Friday, July 11, 2025
Homeலைப்ஸ்டைல்வீட்டுக் குறிப்புகள்இந்த டிப்ஸ மட்டும் ஃபாலோ செய்யுங்க.. ரோஜா செடி என்ன; ரோஜா தோட்டமே வெச்சிக்கலாம்… அதுவும்...

இந்த டிப்ஸ மட்டும் ஃபாலோ செய்யுங்க.. ரோஜா செடி என்ன; ரோஜா தோட்டமே வெச்சிக்கலாம்… அதுவும் கொத்து கொத்தான ரோஜா பூக்களோட..!!

Date:

- Advertisement -

Rose Plant Growing Tips in Tamil: ரோஜா பூவை யாருக்கு தான் பிடிக்காமல் போகும். கடையில் வாங்கும் போதே அதன் அழகை ரசிக்கக்கூடிய நாம் வீட்டில் வளர்க்க விரும்பமாட்டோமா என்ன? பொதுவாக பூ செடிகளிலேயே ரோஜா செடியை தான் மிகுந்த ஆசையோடு வளர்க்கிறார்கள். ரோஜா மலர்களில் சுமார் 700 வகைகளுக்கும் மேல், பல 100 கண்ணைக் கவரும் நிறங்களில் காணப்படுகின்றன. மேலும், ரோஜா பூக்கள் அழகிற்காகவும், நிறத்திற்காகவும், நறுமணத்திற்காகவும் இப்படி பல்வேறு காரணங்களுக்காக பலரால் விரும்பி வளர்க்கப்படுகின்றன.

Rose Plant Growing Tips in Tamil

அப்படி வளர்க்கும் போது நாம் பல்வித தவறுகளை செய்கிறோம். இதனாலையே நர்சரி கார்டனில் இருந்து வாங்கி வந்த10 நாட்களிலேயே செடி இறந்துவிடுகின்றன. மற்றவை பூக்களே பூப்பதில்லை. ஆனால், ரோஜா செடியை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற நுணுக்கத்தினை தெரிந்துக் கொண்டால் ரோஜா செடி என்ன, ரோஜா தோட்டமே வளர்க்கலாம். இப்போது ரோஜா செடிகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Rose Plant Growing Tips in Tamil
Rose Plant Growing Tips in Tamil

பூச்சிக்கொல்லி மருந்துகள்:

சிறிதளவு வேப்ப இலைகளை எடுத்து, அதனுடன் 4 அல்லது 5 பூண்டு தோலை போட்டு, தண்ணீர் ஊற்றி மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

இதை வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி அதை செடிகளுக்கு தெளித்து வந்தால் பூச்சி தொல்லை இல்லாமல் இருக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

முடிந்த வரை கடையில் விற்கும் இராசாயன பூச்சிமருந்துகளை உபயோகப்படுத்துவதை தவிர்க்கவும்.

ரோஜா செடிகள் வளர்வதற்கு தண்ணீர் மிகவும் முக்கியமானது. வெயில் காலங்களில் குறைந்தது வாரத்திற்கு 2 முறையாவது செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். முடிந்த வரை தண்ணீர் இலைகளின் மேல் படாதவாறு விடுங்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Rose Plant Growing Tips in Tamil
Rose Plant Growing Tips in Tamil

இதையும் படிங்க : தொப்பை குறைய இத ட்ரை செய்யுங்க..

பூக்களை எப்படி பறிக்க வேண்டும்?

ரோஜா செடியிலிருந்து பூக்களை கவனதுடன் பறிக்க வேண்டும். அப்போது தான் மீண்டும் முக்கு விடும். அதன் மூலம் அதிக பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். பூவை பறிக்கும் போது, பூ பூத்திருக்கும் தண்டின் கீழ்ப்பகுதியில் 2, 3, 4 இலை என்று இருக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அதில் 4 இலை எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த பகுதியில் ரோஜா பூக்களை கத்தரித்து பறிக்க வேண்டும்.

ரோஜா செடிகளுக்கு குறைந்தது 15 தினங்களுக்கு ஒரு முறை எப்சம் உப்பு ஒரு ஸ்பூன் அளவு வேர்ப்பகுதியில் போட்டு தண்ணீர் ஊற்றி வந்தால், அதிக பூக்கள் பூக்க ஆரம்பிக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அதேப்போல், உதிரும் நிலையில் இருக்கும் பூக்ககளை அவ்வப்போது நீக்கி விட வேண்டும்.

ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் கவாத்து செய்து விட வேண்டும். இவ்வாறு செய்வதால் செடி ஆரோக்கியமாக அடர்த்தியாக வளர தொடங்கும். இதை வசந்த காலங்களில் செய்யுங்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ரோஜா செடியில் சில நேரங்களில் இலைகள் மஞ்சள் நிறத்தில் மாறி போகும் அப்போது அந்த இலைகளை நறுக்கிவிடவும் மேலும், செடிகள் ஆரோக்கியமாக வளரும்.

Rose Plant Growing Tips in Tamil
Rose Plant Growing Tips in Tamil

ரோஜா செடிகளை பொறுத்தமட்டில், உயரமாக வளர்ந்தால் பூக்கள் நிறைய பூக்காது. எனவே, உயரமாக வளராமல் அவ்வப்போது கிளைகளை நறுக்கிவிட வேண்டும்.இது போன்று செய்தால் ரோஜா தோட்டமே வளர்க்கலாம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : இந்த செடியினை வீட்டில் வளர்த்தால் அதிர்ஷ்டம், செல்வம் வீடு தேடிவரும் …!!!

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories