Friday, July 11, 2025
Homeஆன்மீகம்நீங்கள் கடவுளை எப்படி வணங்குவீர்கள்.? அதற்கான விளக்கங்களை தெரிந்து கொள்ளுங்கள்

நீங்கள் கடவுளை எப்படி வணங்குவீர்கள்.? அதற்கான விளக்கங்களை தெரிந்து கொள்ளுங்கள்

Date:

- Advertisement -

Meanings of worshiping God : கடவுளை வணங்குவதன் விளக்கம் : ஆன்மீக பக்தர்கள் அனைவர்க்கும் வணக்கம். இன்றைய ஆன்மீக பதிவில் கடவுளை கும்பிடும் முறையின் அர்த்தங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக, கடவுளை வணங்குவதற்கு பலவிதமான முறைகள் உள்ளது. அவற்றின் நீங்கள் கடவுளை எப்படி வாங்குவீர்கள்.? என்பதையும் அப்படி வணங்கினால் அதற்கு என்ன விளக்கம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Meanings of worshiping God
Meanings of worshiping God

கடவுளை கும்பிடும் போது, சிலர் தலைக்கு மேலே கைகளை தூக்கி வணங்குவார்கள், ஒரு சிலர் முகத்திற்கு அருகில் கையை வைத்து வணங்குவார்கள், இன்னும் ஒரு சிலர் நெஞ்சிற்கு அருகில் கைகளை வைத்து கும்பிடுவார்கள். இப்படி பல்வேறு முறைகளில் கடவுளை வணங்கி வருகிறோம். இவ்வாறு நாம் கடவுளை வணங்கும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பொருள்களை எடுத்துரைக்கிறது. அதனை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : முட்டை இல்லாமல் ஆம்லெட் செய்வது எப்படி?

Meanings of worshiping God:

தலைக்கு மேல்:

தலைக்கு மேல் இரு கைகளையும் தூக்கி வணங்கினால், எனக்கு உன்னை விட்டால் யாரும் இல்லை என்றும், எனக்கு நீ மட்டுமே துணை என்று இறைவனை சரண் அடைவதன் வெளிப்பாடாகும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

முகத்திற்கு அருகில்:

முகத்திற்கு அருகில் இரு கைகளையும் வைத்து தலை குனிந்தது வணங்குவது அடக்கத்தின் வெளிப்பாடாகும். எல்லோரும் உனக்கு கீழ் தான் இருக்கிறோம் என்றும், உனக்கு கீழ் தான் இந்த உலகம் இயங்குகிறது என்று கூறி வணங்குவதின் விளக்கமாகும்.

நெஞ்சிற்கு நேராக:

இரு கைகளையும் நெஞ்சிற்கு நேராக வைத்து வணங்கினால், கடவுளே என் நெஞ்சிற்குள்ளேயே உன்னை வைத்திருக்கிறேன், எப்பொழுதும் நீ என்னை என்னுடனிருந்து வழிநடத்தி காப்பாய் என்ற எண்ணத்தை குறிக்கிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

மேலும் ஆன்மீக குறிப்புகள் சில :

  • இடது கையால் அர்ச்சனைப் பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது.
  • கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்தவுடனே கை மற்றும் கால்களை கழுவ கூடாது. கொஞ்சம் நேரம் கழித்து தான் கழுவ வேண்டும்.
  • பெண்கள் மாதவிலக்கு காலங்களில் எக்காரணம் கொண்டும் பூ வைத்துக் கொள்ளக் கூடாது.
  • செவ்வாய் கிழமை, புதன் கிழமை, வெள்ளி ஆகிய கிழமைகளில் குத்துவிளக்கைத் துலக்கக்கூடாது.
  • பூஜை அறையில் கடவுளை வடக்கு திசைப்பார்த்து வைக்கக் கூடாது.

இதையும் படிங்க : நீங்க மிகவும் மகிழ்ச்சியாகவும் நேர்மையாகவும் இருக்க… இந்த விஷயங்கள ஃபாலோ செய்யுங்க போதுமாம்..!

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories