Friday, July 11, 2025
Homeபொழுதுபோக்குVishal Tasmac Shop In Viral Video : அட லூசு, போ போனு டாஸ்மாக்...

Vishal Tasmac Shop In Viral Video : அட லூசு, போ போனு டாஸ்மாக் கடையில் மது வாங்க நின்ற ‘குடி’மகன்களை அடித்து விரட்டும் விஷால்: வைரல் வீடியோ

Date:

- Advertisement -

Vishal Tasmac Shop In Viral Video : டாஸ்மாக் கடைக்கு மது வாங்க வந்த மது பிரியர்களை விரட்டிவிட்டிருக்கிறார் நடிகர் விஷால். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

Vishal Tasmac Shop In Viral Video
Vishal Tasmac Shop In Viral Video

தாமிரபரணி, பூஜை போன்ற வெற்றிப் படங்களை அடுத்து இயக்குநர் ஹரியும், விஷாலும் மீண்டும் கூட்டணி சேர்ந்திருக்கும் படம் ரத்னம். அந்த படத்தில் விஷாலுக்கு இணையாக ப்ரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். நடிகை ப்ரியா பவானி சங்கர், விஷாலுக்கு ஜோடியாக நடிப்பது இதுவே முதல் முறையாகும். இந்த படத்திற்கு படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். அதனால் பாடல்கள் அனைத்தும் கண்டிப்பாக ஹிட்டாகிவிடும். இந்நிலையில் விஷாலின் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ரத்னம் படத்தின் படபிடிப்பிற்காக டாஸ்மாக் செட் போட்டிருக்கிறார்கள். அது படத்திற்கான செட் என்று தெரியாமல் சிலர் மது வாங்க வரிசையில் நின்றிருக்கிறார்கள். அவர்களிடம் வந்து இது நிஜ டாஸ்மாக் கடை இல்லை, செட் என்று சொல்லி அடித்துவிரட்டியிருக்கிறார் விஷால். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகிவிட்டது. அதை பார்த்தவர்கள், ஒரு வருங்கால சட்டமன்ற உறுப்பினர் என்பதை நிரூபித்துவிட்டார் விஷால் என்கிறார்கள்.

Read Also : 2024ல் பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டிய தீர்மானங்கள் | Best Top Resolutions Following by Parents

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Vishal Tasmac Shop In Viral Video

அந்த வீடியோவை பார்த்தாலே ரத்னம் படத்திற்கு விளம்பரம் தேடுவதற்கு வெளியிட்டது போல தெரிகிறது. விஷால் விரட்டியடித்ததும் ஓடியவர்களைகண்டால் நிஜ குடிமகன்கள் போன்று தெரியவில்லை. துணை நடிகர்கள் போன்று இருக்கிறார்கள். ரத்னம் படப்பிடிப்பு ஆரம்பித்ததிலிருந்து விஷால் இப்படித் தான் எதையாவது குறும்புத்தனத்தை செய்து கொண்டிருக்கிறார். அதனால் இந்த வீடியோவும் உண்மையில்லை என்றே நம்பப்படுகிறது.

முன்னதாக ரத்னம் படப்பிடிப்பு பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டார் விஷால். ஸ்பாட்டுக்கு வந்ததும் என்ன சீன் சார் என ஹரியிடம் விஷால் கேட்க அவரோ, அந்தா தலையில துண்டை கட்டிக்கிட்டு நிற்கிறாருல அவருதான் மாஸ்டர். அவரை போயி பாருங்களேன் என்று சொன்னார். விஷால் உடனே கனல் கண்ணனிடம் செல்ல அவரோ ஒரு ஷாட் 5 நிமிஷம். ஃபைட்டு, சேஸு ஒரு ஷாட்டு என்றார். ஏன் என ஹஸ்கி வாய்ஸில் விஷால் கேட்க, டைரக்டர் ஹரினு கனல் கண்ணன் கூறிய அந்த வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்தது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இப்படியே அவ்வப்போது ஒரு வீடியோ வெளியிட்டுக் கொண்டே இருந்தால், படத்திற்கு தனியாக விளம்பரம் தேட வேண்டிய அவசியமே இல்லை விஷால். ஆனால் டாஸ்மாக் காட்சி வீடியோவை பார்த்து ‘குடி’ மகன்கள் யாரும் கோபப்பட்டு இலவச விளம்பரம் கொடுக்காமல் இருக்க வேண்டும். ஹரி அப்படி விஷாலை வைத்து என்ன படம் தான் எடுக்கிறார் என்பதை பார்க்கும் ஆசை அனைவருக்கும் தற்போதே வந்துவிட்டது. ஆக அந்த வீடியோக்கள் ஒர்க்அவுட் ஆகிகொண்டுள்ளது.

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories