கண்ணம்மா போலவே வாழ்ந்து கொண்டிருந்த ரோஷினி தீடிரென தொடரில் இருந்து விலகினார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பாரதி கண்ணம்மா தொடரில் அதிகமான பார்வையாளர்களை கொண்டு நம்பர் 1 இடத்தைப் பிடித்ததொடராகும். இந்த பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்தவர் நடிகை ரோஷினி ஹரிபிரியன்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இந்த தொடரில் கண்ணம்மாவாகவே வாழ்ந்து கொண்டிருந்த ரோஷினி தீடிரென தொடரிலிருந்து விலகினார். இது ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சீரியல் வாயிலாக சினிமாவில் நிறைய பட வாய்ப்புகள் வந்ததாகவும், சினிமாவில் கவனம் செலுத்துவதற்காக அவர் தொடரில் இருந்து வெளியேறினார் எனவும் தகவல்கள் வெளியானது
Roshini acting in Suri movie

ஆனால் எந்த படத்திலும் ரோஷினி நடித்ததாக தெரியவில்லை. இந்த நேரத்தில் தான் குக் வித் கோமாளி சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்று கலக்கினார். சுத்தமாக சமையல் செய்ய தெரியாமல் வந்தவர், எலிமினேட் ஆகி போகும் போது குட் செஃப் என்ற பெயரை எடுத்தார். இந்த நிகழ்ச்சியில் நிறைய விஷயங்களை ரோஷினி ஷேர் செய்தார். பர்சனல் பிரச்சனை, பறிப்போன வாய்ப்புகள் குறித்தும் பேசி இருந்தார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : இந்த வயசுலயும் பாட்டி செஞ்சிட்டு இருக்கிற வேலையை பாருங்க!!! எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு தொடரும் பாட்டியின் செயல்!!!
அந்த சீசனுக்கு பிறகு ரோஷினியை எந்த தொடரிலும் ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் காண முடியவில்லை. இன்ஸ்டாவில் மட்டும் ஆக்டிவாக இருந்தார். இந்நிலையில் ரோஷினி ஹரிப்பிரியன், சூரி, சசிகுமார் நடிக்கும் கருடன் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் ரிலீசான கருடன் பட ட்ரெய்லரில் ரசிகர்கள் இதை நோட் செய்தனர். உன்னி முகுந்தனுக்கு இணையாக ரோஷினி நடித்திருக்கிறார் எனற தகவலும் தெரிய வந்துள்ளது. கருடன் பட செய்தியாளர் சந்திப்பிலும் ரோஷினி பங்கேற்று கொண்டார். இதுக் குறித்த புகைப்படங்களை இன்ஸ்டாவிலும் ஷேர் செய்தார். ரசிகர்கள் ரோஷினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : விநாயகருக்கு எந்தெந்த பிராத்தனைக்கு எத்தனை தேங்காய் உடைக்க வேண்டும்..