Thai ice tea : இன்றைய நாட்களில் சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்துவிடுவார்கள். ஆனால் அவர்களால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்கமுடியாது. வீட்டில் ஆண்கள் அம்மா சாப்பாடு குடுங்க என்ற வார்த்தைக்கு அடுத்து அதிகமாக சொல்லும் வார்த்தை அம்மா டீ போடுங்க என்பதைத்தான், அந்த அளவிற்கு டீயை குடித்துவிட்டு அவர்களுடைய சரியாக செய்துகொண்டிருப்பார்கள். டீ குடிப்பதால் உடலும் மனமும் புத்துணர்ச்சியாக இருக்கும். நாம் செய்யக்கூடிய வேலைகளில் முழுகவனத்தை செலுத்த முடிகிறது.

இன்னும் சொல்லப்போனால் பல ஆண்கள் வீட்டில் டீ குடித்தாலும் வெளியில் சென்று டீ குடிக்காமல் இருக்கமுடியாது. வீட்டில் டீ குடிக்கும் போது புதிய வகையில் டீ குடிக்க விரும்பினால் இந்த தாய் டீயினை போட்டு கொடுங்கள். இதை குழந்தைகளுக்கும் குளிர்பானமாக செய்து கொடுக்கலாம். நாம் இந்த தாய் டீயை எப்படி செய்வது, தேவையான பொருட்கள் மற்றும் செய்முறைகள் பற்றியும் இந்த சமையல் குறிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Read Also : டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிடுவதால்?
Equipment : Thai ice tea
1 டீ பாத்திரம்
1 பவுல்
2 கண்ணாடி ஜார்
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
தேவையான பொருட்கள்
1/2 கப் டீ தூள்
1/2 கப் சுகர்
15 ஐஸ் கட்டிகள்
4 tbsp கன்டென்ஸ் மில்க்
5 கப் தண்ணீர்
செய்முறை:
முதலில் அடுப்பில் டீ போடும் பாத்திரத்தை வைத்து அதில் 5 கப் அளவிற்கு தண்ணீரை ஊற்றி கொள்ளவும், பின்பு இதனுடன் வீட்டில் இருக்கும் டீ தூள் அல்லது தரமான அரை கப் டீ தூள்சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
பின் இதனுடன் அரை கப் அளவிற்கு நல்ல சர்க்கரையை சேர்த்து கொள்ளவும். பிறகு அடுப்பில் உள்ள டீ கொதித்ததும் தீயை குறைத்து சில நிமிடங்கள் அடுப்பில் வைத்து கொள்ளவும்.
அதன் பிறகு அடுப்பை அணைத்து கடாயை இறக்கிவைத்துவிட்டு டீயை நன்கு குளிர வைக்கவேண்டும். பிறகு இரண்டு கண்ணாடி ஜாரை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு ஜாரிலும் 6 ஐஸ் கட்டிகள் சேர்த்து கொள்ளவும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
அதன் பின் நாம் குளிரவைத்த டீயை கண்ணாடி ஜாரில், வடிகட்டிகொண்டு வடிகட்டி முக்கால் அளவு டீ இருக்கும்படி ஊற்றி கொள்ளவும். அதன் பின்பு ஒவ்வொரு ஜாரிலும் இரண்டு டீ ஸ்பூன் கன்டென்ஸ் பால் சேர்த்து கொள்ளவும்.
அதன்பின் கடைசியாக இரண்டு ஜாரையும் ஸ்பூனால் நன்றாக கலக்கி கொள்ளவும். நமக்கு முறையான தாய் ஐஸ் டீ தயாராகிவிட்டது. இதை வெயில் காலங்களில் கூல் டிரிங்ஸ் ஆகவும் குடிக்கலாம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Read Also : கேரளா முறையில் சாம்பார் வைப்பது எப்படி ?
Nutrition:
Serving: 2people | Cholesterol: 5.7mg | Sugar: 24.5g | Calories: 20kcal | Protein: 9g
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇