Friday, July 11, 2025
Homeபொழுதுபோக்குJanaki cried for touching lyrics : உருக்கிய இசை.. இதயத்தை கனக்கச் செய்த...

Janaki cried for touching lyrics : உருக்கிய இசை.. இதயத்தை கனக்கச் செய்த பாடல் வரிகள்.. தேம்பி தேம்பி அழுத ஜானகி

Date:

- Advertisement -

Janaki cried for touching lyrics : தமிழ்த்திரைப்படங்களில் வரும் ஒரு சில பாடல்கள் நம்மையும் அறியாமல் அந்த பாடலின் ஓட்டத்திற்கு ஏற்ப நம் மனசயும் கொண்டு சென்று விடும். காரணம் அந்த படத்தோட இசையும், பாடல் வரிகளும் தான். அப்படியான பாடலைப்பாடும் போது தன்னையும் அறியாமல் உணர்ச்சிகரமாக பாடும் பாடகிகளும் அழுது விடுவார்கள். அப்படியான ஒரு பாடலைப் பற்றி இப்போது பார்க்க போகிறோம்.

Janaki cried for touching lyrics
Janaki cried for touching lyrics

அச்சாணி என்னும் படத்திற்காக, இளையராஜாவின் இசையில் பாடகி ஜானகி பாடிய பாடல் இது. இந்த பாடலை கவிஞர் வாலி எழுதினார். அச்சாணி படம் 1978 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின் கதையை காரைக்குடி நாராயணன் எழுதியுள்ளார். முத்துராமன், லட்சுமி போன்ற பலர் நடித்துள்ளனர்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Janaki cried for touching lyrics

இந்தப் படத்திற்காக கவிஞர் வாலி, மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்… என்ற ஒரு பாடலை எழுதினார். அனைத்துத் தரப்பு வயதினர்களையும் கவர்ந்து இழுக்கும் பாடல் இது. இந்தப் பாடலைப் பாடும் போது எஸ்.ஜானகி தன்னை மறந்து அழுதே விட்டாராம்.

இயேசுபிரானை பெறாமல் பெற்ற தாய் என்றால் அவர் மேரி மாதா தான். அவரைப் போலவே இந்தப் படத்தின் கதாநாயகிக்கும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தப் பாடலை ஒலிப்பதிவு செய்ய பல தடங்கல்கள் வந்ததாம். பிரசாத் ஸ்டூடியோவில் இந்த பாடலை ஒலிப்பதிவு செய்யவதற்கு, அந்த ஸ்டுடியோ பிசியாகவே இருந்ததாம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அதனால் இளையராஜா வேறு ஒரு ஸ்டூடியோவுக்குச் போனாறாராம். அங்கும் சில கருவிகள் வேலை செய்யவில்லையாம். அதன் பின்னர் மீண்டும் பிரசாத் ஸ்டூடியோவுக்கே வந்து இந்தப் பாடலை ஒலிப்பதிவு செய்தார்களாம். ஸ்டூடியோவில் எந்த நேரமும் மியூசிக் கண்டக்டர் என்று ஒருவர் இருப்பார். அவர் இசை அமைக்கும் போது கை அசைத்துக் கொண்டே இருப்பார்.

Read Also : கோடிகளை கொட்டி கொடுத்தாலும் செய்ய மாட்டேன்!. விஜயகாந்த் கடைபிடித்த 5 விஷயங்கள்..

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அதற்கு ஏற்றவாறு இசைக்கலைஞர்கள் இசையை வாசிக்கத் தொடங்குவார்கள். ஆனால் இந்தப் பாடலின் போது இசைக்கு மயங்கி அவர் கை அசைக்கவே இல்லை. இசைக்கலைஞர்களும் வாசிக்கவில்லை. இளையராஜாவும் என்ன ஆச்சு என்று கேட்டார். டியூனில் என்னை மறந்து விட்டேன் என்று சொன்னாராம். அதன்பின் அந்த பாடலை ஜானகி பாடுகையில், பிள்ளை பெறாத பெண்மை தாயானது… அன்னை இல்லாத மகனைத் தாலாட்டுது என்று அந்தப் பாடலில் வரும் வரிகளைப் பாடும்போது பாட முடியாமல் மெய்மறந்து அழுது கொண்டே நிறுத்தி விட்டாராம்.

என்ன ஆச்சு என இளையராஜா கேட்க, இந்த இசையும், வரிகளும் என்னை ஏதோ செய்கிறது என்று சொன்னாராம் ஜானகி. பின்னர் சிறிது நேரம் ஓய்வு எடுத்த பிறகு ஜானகி மீண்டும் அந்த பாடலை பாடி முடித்தாராம். இந்தப் பாடலைப் போலவே எனக்கும் ஒரு பாடல் வேண்டும் என்று இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் தன்னுடைய பயணங்கள் முடிவதில்லை படத்திற்காக இளையராஜாவிடம் கேட்டாராம். அப்படி உருவான பாடலே மணியோசை கேட்டு எழுந்து. இப்பாடலையும் ஜானகி தான் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories