Friday, July 11, 2025
Homeஅசைவம்இறால் மிளகு வறுவல் செய்வது எப்படி? Iral milaku varuval seivathu eppadi?

இறால் மிளகு வறுவல் செய்வது எப்படி? Iral milaku varuval seivathu eppadi?

Date:

- Advertisement -

Iral milaku varuval seivathu eppadi : அசைவ பிரியர்களால் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு வகைகளில் இறால் மிளகு வறுவலும் ஒன்று. பொதுவாகவே இறாலை கொண்டு செய்யப்படும் எல்லாவிதமான உணவுகளுக்கும் இறால் சாப்பிடக்கூடியவர்களுக்கு தனியான மதிப்பு உண்டு. அந்த வகையில் மிளகு இறால் வறுவல் என்றால் கேட்கவா வேண்டும். அதை சமைக்கும் போதே அதனுடைய வாசனை சமையல் கட்டுக்கே அழைத்து சென்றுவிடும்.

இதை பெருபாலும் சாதத்தில் போட்டோ அல்லது சப்பாத்தி, தோசை, பூரி மற்றும் புல்காவுக்கு சைடிஸ் ஆகவோதான் மக்கள் சாப்பிடுகிறார்கள். இதுமட்டும் இல்லாமல் மிளகு ரசம் சாதத்திற்கும் மக்கள் இறால் மிளகு வறுவலை சாப்பிட்டு சுவைக்கிறார்கள். இறால் மிளகு வறுவல் மற்றும் ரசம் சாதமும் ஒரு அருமையான காம்பினேஷன். இந்த காம்பினேஷன் நீங்களும் ஒரு முறை ருசித்து விட்டால் இதை அடிக்கடி கட்டாயம் ருசிக்க தோன்றும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Iral milaku varuval seivathu eppadi
Iral milaku varuval seivathu eppadi | Iral milaku varuval seivathu eppadi

இறால் மிளகு வருவாயில் சிறப்பு என்னவென்றால் மற்ற அசைவ உணவுகளை போல இதை செய்வதற்கு கடினமான செயல்முறைகள் பின்பற்ற தேவை இல்லை. அது மட்டுமில்லாமல் இதை செய்வதற்கு அதிக நேரமும் தேவைப்படாது. இறால் எளிதில் வேகக்கூடியது. இறாலில் இருக்கும் தோல் மற்றும் குடலை நாம் கவனமாக சுத்தம் செய்ய வேண்டும். மற்ற மாமிசங்களை விட கூடுதலான நேரம் ஆகும்.

இப்பொழுது இதை செய்வதற்கான செய்முறை விளக்கத்தை பார்ப்போம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Taste Also : நம் வீட்டில் ரோட்டுக்கடை பேல் பூரியை அதே சுவையில் செய்து பாருங்க!

தேவையான பொருட்கள்: Iral milaku varuval seivathu eppadi

  • 250 கிராம் – இறால்
  • 3 பல் – பூண்டு
  • 1 – பெரிய வெங்காயம்
  • 3 – காய்ந்த மிளகாய்
  • 1 – இஞ்சி துண்டு
  • 1 டீ ஸ்பூன் – சீரகம்
  • 2 டீ ஸ்பூன் – தனியா
  • 1 டீ ஸ்பூன் – மிளகு
  • 3 – கிராம்பு
  • 2 – பட்டை துண்டு
  • 1 – ஏலக்காய்
  • எண்ணெய் -தேவையான அளவு
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • கருவேப்பிலை – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை விளக்கம்: Iral milaku varuval seivathu eppadi :

முதலில் இறாலை சுத்தம் செய்து கழுவி ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும்.பிறகு வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை நறுக்கிக்கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும். அடுத்து ஒரு வாணலை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சீரகம், தனியா, மிளகை போட்டு நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அது வாசம் வந்ததும் அதை எடுத்து ஒரு பிளேட்டில் கொட்டி பரப்பி விட்டு சிறிது நேரம் ஆறவைக்கவும். அதன் பின்பு அதை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும். பின்பு மிதமான சூட்டில் ஒரு வாணலை வைத்து அதில் 2 டீ ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

எண்ணெய் சூடானதும் அதில் காய்ந்த மிளகாய், ஏலக்காய், பட்டை, மற்றும் கிராம்பு சேர்த்து அதை ஒரு நிமிடம் வதக்கவும். ஒரு நிமிடத்திற்கு ஆனதும் அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் அதில் இஞ்சி,பூண்டு பேஸ்டை போட்டு அதன் பச்சை வாசம் போகும் வரையில் வதக்கவும். இஞ்சி, பூண்டு பேஸ்டின் பச்சை வாசம் போனதும் அதில் சுத்தம் செய்துள்ள இறாலை போட்டு அது வெங்காயத்துடன் கலக்கும் வரையில் கலந்து சுமார் ஒரு நிமிடம் வரை வேக வைக்கவும்.

ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் தேவையான உப்பு போட்டு அதை கலக்கவும், பின்பு அதை சுமார் 5 நிமிடம் வரையில் வேக வைக்கவும். 5 நிமிடத்திற்கு பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி, கருவேப்பிலை போட்டு அதை நன்றாக கலந்து சுமார் ஒரு நிமிடம் நேரம் வரை வேகவைக்கவும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஒரு நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்தி விட்டு இறால் மிளகு வறுவலை சுடசுட சாப்பிட பரிமாறவும். இப்பொழுது உங்களுக்கு சூடான மிகவும் சுவையான இறால் மிளகு வறுவல் தயாராகி விட்டது. இதை நீங்களும் ஒருமுறையாவது இந்த இறால் வறுவலை செய்து குடும்பத்தாருடன் சேர்ந்து சாப்பிட்டு மகிழுங்கள்.

See Also : டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிடுவதால்?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories