Friday, July 11, 2025
HomeUncategorizedமுருங்கைக்காய் சாப்பிடுவதிலும் இவ்வளவு தீமைகள் இருக்கிறதா ..!

முருங்கைக்காய் சாப்பிடுவதிலும் இவ்வளவு தீமைகள் இருக்கிறதா ..!

Date:

- Advertisement -

தினமும் அனைவரது வீடுகளில் சைவம் மற்றும் அசைவம் இந்த 2 வகைகளில் தான் சமையலை செய்வார்கள். அதனால் அந்த நேரத்தில் என்ன சமையல் சமைக்கிறார்கள் என்பதற்கு தகுந்தவாறு தான் காய்கறிகளை பயன்படுத்துவார்கள். ஆனால் முருங்கைக்காய்களை மட்டும் அப்படி பயன்படுத்த மாட்டார்கள். ஏனென்றால் சாம்பார், புளிக்குழம்பு, சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு மற்றும் குருமா குழம்பு என எல்லா வகையான குழம்பு வகைகளிலும் முருங்கைக்காயை சேர்த்து சமைப்பார்கள்.

முருங்கைக்காயினை பயன்படுத்தி குழம்பு செய்வது மட்டும் இல்லாமல் வறுவல், குருமா மற்றும் மசாலா என இவை எல்லாவற்றையும் செய்வார்கள். இதை வைத்து பார்த்தால் முருங்கைக்காய் விரும்பி சாப்பிடக்கூடியவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருந்து கொண்டு தான் இருகிறார்கள். அப்படி பார்த்தால் முருங்கைக்காய்களை சாப்பிடலாம், ஆனால் அதுவும் அளவோடு தான் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம் ஆகிவிடும். எனவே முருங்கைக்காயிலும் தீமைகள் உள்ளது. எனவே அந்த தீமைகள் என்னவென்று பார்ப்போம் வாங்க..!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Disadvantages of drumstick
Disadvantages of drumstick

முருங்கைக்காயில் உள்ள சத்துக்கள்:

வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் B3, புரதம், கால்சியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட்,சோடியம், இரும்புசத்து, நார்ச்சத்து, கொழுப்புசத்து மற்றும் கலோரிகள் என இதுபோன்ற சத்துக்கள் எல்லாம் முருங்கைக்காயில் அதிகமாக உள்ளது.

இதையும் படிங்க : இந்த வகை மீன்கள் சாப்பிட்டால் ஆபத்தா?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

முருங்கைக்காய் பயன்கள்:

Disadvantages of drumstick

முருங்கைக்காய் உயர் இரத்த சர்க்கரையின் அளவினை குறைக்க பயன்படுகிறது. மேலும் நமது உடலில் இருக்கும் நச்சுக்களை சுத்தம் செய்யவும், உடல் உறுப்புகளை நன்றாக செயல்படுவதற்கும் முருங்கைக்காய் பயன் அளிக்கிறது.

அதோடு மட்டும் இல்லாமல் முருங்கைக்காய் நமது கண் பார்வைக்கு சிறந்த மருந்தாக பயன் அளிக்கிறது. அதாவது நமது கண்ணில் காணப்படும் விழித்திரையில் உள்ள நச்சுக்களை அகற்றி கண் பார்வையினை மேம்படுத்துகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை கூடுதலாக செய்வதற்கு முருங்கைக்காய் நன்மை அளிக்கிறது.

இதில் நார்ச்சத்துக்கள் உள்ளதால் முருங்கை காயினை சாப்பிடுவதன் மூலம் நமது உடலில் இருக்கும் தேவையற்ற கொழுக்களை குறைய செய்கிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

முருங்கைக்காயில் கால்சியம், பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் இருப்பதனால் இதனை நாம் உணவுடன் சேர்த்து கொள்வதன் மூலம் நமது உடலில் உள்ள எலும்பினை வலுப்பெற செய்கிறது.

நம்முடைய இரத்த ஓட்டத்தில் உள்ள தேவையற்ற நச்சுக்களை முருங்கைக்காய் நீக்கக்கூடிய தன்மையினை கொண்டுள்ளதால், சருமத்தில் உண்டாகும் பருக்கள் மறைவதோடு மட்டும் இல்லாமல் முகத்தின் அழகையும் கூட்டுகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : காரசாரமான சுவையில் ரோட்டு கடை ஸ்டைல் முட்டை மசாலா இது மாதிரி ஒரு முறை செய்து பாருங்கள்!

முருங்கைக்காய் தீமைகள்: Disadvantages of drumstick

Disadvantages of drumstick

பொதுவாக இரத்த அழுத்தம் இருப்பவர்கள் மற்றும் சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்கள் காய்கறிகளாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை பெற்று சாப்பிட வேண்டும். எனவே குறைந்த இரத்த அழுத்தம் உடையவர்கள் போதுமான அளவு முருங்கை காயினை சாப்பிடுவதால் மேலும் இரத்த அழுத்தக்குறைக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அதேபோல் குறைந்த இரத்த சர்க்கரை அளவினை உள்ளவர்கள் முருங்கைக்காயினை சாப்பிடுவதால் சர்க்கறை அளவினை குறைக்க செய்யும்.

மேலும் கர்ப்பிணி பெண்களும் முருங்கை காயினை சாப்பிடுவதன் மூலம் கருச்சிதைவு உண்டாகும் வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

எனவே முருங்கைக்காயினை போதுமான அளவு மருத்துவரின் ஆலோசனையை கேட்டு எடுத்துக்கொள்வதன் மூலம் பக்க விளைவுகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories