கள்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
01/05/24 தீமிதி திருவிழாவை முன்னிட்டு கரகம்,பால்குடம், அலகு காவடிகளை காவேரி ஆற்றங்கரையிலிருந்து,புறப்பட்டு, கிராமத்தில் இருக்கும் முக்கிய தெருக்கள் வழியாக ஊர்வலமாக வந்தது பக்தர்கள் வீடுகள் தோறும் கரகம்,காவடிக்களுக்கு தீபாராதனை செய்து பொதுமக்கள் வழிபட்டனர். தொடர்ந்து கோயிலை வந்தடைந்தது.
பின்னர் கோயில் எதிரில் அமைக்கப்பட்டு இருந்த தீ குண்டத்தில்,மேள தாளம் முழங்த,விண்ணை பிளக்க வைக்கும் வாணவேடிக்கையுடன், கரகம்,அலகு காவடிகள் தீ குண்டத்தில் இறங்கி தீமிதிக்கும் திருவிழா நடைபெற்றது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : நீங்கள் கடவுளை எப்படி வணங்குவீர்கள்.? அதற்கான விளக்கங்களை தெரிந்து கொள்ளுங்கள்
இத்தீமிதி திருவிழாவை, மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள சுமார் 5,000 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு தீமிதி திருவிழாவை கண்டு களித்தனர்.அதனைத் தொடர்ந்து 01/05/24 இரவு கௌரி மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Click Here To view Video