Thursday, July 10, 2025
Homeலைப்ஸ்டைல்ஃபேஷன்பட்ஜெட்: நிர்மலா சீதாராமனின் சாரீஸ்களைப் பற்றிய ஒரு கண்ணோட்டம்..!

பட்ஜெட்: நிர்மலா சீதாராமனின் சாரீஸ்களைப் பற்றிய ஒரு கண்ணோட்டம்..!

Date:

- Advertisement -

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள நிலையில், நடப்பு நிதியாண்டிற்கான முழுமையான பட்ஜெட் ஜூலை மாதம் 22ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.

பிரதமர் மோடியின் அமைச்சரவையில், நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் மறுபடியும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். மக்களவைத் தேர்தல் நடந்த நிலையில் அவர் கடந்த பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில், அவர் நடப்பு நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை ஜூலை 22ஆம் தேதி தாக்கல் செய்கிறார். தொடர்ந்து நிர்மலா சீதாராமன் 7 வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய சாதனையை படைக்கிறார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இந்நிலையில் ஒவ்வொருமுறை பட்ஜெட் தாக்கல் செய்யும் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அணியும் புடவையின் நிறம் என்ன? அவர் எந்த விதமான புடவையை உடுத்த போகிறார் என்று அனைவரின் கவனமும் அதாவது முக்கியமாக பெண்களின் கவனமும் இருக்கும்.. பட்ஜெட் முன்பு அல்வா செய்யும் நாளிலும் பட்ஜெட் தாக்கலாகும் நாளிலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடுத்தும் புடவையை மக்கள் தவறாமல் பார்ப்பார்கள்.. இதுவரை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆறு முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இந்த ஆறு முறையும் ஆறு ரக புடவைகளை உடுத்தி வந்துள்ளார். அது முற்றிலுமாக பேசும் பொருளாக எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது என்றே கூறலாம்.. வாங்க அந்த ஆறு புடவைகள் என்னென்ன? அவற்றின் சிறப்பு மற்றும் கலர் என்ன? என்று இந்த தொகுப்பில் தெரிந்துக் கொள்ளலாம்..

A look at Nirmala Sitharaman sarees
A look at Nirmala Sitharaman sarees

2024 இடைக்கால பட்ஜெட்:

இடைக்கால பட்ஜெட்டில் நீல வண்ண கைத்தறி டஸ்ஸர் சேலையை உடுத்தி வந்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அது அவரது ஆறாவது பட்ஜெட் உரை ஆகும். க்ரீம் நிறம் ப்ளவுஸ் அணிந்து கையில் சிவப்பு கலர் பேக் உடன் செய்தியாளர்கள் முன்பு தோன்றினார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : ஹர்திக் பாண்டியா-நடாஷா விவாகரத்து போல சர்ச்சைக்குள்ளாகி விவாகரத்து பெற்ற இந்திய கிரிகெட் வீரர்கள்!

2023 பட்ஜெட்:

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வருடம் பாரம்பரிய கோபுரம் பார்டர் ரெட் கலர் புடவை அணிந்தார். சீதாராமன் பட்ஜெட் தினத்தில் பிளாக் பார்டர் மற்றும் சிக்கலான தங்க வேலைப்பாடு உள்ள சிவப்பு கோபுரம் புடவையை அணிந்து வந்திருந்தார்.. சிவப்பு நிறம் பாசம், அர்ப்பணிப்பு, வலிமை மற்றும் தைரியம் போன்றவற்றை குறிக்கிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

2022 பட்ஜெட்:

2022 ஆம் வருடத்தில், நிதியமைச்சர் மெரூன் கலரில் புடவை அணிந்திருந்தார்.
இது பொதுவாக கிழக்கு இந்திய மாநிலம் ஒடிசாவில் தயார் செய்யப்பட்டது. அவரது சேலை பிரவுன் மற்றும் சிகப்பு ஆகிய 2 நிறங்களின் கலவையாக இருந்தது, அது ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன.

இதையும் படிங்க : சுவைகொண்ட வெண்டை காய் புளி கொழம்பு தயார் செய்வது எவ்வாறு ?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

2021 பட்ஜெட்:

2021ஆம் வருடத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை வண்ண பட்டு போச்சம்பள்ளி புடவையை உடுத்தி வந்தார்.. நிர்மலா சீதாராமன் சிவப்பு மற்றும் வெள்ளை கலர் பட்டு போச்சம்பள்ளி புடவையில் கிரீன் கலர் பார்டருடன், பல்லுவை சுற்றி இகாட் வடிவங்களுடன் தோன்றினார். போச்சம்பள்ளி இகாட் பாரம்பரியமாக தெலுங்கானாவில் இருக்கும் பூடன் போச்சம்பள்ளியில் தயார் செய்யப்படுகிறது. மேலும் இது ‘இந்தியாவின் பட்டு நகரம்’ என்று சொல்லப்படுகிறது.

2020 பட்ஜெட்:

2020 ஆம் வருடத்தில், நிதியமைச்சர் நீல கலரில் பார்டர் மற்றும் அதற்கு பொருத்தமான ப்ளவுஸ்வுடன் கூடிய அழகிய மஞ்சள் நிற தங்க பட்டுப் புடவையை அணிந்திருந்தார். மஞ்சள் நிறம் பொதுவாக செழிப்புடன் சம்பந்தப்பட்டது மற்றும் பெரும்பாலும் இந்தியர்களால் சுப நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படுகிறது. சீதாராமனின் பிரகாசமான புடவை, தொற்றுநோய் காரணமாக பொருளாதார மந்தநிலைக்கு இடையில் நாடு அடைய விரும்பும் துடிப்பான மற்றும் சக்தி மிக்க பொருளாதாரத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

2019 பட்ஜெட்:

2019 ஆம் வருடத்தில், நிர்மலா சீதாராமன் ஒரு பிரகாசமான இளஞ்சிவப்பு நிறத்தில், தங்க-பார்டர் உடைய மங்கல்கிரி புடவையை அணிந்திருந்தார். தனது முதல் பட்ஜெட்தாக்கல் செய்யும் போது, அவர் முதல் முதலாக பிரீஃப்கேஸை பாரம்பரிய ‘பாஹி கட்டா’வுடன் மாற்றினார். பட்ஜெட் ஆவணங்கள் பட்டு சிவப்பு துணியினால் சுற்றி அதன் மேல் தேசிய சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. இது தான் அவருடைய முதல் பட்ஜெட் தாக்கல் ஆகும்..

இதுபோலவே வரும் 22 ஆம் தேதியும் நடக்க போகும் பட்ஜெட் தாக்கலின் போது நிர்மலா சீதாராமன் என்ன மாதிரியான புடவை அணிவார் என்று அனைவராலும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.. ? பொருத்திருந்து பார்ப்போம்…

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories