மூங் தால் சாலட்டை (Moong Dal Salad) ஹெசர்பேலே கோசாம்பரி என்றும் சொல்வார்கள். இது மிகவும் வித்தியாசமான மற்றும் ஈஸியான தென்னிந்திய சாலட் ஆகும். இதில் கேரட், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளும் சேர்க்கப்படுகின்றன. கோசம்பரியின் சிறப்பம்சங்களில் ஒன்று தேங்காயை சேர்த்துக்கொள்வது ஆகும், மேலும் இதில் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்ப்பதால் இந்த சாலட்டின் சுவையை கூடுதலாக்குகிறது. இந்த ருசியான ஆரோக்கியமான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இதையும் படிங்க : கார்ன் ஃப்ரை செய்வது எப்படி..?
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Moong Dal Salad Recipe In Tamil

தேவையான பொருட்கள்
- 3/4 கப் பாசிப்பருப்பு
- 1 தேவையான அளவு எண்ணெய்
- 1 தேவையான அளவு கருவேப்பிலை
- 1பச்சைமிளகாய்
- 1/2 பெருங்காயத்தூள்
- 1/2 தேக்கரண்டி கடுகு
செய்முறை:
Step 1:
பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். ஊறிய பிறகு வடிகட்டி அதை தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
Step 2:
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும், கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்க வேண்டும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Step 3:
பின்பு பாசிப்பருப்பில் இருக்கும் நீரை முழுவதுமாக வடிகட்டி விட்டு அதில் சேர்க்க வேண்டும். மேலும் அதில் கொத்தமல்லி இலை, அரைத்த தேங்காய், எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.
Step 4:
எல்லா பொருட்களையும் நன்கு கலந்து மாலை நேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Step 5:
பாசிப்பருப்பு பச்சையாக சேர்க்கப்பட்டுள்ளதை கண்டுபிடிக்கவே முடியாது.
இதையும் படிங்க : தர்பூசணி விதைகளின் ஆச்சரிய பட வைக்கும் நன்மைகள்!
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇