சாத்வீக டயட்டில் உணவின் இயற்கை பண்புகள் மாறாமல் இருக்க மிதமான வெப்பநிலையில் சமைக்கப்படுகிறது. ஆனால் சைவ உணவிலோ நன்கு வறுக்கப்பட்ட, அதிக எண்ணெய் பயன்படுத்தபட்ட அல்லது அளவுக்கு கூடுதலாக சமைத்த உணவுகள் இருக்கின்றன.

சாத்வீக வாழ்க்கைமுறை என்பது இந்தியாவில் பண்டைய காலத்திலிருந்து தொடரப்பட்டு வந்தாலும் தற்போதைய தலைமுறையினரிடம் இந்த வாழ்க்கைமுறையை தொடரும் போக்கு அதிகரித்துள்ளதை பார்க்க முடிகிறது. பல புனித நூல்களிலும் வேதங்களிலும் சாத்வீக வாழ்க்கைமுறை குறித்து சொல்லப்பட்டுள்ளது. நவீன இலக்கியங்கள் சாத்வீக டயட்டை யோகா டயட் என கூறப்படுகிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

உண்மையில் சாத்வீகம் என்றால் என்ன? நாம் சாத்வீக உணவு என்று எதை கூறுகிறோம்? உண்மையிலே சைவ உணவு தான் சாத்வீக உணவா? வாருங்கள் பார்க்கலாம்.

சாத்வீக டயட் என்றால் பண்டைய இந்திய தத்துவத்தில், குறிப்பாக இது ஆயுர்வேதம் மற்றும் யோகா பின்னனியில் தோன்றியுள்ளது. சாத்வீக டயட்டின் முக்கியத்துவம் பற்றி பகவான் கிருஷ்ணர் அர்ஜூனருக்கு விளக்கியதாக பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் சமநிலை மற்றும் நிதானத்தின் முக்கியத்துவத்தை குறித்து வலியுறுத்துகிறது. வேலை, உணவு, பொழுதுபோக்கு, தூக்கம் போன்றவற்றில் ஒருவர் நிதானத்தை கடைபிடித்தால் ஆழ் மனதில் அமைதியும் மன நிறைவும் உண்டாகும் என கூறப்படுகிறது. இந்தப் பண்புகளை சாத்வீக டயட் ஒருவரின் உடலிலும் மனதிலும் ஊக்கப்படுத்தி மனத் தெளிவையும், ஆன்மீக வளர்ச்சியையும், அமைதியையும் தருவதாக நம்பப்படுகிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பொதுவாக சாத்வீக டயட் என்பது சுத்தமான, லேசான, ஊட்டசத்து அதிகமுள்ள, எளிதில் செரிமானமாகும் பழ வகைகள், காய்கறிகள், முழு தானியங்கள், நட்ஸ், விதைகள் மற்றும் பால் பண்டங்கள் ஆகும். ஆனால் சைவ டயட் தான் சாத்வீக டயட் என கூறப்படுவதாக இங்கு பொய்யான கற்பிதம் நிலவுகின்றது. பல சைவ உணவானது சாத்வீக கொள்கைகளோடு ஒத்திசைந்தாலும், இறைச்சி உணவுகளை தவிர்ப்பதாலேயே அது சாத்வீக உணவு என்று மாறிவிடாது.
இதையும் படிங்க : அசைவத்தை மிஞ்சிடும் ருசியில் சைவ கீமா கிரேவி செய்வது எப்படி?
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

சாத்வீக சமையல் முறையில் குறைந்த அளவிலேயே உணவுகள் பதப்படுத்தப்படுகிறது. மேலும் உணவின் இயற்கை பண்புகள் மாறாமல் இருப்பதற்கு மிதமான வெப்பநிலையிலேயே சமைக்கப்படுகின்றன. ஆனால் சைவ உணவிலோ நன்கு வறுக்கப்பட்ட, அதிக அளவில் எண்ணெய் பயன்படுத்தபட்ட அல்லது அளவுக்கும் மேலாக சமைத்த உணவுகள் இருக்கின்றன.

நம்முடைய ஆரோக்கியத்திற்கும் உயிர் சக்திக்கும் தேவையான ஊட்டச்சத்துகள் எல்லாவற்றையும் சரிசமமாக கொடுப்பதே சாத்வீக டயட். ஆனால் சைவ உணவுகளில் இரும்புச்சத்து, துத்தநாகம், வைட்டமின் பி12, ஓமேகா-3 ஃபேட்டி ஆசிட், முழுமையான புரதம் ஆகிய சில குறிப்பிட்ட ஊட்டசத்துகள் இருப்பது இல்லை.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

சாத்வீக உணவுகள் நம் மனதிற்கு ஊட்டமளித்து மன அமைதியையும், தெளிவான சிந்தனையையும், ஆழ்ந்த கவனத்தையும் தருகிறது. இவை நிலையான சக்தியை தருவதோடு அறிவாற்றல் செயல்பாட்டை பாதிக்க செய்யும் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்கிறது. சாத்வீக உணவுகளில் தாதுக்கள், ஆண்டி ஆக்ஸிடெண்ட், வைட்டமின், நார்சத்து உள்ளிட்டவை நிறைந்துள்ளது. இவை நம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் கூடுதலாக்கி நாள்பட்ட நோய்கள் வராமல் பாதுகாக்க செய்கிறது.
இதையும் படிங்க : முருங்கைக்காய் சாப்பிடுவதிலும் இவ்வளவு தீமைகள் இருக்கிறதா ..!
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

சரி, எதெல்லாம் சாத்வீக உணவுகள் இல்லை? மதுபானம், காரம், இறைச்சி, மீன் மற்றும் அசிடிக் நிறைந்த உணவுகள் ஆகியவை சாத்வீக டயட்டில் இடம் பெறாது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇