Sri Vaikuntha Perumal Kuthalam : குத்தாலம் அருகே ஸ்ரீ வைகுந்த நாத பெருமாள் ஆலய கோபுரத்தில் 108 சிலைகள் அமைத்து மகா கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மாதிரிமங்கலம் கிராமத்தில் பழமையான ஸ்ரீதேவி பூதேவி நீளாதேவி சமேத ஸ்ரீ வைகுண்ட பெருமாள் ஆலயம் அமைந்திருக்கிறது. பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் திருப்பணிகள் முடிந்து 22/01/2024 லில் மகா சம்ப்ரோஷணம் என்ற கும்பாபிஷேகம் நடைபெற்றது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இந்த கும்பாபிழேகத்தை முன்னிட்டு ஆலயத்தில் யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்டது.புனித நீர் அடங்கிய கடங்கள் யாகசாலையில் எழுந்தருளச் செய்து கலாகர்ஷணம் நிகழ்ச்சியும், நான்கு கால யாகசாலை பூஜைகள் முடிந்து மகா பூர்ணாஹுதி நடைபெற்றது.தொடர்ந்து மல்லாரி மங்கல வாத்தியங்கள் இசைக்க வேதியர்கள் மந்திரங்கள் முழங்க கடங்கள் புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்று விமான கலசத்தை அடைந்தது.
Read Also : மயிலாடுதுறையில் உலக சமுதாய சேவா சங்கம் கிராமிய சேவை திட்டம்
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
பின்பு விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வைகுண்ட நாத பெருமாளை தரிசனம் செய்தனர்.
