Friday, July 11, 2025
Homeலைப்ஸ்டைல்வீட்டுக் குறிப்புகள்Best Vastu Plants for Home in Tamil :  இந்த செடியினை வீட்டில் வளர்த்தால்...

Best Vastu Plants for Home in Tamil :  இந்த செடியினை வீட்டில் வளர்த்தால் அதிர்ஷ்டம், செல்வம் வீடு தேடிவரும் …!!!

Date:

- Advertisement -

Vastu Plants for Home in Tamil | வாஸ்து தாவரம் : வீட்டினில் செல்வவளம் பெருகுவதற்காக ஒவ்வொரு இடத்திலும் பலவகையான செடிகள் வளர்க்கப்படுகின்றன.

அவ்வகையில் நமது நாட்டின் காலநிலை மற்றும் திசைகளுக்கு ஏற்றபடி அதிர்ஷ்டம் தரக்கூடிய சிலவகை செடிகள் இருக்கின்றன. இதனை நமது வீடு, தொழில் செய்யும் இடம் மற்றும் அலுவலகம் இந்த இடங்களில் வளர்க்கும்போது, அந்த செடிகளால் நமக்கு மகிழ்ச்சியையும், செல்வவளத்தையும்,அதிர்ஷ்டத்தையும் கொடுக்கிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பொதுவாகவே எல்லா செடிகளும் ஆக்சிசனை வெளிவிட்டு நம்முடைய வீட்டை சுற்றி அமைதியான சூழல்களை ஏற்படுத்துகிறது. ஆனால் வாஸ்து, சோதிடம் என்று வரும்போது திசைகள் மிகமிக முக்கியமானது. அதில் பின்பற்றப்பட்ட சாஸ்திரங்களை கடைபிடித்தால் வீட்டில் செல்வம் சேரும், அதன்படி, எந்த செடி அதிர்ஷ்டம் தரும், எந்த திசைகளில் வைத்து வளர்க்கவேண்டும், இவற்றால் எப்படிப்பட்ட பயன்தரப்போகிறது என்பதை விரிவாகப்பார்க்கலாம்.

துளசிச்செடி | Vastu Plants for Home in Tamil :

பெருமாள் தெய்வத்திற்கு உகந்த செடி துளசிச்செடியாகும். துளசிசெடி வளர்க்காத வீடு கோபுரம் இல்லாத கோவில் போன்றது என பெரியவர்கள் கூறுவார்கள். பெரும்பாலும் நாம் பார்த்திருப்போம், பெண்கள் பிரம்மமுகூர்த்தத்தில் குளித்துவிட்டு, இந்த செடியினை சுற்றி வழிபடுவார்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Vastu Plants for Home in Tamil

இதற்கானகாரணம் விடியற்காலையில் துளசி செடியினை சுற்றி வருவதால் சுத்தமான ஆக்சிஜன் நமக்கு கிடைக்கிறது. துளசி வீட்டில் செழிப்பாக பசுமையாக வளர்கிறது என்றாலே அந்த வீட்டில் லட்சுமி தேவி மகிழ்ச்சியாக குடிகொண்டு இருக்கிறாள் என்பது ஐதீகம்.

ஆகவே, துளசி செடியினை நல்லமுறையில் பராமரித்து வணங்கிவந்தால், தெய்வத்தின் அனுக்கிரம் எந்த பாரபட்சம் இல்லாமல் நமக்கு கிடைக்கும். நம் வளர்ச்சியை அள்ளி கொடுக்கும் துளசி செடியை வீட்டின் பால்கனி, முன்புறம், பின்புறம் என்று எந்த இடத்தில் வேண்டுமானாலும் வைத்து வளர்க்கலாம். ஆனால் சூரிய ஒளி கிடைக்கக்கூடிய இடத்தில வைத்து வளர்ப்பது அவசியமானது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

தொட்டால் சிணுங்கி :

சாலையோரங்களில் வளர்ந்து கொண்டிருக்கும் செடி தொட்டால் சிணுங்கி, இந்த செடியில் அப்படி என்ன அதிர்ஷ்டம் இருக்கப்போகிறது, என்று தானே நினைக்கிறீர்கள். இந்த செடியை சாதாரண செடியென்று மட்டும் நினைத்துவிடாதீர்கள்.

Vastu Plants for Home in Tamil

இதை வீட்டில் வளர்த்தால் பணம் கொட்டோகொட்டென்று கொட்டுமாம். இதனால் நமது ஊரில் பலரும் இந்த வளர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். மேலும் இந்த செடியை அதிகாலையில் தொட்டால் சிணுங்கி இலைகளை நம்முடைய பத்து விரல்களால் தொடும்போது நம்முடைய உடலில் காந்த ஆற்றல் அதிகரிக்குமாம். நம்மனதில் நேர்மறை சிந்தனைகள் உண்டாகும். இந்த செடியினை வீட்டில் எந்த திசையில் வேண்டுமானாலும் வளர்க்கலாம். ஆனால் முறையாக பராமரிக்க வேண்டும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

செண்பகப்பூச்செடி :

உண்மையாக சொல்லவேண்டும் என்றால், அதிர்ஷ்டம் உடையவர்களால் மட்டும்தான் இந்த செடியினை வீட்டில் வளர்க்க முடியும். இந்த பூக்கள் நம் கைகளில் கிடைத்தால் நல்ல நேரம் வரப்போகிறது என்று நினைத்து கொள்ளலாம். வாழ்க்கையில் இதுவரை அனுபவித்த வேதனைகள், கஷ்டங்கள் இவைகளுக்கெல்லாம் தீர்வு கிடைக்கபோகிறது. அதுமட்டுமில்லை, செண்பகப்பூ செடியை வீட்டில் வளர்ப்பதால் உங்கள் வீட்டில் சுக்கிர யோகம் அடிக்க போகிறது. மகாலெக்ஷிமிக்கு செண்பகப்பூக்களால் அர்ச்சனை செய்தால் செல்வம் பெருகும்.

Vastu Plants for Home in Tamil

குறிப்பாக, வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் காலை 6-7 மணிக்குள் மகாலெட்சுமி, சுக்கிரபகவானை நினைத்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வீட்டில் வறுமை நீங்கி செல்வம் பெருகும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

செப்பருத்தி செடி :

அந்தக்காலத்தில் எல்லோருடைய வீட்டிலும் இந்த செடியை அதிகமாக காணமுடியும். ஆனால் இன்று அது காண அரிதாகவே உள்ளது. இதனால்தான் மங்களகரமான நிகழ்வுகளில் தடை ஏற்படுகிறது. குறிப்பாக செவ்வாய்தோஷம் உள்ளவர்கள் தங்கள் வீட்டில் செம்பருத்தி செடியினை வளர்த்து வந்தால் செவ்வாய்தோஷத்தின் தாக்கம் குறையும் என்று சொல்கிறார்கள்.

Vastu Plants for Home in Tamil

அவர்கள் மட்டும்தான் வளர்க்க வேண்டும் என்பது கிடையாது. எல்லார் வீட்டிலும் செல்வம், மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் வேண்டும் என்று எண்ணக்கூடியவர்கள் அனைவரும் இந்த செடியை வளர்க்கலாம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

மேலும் வீட்டுக் குறிப்புகள் அறிய இங்கே கிளிக் செய்யவும்

பீர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories