Friday, July 11, 2025
Homeபொழுதுபோக்குஇயக்குனர் அமீர் நெகிழ்ச்சி !!! நான் தரேன் 50 லட்சம் தானா… அள்ளிக்கொடுக்கும் கேப்டனின் குணம்...

இயக்குனர் அமீர் நெகிழ்ச்சி !!! நான் தரேன் 50 லட்சம் தானா… அள்ளிக்கொடுக்கும் கேப்டனின் குணம் !

Date:

- Advertisement -

captain character : மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல் முழு அரசு மரியாதையுடன் தேமுதிக கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்கில் 200 நபர்கள் மட்டும் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

தமிழக அரசின் சார்பாக தா மோ அன்பரசன், மா சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று கூறிய நிலையில், முதல்வர் முக ஸ்டாலின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டார்.இதையடுத்து, புரட்சி கலைஞர் கேப்டன் என்று பொறிக்கப்பட்ட சந்தன பேழையில் தமிழ் முறைப்படி இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

captain character
captain character

இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தங்கமான குணம் பற்றி இயக்குனர் அமீர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் மரணம் வருவது இயற்கையானது அதை தவிக்க முடியாது.பல மரணம் நமக்கு தகவல், சில மரணம் ஏன் நடந்தது என்று நம்மை வருத்தம் அடைய செய்யும் அப்படியெந்த இரத்த சம்பந்தமும், சொந்தமும் இல்லாதவர்களின் இறப்பு ஏன் நடந்தது என்று நம் மனம் கேட்டுக்கொண்டே இருக்கும் அப்படி ஒரு மரணம் தான் விஜயகாந்த் மரணம் அடைந்தது.அவர் உடல் பாதிக்க பட்டு இருக்கிறார்,

Read Also : திருவாவடுதுறை ஆதீனத்தில் புத்தக வெளியீட்டு விழா

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

நம்மைவிட்டு என்றாவது சென்று விடுவார் என்று நம் அறிவிற்கு தெரிந்தாலும் அந்த செய்தியை ஏற்க மனம் மாறுகிறது. என் மைந்தர் என்பதால் மதுரையில் அவரை நான் தூரத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். அதன் பின் என்னுடைய முதல் படமான மௌனம் பேசியதே படம் வெளியான போது அவரை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு அவர் வீட்டிற்கு ஒருமுறை சென்றேன் அப்போது எனக்கு பணியாட்கள் காபி கொண்டுவந்தார்கள்.

captain character | கேப்டனின் குணம் !

அவர்களை திருப்பி போக சொல்லிவிட்டு பிரேமாவை காபி எடுத்துவரச்சொல் என்றார். அதை பார்த்தவுடன் நான் வியந்து போனேன். நான் அந்த சம்பவத்தை என்றுமே மறக்கமாட்டேன். அதேபோல் விஜயகாந்தின் அரசியல் வருகை பற்றி முதன் முதலில் நான் தான் பேட்டி அளித்தேன். அதில் அரசியலுக்கு விஜயகாந்த் வருவார், அவர் ஒரு தவிக்க முடியாத சக்தியாக மாறுவார் என்பதை சொன்னேன். நான் அன்று கவனிக்க படாத ஒருவராக இருந்ததால், இதை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அதே போன்று தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு பிரச்சனை நடந்தது. அதில், ஏதோ ஒரு ஒப்பந்தம் போடப்பட்டு அது பல வருடங்களாக செயல்படாததால், பணம் கொடுத்த தயாரிப்பாளர் பணம் கேட்டு வந்தார். அப்போது விஜயகாந்த் பணம் தந்த தயாரிப்பாளர் கஷ்டத்தில் இருக்கிறார். அவருடைய பணம் நமக்கு எதற்கு, தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு பணத்தை கொடுத்தால் நல்லதாக இருக்கும் என்றார். அது எப்படி தரமுடியும் என்று வாக்குவாதங்கள் ஏற்பட, கடைசியில் விஜயகாந்த் 50 லட்சம் ரூபாய் தானே அதை நான் தருகிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போய்விட்டார் என்று விஜயகாந்தை பற்றி இயக்குனர் அமீர் பேசினார்.

Read Also : கமல்ஹாசன் நடித்ததில் சிறந்த ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படங்கள்!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories