நடிகர் பிரவுவின் மகளான ஐஸ்வர்யாவை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தன் மருமகனான ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பிரபு பல கோடிகளை வரதட்சணையாக வாரி கொடுத்துள்ளார்.
2015 ஆம் வருடம் வெளிவந்த திரிஷா இல்லனா நயன்தார படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தை சிம்புவை வைத்து இயக்கினார்.அந்த படம் தோல்வி படமாக அமைந்தது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அதன் பிறகு பிரபு தேவாவை வைத்து பகிர என்ற படத்தை இயக்கினார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதை அடுத்து, அண்மையில் விஷால், எஸ் ஜெ சூர்யா நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் 100 ரூபாய் கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. டைம் ட்ராவல் கதையை மையமாக கொண்டு உருவான இந்த திரைப்படத்தில் எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
அஜித்தை வைத்து அடுத்த படம் இயக்கவுள்ள நிலையில், நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம் செய்துகொண்டார். சென்னையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் இயக்குனர் மணிரத்தினம், நடிகர் விஷால், சுஹாசினி, லெஜண்ட் சரவணன், துல்கல் சல்மான், குஷ்பூ, சுந்தர். சி என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இவர்களின் திருமணப் புகைப்படம் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஐஸ்வர்யாவிற்கு நடிகர் பிரபுவின் சகோதரியின் மகன் குணாலுடன் திருமணம் நடைபெற்றது. குணால் லண்டனில் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார். அவரோடு பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவும் தன் கணவரோடு லண்டனில் செட்டில் ஆனார். ஆனால் இருவருக்கும் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
Aishwarya Prabhu Adhik Ravichandran Wedding
விவகாரத்திற்கு பின் மீண்டும் சென்னைக்கு வந்த பிரபுவின் மகள் ஐஸ்வர்யா கேக் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்தார். இவர் மெல்ட்ஸ் டெசர்ட் (meltz.dessertz) என்ற நிறுவனத்தையும் நடத்திவருகிறார். இந்த நேரத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு ஐஸ்வர்யாவிற்கும் நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்தது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

தற்போது சிவாஜி குடும்பத்தில் ஒருவராக இணைந்து இருக்கும் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு சொகுசு பங்களா மற்றும் நகை என கோடி கோடியாக வரதட்சணைகள் கொடுத்துள்ளதாக தகவல்கள் பரபரப்பாக வெளியாகிவுள்ளது. ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான ஐஸ்வர்யாவுக்கு வயது 42 என்றும் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு தற்போது 32 வயதாகிறது.
SUBSCRIBE V TAMIL LIFESTYLE OFFICIAL CHANNEL | CLICK HERE |
---|---|
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | வி தமிழ் செய்தி |
சமையல் குறிப்பு சம்மந்தமான அனைத்து பதிவுகளையும் இங்கு காணலாம் –> | ஆனந்தி சமையல் |