Friday, July 11, 2025
Homeபொழுதுபோக்குமறைந்தும் வாழ வைத்த டேனியல் பாலாஜி! கண் கலங்க வைத்த சம்பவம்!!

மறைந்தும் வாழ வைத்த டேனியல் பாலாஜி! கண் கலங்க வைத்த சம்பவம்!!

Date:

- Advertisement -

30/03/2024 அன்று காலையிலேயே இது போல ஒரு செய்தியை கேட்போம் என்று எவரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டோம். வில்லனாக நிறைய படங்களில் மிரட்டிய டேனியல் பாலாஜி 30/03/2024 லில் உயிர் நீத்துள்ளார்.

48 வயதே ஆன இவர் 29 ஆம் தேதி மாரடைப்பின் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை மருத்துவர்கள் சிகிச்சை செய்தும் காப்பாற்ற முடியவில்லை.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Actor Daniel Balaji
Actor Daniel Balaji

அவரது மறைவு செய்தியானது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர வைத்திருக்கிறது. அவருடைய இழப்பானது தாங்க முடியாத இழப்பு, அவரது மறைவிற்கு கனத்த வருத்தத்துடன் அனைத்து நட்சத்திரங்களும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : உங்கள் வீட்டில் இதை ஒரு முறை செய்து பாருங்கள்… அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்…

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

கண்தானம் செய்த டேனியல் பாலாஜி | Actor Daniel Balaji

இந்த சூழலில் இவர் தன் கண்களை தானம் செய்து வைத்துள்ளார். இதை அறிந்த அனைவரையும் வியக்க வைத்துள்ளது. உயிருடன் இருந்த போது பல நல்ல விஷயங்களை செய்து வந்துள்ளார். ஆனால் இறந்த பிறகும் முகம் தெரியாத யாரோ ஒருவரை வாழ வைத்திருக்கிறார்.

அதன்படி இவருடைய இறப்பை உறுதி செய்த கொண்ட மருத்துவர்கள், அவருடைய கண்களை அறுவை சிகிச்சை மூலம் எடுத்தனர். அதன் பிறகு அவருடைய உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

மேலும் மருத்துவர்கள் கண் இருந்த பகுதியை துணியால் கட்டி கண்ணாடி அணிவித்துள்ளனர். இப்படி அவருடைய உடல் கண்ணாடி பேழைக்குள் இருப்பதை பார்த்த அனைவரது மனது கனத்து தான் போகிறது.

அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த அதர்வா, விஜய் சேதுபதி போன்ற நட்சத்திரங்கள் பலரும் குவிந்து வருகின்றனர். இறந்தும் தன் கண்கள் மூலம் உலகத்தை பார்க்க வேண்டும் என கண் தானம் செய்துள்ள டேனியல் பாலாஜியின் ஆத்மா சாந்தி அடைய நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : ஒன்று இணைந்த 2 லேடி சூப்பர் ஸ்டார் நடிகைகள்.. க்யூட் போட்டோக்கள்..!

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories