Friday, July 11, 2025
Homeவிவசாயம்Clove Cultivation : நறுமணமுள்ள பயிரான கிராம்பு சாகுபடி செய்யும் முறை ..

Clove Cultivation : நறுமணமுள்ள பயிரான கிராம்பு சாகுபடி செய்யும் முறை ..

Date:

- Advertisement -

Clove Cultivation : ஒரு நறுமனம் கொண்ட பொருள் கிராம்பு என்று அனைவருக்கும் தெரிந்ததுதான். இதை அசைவ உணவுகளில் அதிகமாக பயப்படுத்தப்படுகிறது. மேலும் ஏராளமான மருத்துவ குணங்கள் கிராம்பில் நிறைந்துள்ளது.

இதை சித்தமருத்துவங்களில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இத்தனை பயன்களை கொண்டுள்ள கிராம்பினை பயிரிட்டு விவசாயிகள் அனைவரும் அதிக லாபம் பெறலாம். கிராம்பு ஒரு வெப்பமண்டலத்தில் பயிரடக்கூடிய பயிராகும். நல்ல வெதுவெதுப்பான ஈரப்பதம் இருக்கிற சூழ்நிலை உள்ள இடத்தில் கிராம்பு நன்றாக வளரும் தன்மை கொண்டது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Clove Cultivation
Clove Cultivation

மழை அளவு – Clove Cultivation

கிராம்பு சாகுபடிக்கு பொறுத்த வரையில் வருடத்திற்கு மழையின் அளவு 150 செ .மீ லிருந்து 200 செ.மீ வரை தேவைப்படுகிறது.

வெப்பநிலை : Clove Cultivation

கிராம்பு மகசூலை பொறுத்த வரை வெப்பநிலை 20-30 டிகிரி செல்சியஸ் இருக்கும் நிலத்தில் கிராம்பு சங்கு வளரும். கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரம் அளவு கிராம்பு செடி வளரும். அதாவது மலைப்பகுதிகளில் கிராம்பு செடிகள் நன்றாக வளரும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

நிலம் – Clove Cultivation

கிராம்பு சாகுபடியை பொறுத்தவரை வடிகால் வசதி உள்ள மணல் கலந்த களிமண் கொண்ட நிலந்தான் இந்த கிராம்பு சாகுபடிக்கு உகந்தது.

நடவு : Clove Cultivation

கிராம்பு சாகுபடி செய்வதற்கு முதலில் மேட்டுப்பாத்திகளை அமைத்து கொள்ளவேண்டும். கிராம்பு விதைகளை 2 செ.மீ. இடைவெளி விட்டு அந்த விதைகளை விதைக்க வேண்டும்.அந்த விதைகள் நான்கு அல்லது ஐந்து இலைகள் வரும் வரை நிழலில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அனைத்து விதைகளும் பத்து அல்லது பதினைந்து நாட்களில் முளைத்து விடும். சிறிய பாலிதீன் பைகளில் முளைத்த விதைகளை ஒரு பைக்கு ஒன்று வீதம் நடவு செய்ய வேண்டும். ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் நாற்றுகளை பெரிய பாலிதீன் பைகளில் மாற்றி நடவு செய்யவேண்டும்.

18 முதல் 24 மாதம் வயது வளர்ந்துள்ள நாற்றுக்களை 6 மீட்டர் இடைவெளி விட்டு 75 x 75 x 75 செ.மீ. குழிகளில் நடவேண்டும்.பருவகால மழை ஆரம்பித்த உடன் நாற்றுகளை நடவு செய்வது மிகவும் நலமாகும். நிழலில் வளரக்கூடிய இந்த பயிரை தேயிலை, தென்னை, காப்பி ஆகிய பயிர்களின் இடையில் ஊடுபயிராகவும் பயிரிடலாம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Read Also : 26 வயதில் நிமிர்ந்து நிற்கும் நிமிஷா சஜயன் என்னமாதிரி நடிப்பு … தங்கம் சார் !

உரங்கள் : Clove Cultivation

ஒரு வயது நிரப்பிய கிராம்பு செடிகளில் செடி ஒன்றுக்கு 15 கிலோ மக்கிய தொழு உரம், 20 கிராம் மணிச்சத்து, 20 கிராம் தழைச்சத்து 60 கிராம் சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய ரசாயன உரங்களை இரண்டு பகுதிகளாக பிரித்து செப்டம்பர், அக்டோபர் இந்த மாதங்களில் இடவேண்டும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஏழு வயதான மரத்திற்கு 50 கிலோ தொழு உரம், 300கிராம் மணிச்சத்து, 300 கிராம் தழைச்சத்து, 960 கிராம் சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய ரசாயன உரங்களை போடவேண்டும்.

நீர் மேலாண்மை :

மழை இல்லாத காலங்களில் இளம் செடிகளுக்கு தேவை படுகிறபோது தண்ணீர் இறைப்பது அவசியமாகும். வளர்ச்சி அடைந்த மரங்களுக்கு அவ்வப்போது நன்கு தண்ணீர் பாய்ச்சுவது மிகவும் அவசியம்.இவ்வாறு செய்வதன் மூலம் அதிக காய்ப்புத்திறன் அதிகமாகும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

களை நிர்வாகம் :

கிராம்பு மரத்தில் அடர்ந்து வளர்த்திருக்கிற, பக்கவாட்டு கிளைகளில் சிலவற்றை கவாத்து செய்ய வேண்டும். மரத்தினை சுற்றி களைகள் எடுத்து, அதனை சுற்றி காய்ந்த சருகுகளை மேலாக பரப்பி, மண்ணின் ஈரத்தன்மையை பாதுகாக்க வேண்டும்.

கிராம்பு சாகுபடி – அறுவடை

நான்காவது வருடத்திலிருந்து அறுவடை செய்யலாம். கிராம்பு பூக்கள் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை பூக்கள் பூக்க தொடங்கும். பூ பூத்த ஆறு மாதங்களில் பூ மொக்குகள் பச்சை நிறத்திலிருந்து இளம் சிகப்பு நிறங்களாக மாறும். அந்த சமயம் பூக்கள் இதழ் விரிய தொடங்குவதற்கு முன்பாக பறித்து விட வேண்டும்.கொத்து கொத்தாக இருக்கும் எல்லா மொட்டுகளையும் பறித்து விட வேண்டும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

கிராம்பு சாகுபடி _ மகசூல் :

அறுவடை செய்த மறுநாள் வெயிலில் ஆறு நாட்கள் நன்கு உலரும் வரையில் காயவைக்க வேண்டும். மரம் ஒன்றுக்கு சுமார் மூன்று கிலோ வரை உலர்ந்த கிராம்பு மகசூலாகும்.

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories