abiramipattar before ammavasai : புகழ்பெற்ற திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ஸ்ரீஅபிராமி அம்மன் அபிராமிபட்டருக்காக வரலாறுப்படி அமாவாசையை பௌர்ணமியாக்கிய திருவிளையாடல் நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
abiramipattar before ammavasai

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயம் மிகவும் சிறப்புப்பெற்றதாகும். இங்கு தை அமாவாசை நாளிலில் ஸ்ரீஅமிராமி அம்மனின் பக்தரான அபிராமிபட்டர் வழிபட்டார். அந்த நேரத்தில் கோயிலுக்கு வந்த சரபோஜி மன்னர் இன்று என்ன திதி என்று கேட்டார். அபிராமி பட்டர் அபிராமி அம்மனை நினைத்து தியானத்தில் இருந்ததால், பௌர்ணமி தினம் என தவறுதலாக கூறினார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இன்று பௌர்ணமி வராமலிருந்தால் மரணதண்டனை விதிக்கப்படும் என்று மன்னர் கூறினார். இதனால் அபிராமி பட்டர் எரியும் நெருப்பிற்கு மேலே ஊஞ்சல் அமைத்து அபிராமி அம்மனை நினைத்து அபிராமி அந்தாதியை பாடினார். 100 கயிறுகள் கொண்ட ஊஞ்சலில் ஒவ்வொரு பாடல் பாடும்போது ஒவ்வொரு கயிறாக அறுத்துக்கொண்டு வந்து 79வது பாடலான
விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு
எமக்கு அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே
செய்து, பாழ் நரகக் குழிக்கே
அழுந்தும் கயவர் தம்மோடு
என்ன கூட்டு இனியே?
என்கிற பாடலை பாடினார். அப்போது அம்மன் நேரில் தோன்றி தனது தோட்டை வீசி எறிந்து முழுநிலவை தோன்றச்செய்து அபிராமி பட்டருக்கு அருள் வழங்கியதாக அந்த ஆலய வரலாறு கூறுகின்றது. அதன்படி தை அமாவாசையான 9/02/2024 லில் அபிராமி பட்டரின் உயிரை காப்பாற்றுவதற்காக அபிராமி அம்மன் நேரில் தோன்றி தை அமாவாசையை பௌர்ணமி யாக தோன்ற செய்த நிகழ்வு நடத்தப்பட்டது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : Poonam Pandey Biography, Wiki, Age, Family, Movies, Photos
இரவு மகா மண்டபத்தில் அபிராமி பட்டரின் சிலை வைக்கப்பட்டு ஸ்ரீ அபிராமி அம்மன் வெள்ளி இந்திர விமானத்தில் எழுந்தருளினார். தருமபுர ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் ஓதுவார்கள் அபிராமி அந்தாதி பாடல்களை பாடினார்கள். ஓவ்வொரு பாடல் பாடும் போது அம்பாளுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்று கயிறு அறுக்கப்பட்டது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
79 பாடலின் முடிவில் முழுநிலவு போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் விளக்கு எரியவிடப்பட்டது. தொடர்ந்து அம்பாளுக்கு மஹா தீபாராதனை நடத்தப்பட்டு 100 பாடல்களையும் பாடி நிறைவு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
இதையும் படிங்க : டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிடுவதால்?
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇