Friday, July 11, 2025
Homeபொழுதுபோக்குகாதலுக்காக ஏங்கும் தொகுப்பாளினி பிரியங்கா, நிறைய பிள்ளைகள் பெத்துக்கணும், மழலை பற்றி கண்கலங்கி பேச்சு

காதலுக்காக ஏங்கும் தொகுப்பாளினி பிரியங்கா, நிறைய பிள்ளைகள் பெத்துக்கணும், மழலை பற்றி கண்கலங்கி பேச்சு

Date:

- Advertisement -

தொகுப்பாளினி பிரியங்காவை பற்றி அறிமுகமே தேவையில்லை. சின்னத்திரையின் மூலம் நம் எல்லோருடைய மனதையும் கொள்ளையடித்தவர் ஆவார்.

இதுவரை மகிழ்ச்சி நிறைந்த பிரியங்காவை மட்டுமே நாம் கண்டிருக்கிறோம். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியங்கா, தனது சோகமான பக்கத்தை குறித்தும் பேசினார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Priyanka yearning for love
Priyanka yearning for love

காதலுக்காக ஏங்கும் பிரியங்கா | Priyanka yearning for love

இதில், தன்னுடைய உலகம் தனது தம்பியின் மகள் தான் என்றும். அவள் தான் தங்கள் குடும்பத்தை ஒட்டுமொத்தமாக மாற்றியதே என கூறி கலங்கினார். அவளின் அன்புக்காக ஏங்குகிறேன், அது போன்ற காதலை மட்டும் எனக்கு கொடுங்கள். மற்ற எல்லாவற்றையும் நான் கொடுக்கிறேன், வேறு எதுவுமே எனக்கு தேவையில்லை. அத்தை எனும் உறவை தாண்டி அவளுக்காக எதையும் செய்வேன், அவள் மீது அதிக அன்பு வைத்து இருக்கிறேன் என கூறினார் பிரியங்கா.

இதையும் படிங்க : தேங்காய், தக்காளி சேர்க்காமல் மதுரை நீர் சட்னி செய்வது எப்படி? 2 இட்லி கூடுதலாக சாப்பிடுவாங்க..!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

நிறைய குழந்தைகள் பெத்துக்கணும்

இதன்பின் பிரியங்காவின் பேட்டியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி அர்ச்சனா “உன் வாழ்க்கையில் நீ நினைத்தபடி உன்னை உருகி உருகி காதலிக்கும் ஒருத்தர் நிச்சயம் வருவார்” என கூறினார். பின் நீ அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் இதற்காக நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். அர்ச்சனா உன் மகன், மகளை நான் பார்க்க வேண்டும் என சொன்னதும், கண்கலங்கினார் பிரியங்கா.

பிரியங்கா முதல் முறையாக அன்பிற்காக ஏங்கி பேசிய இந்த விஷயம் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. சிரித்த முகத்தோடு நகைச்சுவையாக மட்டுமே பேசும் பிரியங்காவிற்கு இப்படியான ஒரு பக்கம் இருக்கிறதா என ரசிகர்கள் பலரும் வருத்தப்பட்டுள்ளனர்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : தமன்னாவின் திடீர் ஆன்மீக பயணம்! நெற்றியில் திருநீறு.. கழுத்தில் மாலை..

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories