Vanamutty Perumal : மயிலாடுதுறை அருகே 14 அடி உயரம் கொண்ட ஒரே அத்திமரத்தாலான கோழி குத்தி வானமுட்டி பெருமாள் ஆலையத்தில் சொர்க்கவாசல் திறப்பு : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள கோழிகுத்தி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீதயாலெட்சுமி சமேத ஸ்ரீசீனிவாச பெருமாள் என்கிற வானமுட்டி பெருமாள் ஆலயம் இருக்கிறது. அதனுள் ஒரே அத்தி மரத்தால் 14 அடி உயரத்தில் மூலவர் சிலை அமைந்துள்ள இந்த கோயில் பிப்பல மகரிஷிக்கு இறைவன் விஸ்வரூபமாக காட்சி கொடுத்த இடமாகும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Read Also : வெள்ள மீட்பு பணி செய்த மாரி செல்வராஜ்

Vanamutty Perumal ஆலையத்தில் சொர்க்கவாசல் திறப்பு
சனிக்கவசம் பாடப்பட்ட இந்த கோயிலில் வழிபாடு செய்தால் கோடிகத்தி தோஷம், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பதால் இந்த ஊர் கோடிஹத்தி பாப விமோசன தலம் என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி கோழிகுத்தி என்று தற்போது அழைக்கப்படுகிறது. புகழ் பெற்ற இந்த கோயிலில் இன்று வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
பரமபத வாசலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தார். பின்னர் மூலவர் வானமுட்டி பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தார்கள்.
Watch video : நான் எதுக்காக பேட்டி கொடுக்கணும் – நடிகை கனகா!
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇